சண்டைகளைத் தாண்டி கணவன் - மனைவி மனதில் அன்பை வளர்க்கும் எளிய வழி முறைகள்!

கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வராமல் இருக்கவும், உறவை பலப்படுத்தவும் உதவும் எளிய மற்றும் பயனுள்ள வழிகள்.
கணவன் - மனைவி | Husband and Wife
கணவன் - மனைவி | Husband and WifeImage Credits: Christie Nallaratnam
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on
MM strip
MM strip

கணவன் - மனைவி இடையேயான உறவு என்பது சண்டைகளும் சமாதானமும் நிறைந்த ஒரு அழகான பயணம். 'சண்டையே இல்லாத வாழ்க்கை' என்று ஒன்று இருந்தால், அங்கு உண்மையான சுதந்திரமோ அல்லது வெளிப்படைத்தன்மையோ இருக்காது என்பதே நிதர்சனம். எதிரெதிர் துருவங்களாக இணைந்திருக்கும் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான்; ஆனால், அதை எவ்வாறு கையாள்வது என்பதில் தான் இல்லறத்தின் வெற்றியே அடங்கியுள்ளது. அந்த இனிமையான இல்லற வாழ்வுக்கான எளிய ரகசியங்களை இந்தக் கட்டுரையில் முழுமையாகப் படிக்கலாம்.

கணவன்- மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வருவது இயல்புதான்..

சண்டை இல்லாத சமாதான வாழ்வு என இருந்தால் யாரோ ஒருவர் இன்னொருவருக்குத் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்து அடிமையாக வாழ்கிறார் என்று அர்த்தம்.

இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதால் தான் ஈர்க்கப்பட்டு கணவன்- மனைவி என்ற உறவில் வாழ உடன்பட்டுள்ளனர்.

பலவற்றில் அதிக பட்ச வேற்றுமைகள் இருவருக்குள்ளும் இருக்கும். இருவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது.

இதைப் பிரச்சினையாக பார்க்காமல் இதுதான் இயல்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

புரிதல் இல்லாதது:

கணவன் - மனைவிக்குள் பெரும்பாலான பிரச்னைகள் உருவாவதற்குப் புரிதல் இன்மைதான் காரணமாக உள்ளது.

வாழ்க்கைத் துணை வாய் திறந்து சொல்லாத ஒரு விஷயத்தைப் பற்றித் தவறாக யூகம் செய்வது, சொல்லும் ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொள்வது, எந்த ஒரு விஷயத்தைப் பற்றி தவறாக பேசும் போதும் தெளிவான மன நிலையுடன் இருவரும் கண்களைப் பார்த்து மெதுவான குரலில் அமைதியான முறையில் உரையாடலைத் தொடங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இரட்டைக் குழந்தைகளில் யார் மூத்தவன்? குழாயும் பால்ரஸ் குண்டுகளும் மாற்றிய தீர்ப்பு!
கணவன் - மனைவி | Husband and Wife

ஒருவர் சொல்லும் போது மற்றவர் குறுக்கிட்டு பேசக்கூடாது.

முதலில் ஒருவர் சொல்வதை மற்றவர் காது கொடுத்து கேட்க வேண்டும்.

அவர் சொல்வதில் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவரது கேரக்டரை மாற்ற முயற்சி செய்யக் கூடாது. புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டால் 24 மணி நேரத்துக்குள் சகஜ நிலைக்கு வந்து விட வேண்டும்.

நாட்கணக்கில் மாதக் கணக்கில் பேசாமல் இருப்பது போன்ற வழக்கம் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் இருக்கக் கூடாது.

பிடித்த விஷயங்களை பேச வேண்டும்:

கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு குடும்பங்களில் இருந்து வருகின்றனர்.

இருவருமே வேறு வேறு குடும்பத்தில் இருந்து வருகின்றனர்.

