திருமணத் தடையை நீக்கும் 1300 ஆண்டுகள் பழமையான தர்மபுரி கோட்டை கோவில்!

1300 ஆண்டுகள் பழமையான தர்மபுரி கோட்டை கோவில் தொங்கும் தூண் அதிசயம், சூலினி துர்க்கை மற்றும் கல்யாண காமாட்சி அம்மன் அருள் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
தர்மபுரி கோட்டை கோவில் | Dharmapuri Kottai Kovil and Kalyana Kamatchi Amman
தர்மபுரி கோட்டை கோவில் | Dharmapuri Kottai Kovil and Kalyana Kamatchi AmmanImage credit: Chatgpt
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on: 
MM strip
MM strip

ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் ரகசிய சூலினி துர்க்கை அம்மன்... 2000 கிலோ எடையில் தரையைத் தொடாமல் தொங்கும் அதிசயத் தூண்கள்... மதுரையைத் தவிர வேறு எங்கும் காண முடியாத கால் மாறி ஆடும் நடராஜர் என்று பல நூற்றாண்டுகள் கடந்தும் வியக்க வைக்கும் ஆன்மீக ரகசியங்களைத் தன்னுள் கொண்டுள்ள தர்மபுரி கோட்டை கோவில் பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல்களை இக்கட்டுரையில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்!

தர்மபுரி கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாணபுரீஸ்வரர் கோவில் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் உடன் உரை கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் தர்மபுரி கோட்டை கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. தர்மபுரியை ஆண்ட மன்னர்களால் பழங்காலத்தில் கட்டப்பட்ட இத்தலம் பல நூற்றாண்டுகள் பழமையானது.

தர்மர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் தர்மபுரி என பெயர் ஏற்பட்டது.

இந்த கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள அந்தரங்கத்தில் தொங்கும் தூண் மற்றும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். இறைவன் மல்லிகார்ஜனேஸ்வரர் இறைவனின் பெயர் கல்யாண காமாட்சி.

பஞ்ச பாண்டவர்களின முதல்வரான தர்மர் 27 மூல மந்திரங்களால் வழிபட்ட துர்க்கை அம்மன் இங்கு உள்ளார்.

இங்குள்ள துர்க்கைக்கு சூலினி துர்க்கை என்று பெயர். மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் துர்க்கை காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
60 வயதை நெருங்கி விட்டீர்களா? வாழ்க்கையை அழகாக்கும் 7 புதிய முயற்சிகள்!!
தர்மபுரி கோட்டை கோவில் | Dharmapuri Kottai Kovil and Kalyana Kamatchi Amman

தமிழகத்தின் சூலினி துர்க்கைக்கு ஒரே கோவில் இங்கு தான் உள்ளது. வேறு எங்கும் கிடையாது. சூலினி துர்க்கையை வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் திரையிடப்பட்டு இருக்கும்.

வருடத்தில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை மட்டும் அம்மனை தரிசிக்க முடியும். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி தர்மர் இங்குள்ள சூலினி துர்க்கையை வழிபட்டு இழந்த ராஜ்ஜியத்தை திரும்ப பெற்றதாக வரலாறு.

இங்குள்ள கல்யாண அம்மன் கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. பெண்களை உயர்ந்தவர்கள் என்பதை உணர்த்த சுவாமி சந்ததியை விட அம்மன் சன்னதி சற்று உயர்வாக காணப்படுகிறது. இங்குள்ள காமாட்சி அம்மனை பார்த்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கிவிடும். திருமண தடை நீங்கும் கோவிலாக கருதப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள கோவில்களைப் போன்று இந்த கோவிலிலும் தொங்கும் தூண்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமை விசேஷமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.

தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடம் அதியமான் அரசாட்சி செய்த இடமாகும்.

அதியமான் வள்ளலாக இருந்ததால் இங்குள்ள காமாட்சியும் வள்ளல் போல அருள் புரிகிறாள்.

தர்மபுரி கோட்டை கோவில் | Kalyana Kamatchi amman
தர்மபுரி கோட்டை கோவில் | Kalyana Kamatchi amman Image credit: Gemini AI

சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக காணப்படுகிறார். அன்னை காமாட்சி ஆனந்த சுருபியாக காணப்படுகிறாள்.

ஒரு காலத்தில் இந்த இடம் தகடூர் என அழைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் சங்காபிஷேகம் நடைபெறும்.

கார்த்திகை மாதம் சிவன் அம்பாளை தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும். இந்தக் கோவிலில் உள்ள தொங்கும் தூண்கள் தரையில் படாதவாறு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தூண்களின் எடை 2000 கிலோ உள்ளது.

கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அஷ்ட திக்கு பாலகர்கள் இடையே ஆடும் நடராஜர் அருள் புரிகிறார். மதுரையை அடுத்து இங்கு தான் நடராஜர் கால் மாறி ஆடும் கோலத்தை பார்க்க முடியும். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.

இங்குள்ள அம்மன் சன்னதி சக்கரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது.

இதன் 18 மூலைகள்; அடி பாகத்தில் யானையின் தலை சிற்பம் காணப்படுகிறது.

18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கி நிற்பதாக ஐதீகம்.

தர்மபுரி கோட்டை கோவில் ஒரு தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

சிவனுக்கு 36 படிகள் உள்ளன. இது சிவ காமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது. விநாயகர் முருகனுக்கு தனி சன்னதிகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
அகண்ட நெற்றி அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருமா? சாமுத்ரிகா லட்சணம் கூறும் ரகசியம்!
தர்மபுரி கோட்டை கோவில் | Dharmapuri Kottai Kovil and Kalyana Kamatchi Amman

அம்பாள் சன்னதியில் 18 படிகள் ஏறி அம்பாளை தரிசிக்க வேண்டும்.

18 கல்யாண குணங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

அர்த்தமண்டபத்தில் சூலினி துர்க்கை காட்சி தருகிறான். இங்குள்ள சக்கர பைரவர் சனீஸ்வரருக்கு காட்சி தருகிறார்.

சூரிய மண்டலத்தில் சனீஸ்வரருக்கு தனிப்பெரும் சக்தி உருவாக காரணமாக இருந்தார் இங்குள்ள பைரவர். எனவே ஏழரை சனி, ஜென்ம சனி, கண்ட சனி இருப்பவர்கள் இங்குள்ள சக்கர பைரவரை வழிபட்டால் சனி தோசத்திலிருந்து நீங்கி விடுதலை பெறலாம்,

இக்கோவிலில் உள்ள அம்மனை வழிபடுவதன் மூலம் திருமண தடை உள்ளவர்கள் தடை நீங்கி திருமணம் நடைபெறுவதாக அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளனர். அதேபோன்று சனி தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெரும் கோவிலாக இந்த கோவில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com