பெண்களுக்கு அவசர உதவி: 181, 112, காவலன் செயலி எப்படிப் பயன்படுத்துவது?

பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உடனடி உதவி பெற உதவும் மிக முக்கியமான இலவச அவசர உதவி எண்களை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க...
அவசர எண்கள்
அவசர எண்கள்Gemini AI
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 
MM strip
MM strip

சில நேரங்களில் அனைவருமே ஏதாவது ஒரு நிலையில் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம். அப்போது யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். இம்மாதிரியான சூழலை எதிர்கொள்ளும் போது நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காகத் தான் அரசு சார்பில் பல இலவச உதவி எண்கள் உள்ளன.

அவசர காலங்களில் நீங்கள் இந்த உதவி எண்களைத் தொடர்பு கொண்டால், கூடிய விரைவில் உங்களுக்குத் தேவையான உதவி கிடைக்கும். ஏனெனில் ஸ்மார்ட்போன்கள் இன்று பெரும்பாலான பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் இருப்பதால், ஆபத்து காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த எண்கள் பெரும் உதவியாக இருக்கும்.

பொதுவாக 181, 112 எண் மற்றும் காவலன் SOS ஆகியவை பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உடனடி உதவி பெற உதவும் மிக முக்கியமான இலவச அவசர உதவி (அவசர எண்கள்) எண்களாகும். இவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க...

181- மகளிர் உதவி எண் (Women Helpline):

செல்போனில் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், ஷாப்பிங் ஆப், டேட்டிங் ஆப், மேம் ஆப் என பல ஆப்களை வைத்துள்ள இளம் தலைமுறையின் '181' என்ற எண்ணை சேமித்து வைத்துக் கொள்வதும் அவசியம்.

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரச்சினையில் இருக்கின்ற பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக, மகளிர் உதவி எண் 181 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கட்டணமில்லா தொலைபேசி எண்ணாகும்.

குடும்ப வன்முறை, பணியிடப் பாலியல் தொல்லை, பொது இடங்களில் அச்சுறுத்தல் அல்லது மனரீதியான பாதிப்புகளில் சிக்கியுள்ள பெண்களுக்கு 24 மணி நேரமும் இலவசமாக உதவுவதே இதன் நோக்கமாகும்.

சேவைகள்:

* காவல்துறை, மருத்துவமனை, சட்டம் மற்றும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' (One Stop Centre) போன்ற அவசர உதவிகளுக்கு உடனடியாக இணைக்கிறது.

* பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குகிறது.

* காது கேளாத மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சைகை மொழி மூலம் ஆன்லைன் அரட்டை (Live Chat) ஆதரவு உள்ளது.

* 181 இலவச தொலைபேசி சேவையைத் தொடர்புகொள்ளும் போது, புகார்களின் தன்மையும் வீரியமும் (தீவிரமானது / குறைந்த தீவிரமுடையது) வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

* 181 எண்ணை அழைத்துப் புகார் சொல்ல இயலாத நேரத்தில் https://tn181whl.org/tamil/ என்ற இணையதளத்திற்குச் சென்று அங்குள்ள Chat சேவையைப் பயன்படுத்தியோ இ ஃபார்ம் பயன்படுத்தியோ புகார் அளிக்கலாம்.

emergency helpline
emergency helplineAI image

112 - அவசர காலப் பதிலளிப்பு அமைப்பு (ERSS - Emergency Response Support System):

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியா முழுவதும் உள்ள ஒற்றை அவசர உதவி எண் ஆகும். அதாவது, 112 அவசர காலப் பதிலளிப்பு அமைப்பு (Emergency Response Support System - ERSS) என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகையான அவசரத் தேவைகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு ஒற்றை அவசர உதவி எண் அமைப்பு ஆகும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், தமிழ்நாடு காவல்துறை உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தற்போது முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளது.

112 அமைப்பின் முக்கிய அம்சங்கள்:

இதற்கு முன்பு தனித்தனியாக இருந்த காவல்துறை (100), தீயணைப்புத் துறை (101), மருத்துவ அவசர உதவி/ஆம்புலன்ஸ் (108) மற்றும் பெண்கள் பாதுகாப்பு (1090) போன்ற அனைத்து அவசர எண்களும் இந்த ஒரே எண்ணின்கீழ் (112) கொண்டுவரப்பட்டுள்ளன. உங்கள் கைபேசி அல்லது லேண்ட்லைன் மூலமாக நேரடியாக 112 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கேட்க முடியும்.

