149 உதவி எண் அறிவிப்பு..!! வெற்றிப் பயணம் திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

இடிஎம் பழுதானால் மேனுவல் டிக்கெட்; 149 உதவி எண் அறிவிப்பு!
வெற்றி பயணம் உதவி எண்
Vettri Payanam
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெற்றிப் பயணம் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் படி தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்.

கடந்த ஆட்சியில் மகளிர் விடியல் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டு, சாதாரண அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர். இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு வெற்றி பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தத் திட்டத்தின் படி சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி டீலக்ஸ், எல்எஸ்எஸ் மற்றும் மாநகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். இந்நிலையில் இத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார் தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் இல.நிர்மல் ராஜ்.

இதன்படி வெற்றி பயணம் திட்டத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால் ‘149’ என்ற எண்ணூ பெண்கள் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பைக் சாகசத்திற்கு ‘எண்ட் கார்டு’... ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்; சென்னை போலீஸின் புதிய அஸ்திரம்!
வெற்றி பயணம் உதவி எண்

முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்:

* மகளிர் மற்றும் திருநங்கைப் பயணிகளிடம் இருந்து எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

*ETM இயந்திரம் பழுதானால் Manual Ticket வழங்க வேண்டும்.

* 'வெற்றிப் பயணம்’ எனப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தட பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

* தகுதியான அனைத்துப் பயணங்களுக்கும் கட்டாயமாக ‘ZERO Ticket’ வழங்க வேண்டும்.

* ஒருவேளை தகுதியான பெண் பயணியிடம் ZERO Ticket இல்லையெனில், எவ்வித அபராதமும் வசூலிக்கக் கூடாது.

* வெற்றி பயணம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க இலவச உதவி எண் 149-ஐ பெண்கள் அழைக்கலாம்.

* ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க வேண்டும்.

* பேருந்துகளை சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பயணிகள் பாதுகாப்பாக ஏறிய மற்றும் இறங்கிய பின்பு பேருந்தை இயக்க வேண்டும்.

* அனைத்து வெற்றிப் பயணம் பேருந்துகளும் நல்ல பராமரிப்பு மற்றும் இயக்கத் தகுதி நிலையில் இருக்க வேண்டும்.

* தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மாற்றுப் பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட வேண்டும்.

* Not Run, Late Run, Curtailment, Route Diversion மற்றும் அனுமதியற்ற Cancellation ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக காலை / மாலை நெரிசல் நேரங்கள், பள்ளி / கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் சேவைகள் அட்டவணைப்படி இயக்கப்பட வேண்டும்.

வெற்றிப் பயணம்
வெற்றிப் பயணம்source:tv9
இதையும் படியுங்கள்:
திடீரென ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை.! இன்றைய ரேட் இதுதான்.!
வெற்றி பயணம் உதவி எண்

இவ்வழிகாட்டுதல்கள் அனைத்து மண்டலங்கள், கிளைகள் மற்றும் பணிமனைகளின் அறிவிப்புப் பலகைகளில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் இவ்வழிகாட்டுதல்களை தெளிவாக அறிந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வழிகாட்டுதல்கள் பெறப்பட்டவுடன், திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த Action Taken Report தலைமையகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தடங்கள் (Routes), நடைகள் (Singles) மற்றும் மேற்கொள்ளப்பட்ட செயலாக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட முழுமையான Implementation Report தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் வெற்றிப் பயணம் திட்டம் தடையின்றி பயணிகளுக்கு எளிதாகவும், ஒரே மாதிரியான நடைமுறையில் செயல்படுவதையும், ZERO Ticket பதிவுகள், கணக்கீடு, இழப்பீட்டுத் தொகை மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் தெளிவாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com