பாலிவுட் மூத்த நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ப தற்காக தனது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஸ்வேதா பச்சனுடன் வந்தார். புகைப்படக்காரர்கள் நின்றிருந்த இடத்திற்கு ஜெயாபச்சன் வரவும், அவர்கள் கேமராவுக்கு போஸ் கொடுக்கும்படி கோரஸாக கேட்க, ஜெயா பச்சன் தனது கைவிரல்களை காதில் வைத்துக்கொண்டு “நான் காது கேட்காதவள் அல்ல. சும்மா கத்தாதீங்க. மெதுவா சொல்லுங்க! கேட்கும்!” எனக் கூறியவாறே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி சிரித்தவண்ணம் சென்றார். அபிஷேக்கும், ஸ்வேதாவும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஜெயாபச்சன் இவ்வாறு சொல்வது இது முதல் முறையல்ல என்றாலும், புகைப்படக்காரர்களுக்கும், இவரிடம் திட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டதென பாலிவுட்டில் பேசிக்கொள்கிறாள்.
ஜிந்தா பண்டா! ` 15 கோடி!
ஜிந்தா பண்டா...? ‘ஜவானி’ன் முதல் பாடல்தான் இந்த ‘ஜிந்தா பண்டா”. இப்பாடல் காட்சி 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் நடனக் கலைஞர்களுடன் ஷாருக்கான் நடனமாட சென்னையில் ஐந்து நாட்களுக்கும் மேல் படமாக்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான நகரங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, மிக பிரமாண்டமான அரங்கில் கொண்டாட்ட வடிவில் உருவான பாடல் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இப் பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார். கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல இசைக் கலைஞரான ராஜ குமாரியும் இந்தப் படத்தில் பாடியிருக்கிறார்.
‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் வழங்க, கவுரிகான் தயாரித்துள்ளார். கவுரவ் ஷர்மா இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ செப்டம்பர் 7 ஆந் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“ஜவான் ஜிந்தா பண்டா!”
மனாஜ் பாஜ்பாயின் உருக்கான பேச்சு!
பாலிவுட்டில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இந்தி வெப் சீரிஸ் ‘பேமிலிமேன்’ மூலம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் வெளியான அவரது கோர்ட் ரூம் தோடரான ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபிஹை” ரசிகர்களிடையே நல் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மனோஜ் பாஜ்பாய் சொத்து மதிப்பு ` 170 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் – “நான் பணத்துக்காக மட்டும் பணியாற்றுவது கிடையாது. சினிமா கிராஃப்ட் மிகவும் முக்கியமென நினைப்பவன். நல்ல படங்களின் மூலம் ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவது மட்டுமே இதற்கான கைமாறாக இருக்கும். இன்றும், வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட பணத்தைச் சேர்ப்பதற்கு கடுமையாகப் போராடி வருகிறேன். ‘அலிகார்’, ‘போன்ஸ்லே’ போன்ற பட வரிசைகள் மூலம் என்னால் அவ்வளவு பணத்தை ஈட்டுவதென்பது சாத்தியமில்லை. பொருளாதார ரீதியாக இன்னமும் நான் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
மாதம் ` 45 லட்சமா? – ஷாக்கிங் நியூஸ்!
` 45 லட்சமா? எதற்காக?
பாலிவுட் திரையுலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். இவருடைய ‘பதான்’ படம் ரூ 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்சமயம் அட்லீ இயக்கத்தில் உருவாகியள்ள ‘ஜவான்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷாருக்கான் குறித்து தெரியாத விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அப்படி வைரலாகி ஷாக்கிங் நியூஸ் தரும் தகவல்:
“ஷாருக்கான் தனது வீட்டிற்கு மாதத்திற்கு ` 45 லட்சம்வரை கரண்ட் பில் கட்டி வருகிறாராம்.”
இதைக்கேட்ட நெட்டிசன்களுக்கு ஒரே ஷாக்கிங். கரண்ட் ஷாக்கிங்!