வேறு வேறு இடத்தில் மலர்ந்திருப்பார்கள்; ஒரு விஷயம் கணவரின் மனதை பாதித்திருக்கலாம்; அது அவர் வளர்ச்சி இருக்கலாம் அதனால் தான் கோபம் கொள்கிறார் என அவர் உணர்வுகளை புரிந்து கொள்ள கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கணவன் - மனைவி | Husband apologized to wife
கணவன் - மனைவி | Husband apologized to wife

அதேபோல மனைவி ஒற்றைக் குழந்தையாக வளர்ந்து இருக்கலாம். அதனால் கோபம் கொள்ளலாம். தனது கோபத்தை கணவரிடம் காட்டும் போது அதற்கான காரணத்தை புரிந்து கொண்டு மனைவியை தேற்ற வேண்டும். இருவரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு பாராட்டிக் கொள்ளலாம். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் 15 நிமிடங்களாவது இருவரும் அமர்ந்து பேச வேண்டும்.

அன்றைய நாள் பற்றியோ தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பற்றியோ பேசினால் பிரச்சனை தீரும்.

ஒருவருக்கொருவர் உதவி செய்தல்:

நான் மனைவியின் தனிப்பட்ட முறையில் தன்னை வளர்த்துக் கொள்வது சில விளக்குகள் இருக்கும் படிப்பு, வேலை, தனித் திறமை, கனவு இப்படி ஏதாவது ஒன்று அவர்களுக்கான இலக்கை நிர்ணயிக்க காரணமாக இருக்கலாம்.

திருமணத்துக்குப் பின் படிக்க ஆசைப்படலாம்; ஹெல்த், பிட்னஸ், கார்டனிங் என எதுவாகவும் இருக்கலாம்.

இது இருவரும் பரஸ்பரமாக உதவி செய்யலாம்.

குற்றம் சொல்வது, உன்னால் முடியாது என தடுப்பது, நீ வேஸ்ட் என வெறுப்பது போன்றவை கணவன்- மனைவி உறவைக் கசப்பாகி விடும்.

இதனால் உதவிக் கொண்டு இருவரும் பர்சனலாக வளர்வது மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

அன்பு காட்டுங்கள்:

ஒரு சில ஆண்கள் தன் மனைவியை குறை கூறுவது, எல்லாப் பிரச்னைக்கும் நீ தான் காரணம் என்று குற்றம்

சாட்டுவது, கசப்பான மனநிலையை உருவாக்கும். இதனால் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

பிரச்சனை வரும் போது இருவரும் அதற்குப் பொறுப்பேற்று அவரவர் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

யார் ஜெயிப்பது என்பது முக்கியமில்லை; போட்டி பொறாமை இன்றி பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நிறப் பாகுபாடு தரும் வலி தெரியுமா? நம் அறியாமையில் உடையும் மனித மனங்கள்!
கணவன் - மனைவி | Husband and Wife

கணவன் மனைவி உறவு கொள்வது தான் ஈகோ தலை தூக்குகிறது; பிற உறவுகளோ, நண்பர்களோ சின்ன சின்ன தவறு செய்யும்போது விட்டுக் கொடுக்கும் மனம், வாழ்க்கைத் துணை என்று வந்து விட்டால் மட்டும் போர்க்களமாகி விடுகிறது.

இருவரும் மதிப்புக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் போதுதான் அந்த உறவு வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். ஒருவர் மீது மற்றவர் அன்பு காட்டுவதில் போட்டி போடுங்கள். இந்த சண்டைகள், கோபங்கள் எல்லாம் வெடிக்காத பட்டாசுகளாக மாறிவிடும்.

இதைப் பிரச்சினையாக பார்க்காமல் இதுதான் இயல்பு என்று புரிந்து கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் கணவன்- மனைவி வாழ்க்கை இனிக்கும் உறவுகளாக அமையும்.

கணவன் மனைவி உறவில் ஈகோவைத் தாண்டி பரஸ்பர புரிதலையும் அன்பையும் வளர்த்து, வாழ்நாள் முழுவதும் இனிமையான பிணைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலை வாசகர் பெறுவார்.

logo
Kalki Online
kalkionline.com