சேவைகள், பயன்படுத்தும் முறைகள்:

* ஸ்மார்ட்போன்களில் அதன் Power பொத்தானை (Power Button) தொடர்ந்து 3 முறை வேகமாக அழுத்துவதன் மூலம் அவசர சமிக்ஞையை (Panic Call) அனுப்பலாம்.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..!சென்னையில் நுழைந்த நவோனியா கொள்ளை கும்பல்.. பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!
அவசர எண்கள்

* ஆபத்தான தருணங்களில் காவல்துறை (Police), தீயணைப்பு (Fire & Rescue), மற்றும் மருத்துவ உதவி (Health) ஆகியவற்றை ஒரே அழைப்பில் பெறலாம்.

* சாதாரண பட்டன் போன்களில் (Feature phones) 5 அல்லது 9 ஆகிய எண்களை நீண்ட நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலமும் அவசர அழைப்பை விடுக்கலாம்.

* 112 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம் அல்லது 112 India என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தியும் உதவி கோரலாம்.

* எந்தவொரு மொபைல் அல்லது லேண்ட்லைன் எண்ணிலிருந்தும் 24/7 இலவசமாக அழைக்கலாம்.

* இந்த அமைப்பின் மூலம் நீங்கள் அழைக்கும் போது, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பம் உதவியுடன் நீங்கள் இருக்கும் துல்லியமான இருப்பிடம் கண்டறியப்பட்டு, மிக விரைவாக உங்களுக்கு அருகிலுள்ள மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்படுவர்.

* அவசர காலங்களில் பல எண்களை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்படும் பொதுமக்களுக்கு, நினைவில் கொள்ள வேண்டிய ஒரே இரட்சிப்பு எண்ணாக இந்த 112 விளங்குகிறது.

காவலன் SOS
காவலன் SOSAI image

காவலன் SOS:

தமிழ்நாட்டில் அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 100 என்ற அவசர உதவி எண்ணையோ அல்லது தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ 'காவலன் SOS' (Kavalan SOS) செயலியையோ உடனடியாகப் பயன்படுத்தலாம்.

வெளியே சென்று வீடு திரும்பும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பாக உணர 'காவலன் SOS' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர காலத்திலோ, பாதுகாப்பற்ற சூழலிலோ இந்த காவலன் SOS செயலி பொதுமக்களுக்கு உற்ற தோழனாக தோள் கொடுக்கிறது. குறிப்பாக காவலன் SOS அவசரகால பாதுகாப்புச் செயலியானது, பெண்கள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

காவலன் SOS (Kavalan SOS) செயலியின் முக்கிய அம்சங்கள்:

* ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இந்த வசதி உள்ளது.

* ஸ்மார்ட்போன் இருந்தால், ஆபத்தான சூழலில் இருக்கும்போது, 100 என்ற எண்ணிற்கு அழைக்க தேவையில்லை. செயலியில் உள்ள SOS பட்டனை மட்டும் தட்டினால் போதும், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்றுவிடும்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பெண் படையினரை எளிதாக தொடர்பு கொள்வது எப்படி? உதவி எண் இதோ.!
அவசர எண்கள்

* மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், காவலன் SOS பட்டனில் தொட்டாலே போதும் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து ஸ்மார்ட்போன் கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து நீங்கள் இருக்கும் இடத்தின் துல்லியமான விபரங்களை (Location) தானாகவே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

* அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் SPMCR வசதியும் உள்ளது.

* அவசர காலத்தில் போனை அன்லாக் செய்ய முடியாவிட்டால், போனை வேகமாக உலுக்குவதன் மூலமும் (Shake) SOS சிக்னலை அனுப்ப முடியும்.

* இணைய இணைப்பு இல்லாத (Data unavailable Places) இடங்களிலும் தானியங்கி SMS எச்சரிக்கை மூலமாக செயல்படும்.

இதையும் படியுங்கள்:
149 உதவி எண் அறிவிப்பு..!! வெற்றிப் பயணம் திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
அவசர எண்கள்

* உங்களின் இருப்பிட விபரங்கள் காவல் துறைக்கு மட்டுமின்றி, நீங்கள் செயலியில் பதிவு செய்து வைத்துள்ள உங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கும் குறுஞ்செய்தியாக (SMS) சென்றுவிடும்.

* இந்தச் செயலி தடையின்றி வேலை செய்ய மொபைலில் ஜிபிஎஸ் (GPS) மற்றும் மொபைல் டேட்டா (Mobile Data) ஆன் செய்யப்பட்டிருப்பது அவசியமாகும்.

* முக்கியமாகப் பெண்கள், முதியவர்கள் மற்றும் அவசர வழிகாட்டுதல் தேவைப்படும் எவரும் இந்தச் செயலியைத் தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது.

Android போன் பயனர்கள் உங்கள் மொபைலில் உள்ள Google Play Store-க்குச் சென்று, "Kaaval Uthavi" அல்லது "Kavalan SOS" எனத் தேடி பதிவிறக்கம் செய்து உங்களுடைய சொந்த விவரங்கள் அனைத்தையும் அதில் பதிவு செய்தால் போதுமானது.

logo
Kalki Online
kalkionline.com