இனி சமையல் சுலபம்! நேரத்தை மிச்சப்படுத்தும் அசத்தலான 20 கிச்சன் டிப்ஸ் இதோ!

குடும்பத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சமையலை சுலபமாக்கவும் உதவும் பயனுள்ள குறிப்புகள்.
சமையல் குறிப்புகள்|Cooking tips
சமையல் குறிப்புகள்|Cooking tipsImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

இயற்கை உணவுகள் மூலம் உடல்நலனை மேம்படுத்தவும், சமையலில் புதுமைகளைப் புகுத்தவும் உதவும் அருமையான சமையல் குறிப்புகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

1. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் அல்லது தேன் அல்லது பாலில் நெருஞ்சில் முள் பொடியை ஒரு டீஸ்பூன் கலந்து சாப்பிட்டு வர நீர் எரிச்சல், நீர்க்கட்டு போன்ற சிறுநீரக பிரச்சனைகள் சரியாகும்.

2. பொன்னாங்கண்ணி இலையை பொடி பண்ணி சாப்பிட உடல்சூடு தணியும்.

3. நெய் பித்தத்தை குறைத்து, நஞ்சை முறித்து, பார்வைத் திறனை அதிகரிக்கிறது.

4. வளரும் ஆண் பிள்ளைகளுக்கு ஜாதிக்காய் பால், முருங்கைக்கீரை பொரியல், முருங்கைப்பூ துவட்டல், பசலைக்கீரை உணவுகளை கொடுத்து வர உடல் மெலிதல், உடல் சூட்டினால் தேக வளர்ச்சி குறைவது போன்றவை நீங்கும்.

5. செவ்வாழை, பசலைக்கீரை போன்றவை இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்து விந்தணுக்கள் குறைபாடு‌ இருந்தால் அதை சரி செய்யும்.

6. வெற்றிலை சாறுடன், மிளகுப் பொடி சேர்த்து அருந்த தொண்டைக் கட்டு இருமல் குணமாகும்.

7. இஞ்சியை‌ தோல் சீவி விட்டு தயிரில் போட்டு வைக்க தயிர்‌ நீண்ட‌ நேரம் புளிக்காது.

8. கீரை வேக வைத்த தண்ணீரில் சோளமாவு கொஞ்சம் கரைத்து, மிளகு, உப்பு சேர்த்து கலந்து வெண்ணையில் தக்காளி, வெங்காயம் வதக்கி சேர்த்து கொதிக்க விட்டு இறக்க கீரை சூப் சுவையாக இருக்கும்.

9. கோதுமையை கஞ்சியாக அடிக்கடி சேர்த்துக் கொள்ள உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து விடும். அதிகப்படியான ரத்தப் போக்கை குறைக்க வல்லது.

10. புளியை, உப்பை பீங்கான் ஜாடியில் வைத்தால் கருக்காது. உப்பு ஈர கசிவின்றி நன்றாக இருக்கும்.

11. சூடான தோசைக்கல்லில் அப்பளத்அப்பளம்தை போட்டு சுத்தமான துணியால் இருபுறமும் அழுத்தி பொரிக்க, ஒரே மாதிரியாக பொரிந்து உப்பி வரும்.

12. குழம்புக்கு தாளிக்கும் வடகத்தை மிளகாய், உப்பு, புளியோடு துவையலாக அரைத்து புளிசாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மாம்பழத் தோலை குப்பையில் வீசுவீர்களா? இனி வேண்டாம்! இதோ 5 அற்புத பயன்கள்!
சமையல் குறிப்புகள்|Cooking tips

13. லன்ச் பாக்ஸ் இரண்டு செட் வைத்துக் கொண்டால் முதல்நாள் உபயோகித்ததை கழுவிவைத்துவிட நன்கு காயும். இரண்டாவது செட் ல் எடுத்துக் கொண்டு போகலாம்.இவ்வாறு மாற்றி எடுத்து செல்ல உணவுகள் சுவை கெடாமல் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.

14. மதிய உணவிற்கு குழம்பு, ரசம் என கொடுத்தனுப்பும் போது தனியாக கொடுத்து விட, சாப்பிடும்போது ஊற்றி சாப்பிட சரியாக இருக்கும்.

15. பச்சை பட்டாணி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றை ஊறவைத்து வேகவைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ள காய் அரிய நேரமில்லாத போது குழம்பாகவோ, சைட் டிஷ் ஆகவோ தயாரிக்க எளிதாக இருக்கும்.

16. வத்தக் குழம்பு பேஸ்ட், வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வதக்கி அரைத்த பேஸ்ட் வைத்துக் கொள்ள குருமா, சைட் டிஷ் செய்ய ஈஸியாக இருக்கும்.

17. பிரெட் டோஸ்ட் செய்யும் போது காய்கறி கிரேவி தடவி, முட்டை ஆம்லெட் வைத்து மற்றொரு ப்ரெட் வைத்து டோஸ்ட் பண்ணி கொடுக்க சுவையோடு, சத்தும் சேரும்.

18. சப்பாத்தி கொடுத்து விடும்போது ஸ்டஃப்டு சப்பாத்தியாக கொடுக்க சைட் டிஷ் தேவைப்படாது.

19. முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்றவற்றை பொரியல், வறுவல் என செய்வதை விட ப்ரைடு ரைஸாக அதில் சேர்த்து செய்து கொடுத்து விட மிச்சமில்லாமல் சாப்பிட்டு விடுவர்.

இதையும் படியுங்கள்:
ஊறவைக்க வேண்டாம், அரைக்க வேண்டாம்! 30 நிமிடத்தில் மொறுமொறு 'மத்தூர் வடை' செய்வது எப்படி?
சமையல் குறிப்புகள்|Cooking tips

20. இட்லிக்கு வழக்கமான சாம்பார், துவையல், சட்னி தயாரிப்பது போல கொள்ளு பொடி, நவதானிய பொடி, பிரண்டை பொடி என எண்ணைக் சேர்த்து கொடுக்க சுவையோடு சத்தும் சேரும்.

21. இரவு உணவை சமச்சீரான உணவாக வெரைட்டியாக செய்து கொடுக்க அவர்களது ஆரோக்கியம் மேம்படும். படிப்பு திறனும் அதிகமாகும்.

22. அத்திப்பழ ஸ்மூதி, டேட்ஸ் ரோல், குல்கந்து என ஸ்நாக்ஸுக்கு கொடுத்தனுப்ப விரும்பி சாப்பிடுவர். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் செய்து கொடுத்து பலன் பெறுவதை தொகுத்து எழுதியுள்ளேன். நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே...

logo
Kalki Online
kalkionline.com