சிறுகதை; ஆசையில் ஒரு கடிதம்!

ஓவியம்; ஸ்யாம்
Short Story in Tamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 
MM strip
MM strip

-அ. தராவி

அன்புள்ள பெற்றோர்களே, நண்பர்களே,

"என்ன தாரவி, நீ லவ் பண்ணலையா? ஆச்சர்யமா இருக்கே! சீ, நீ வேஸ்ட்" கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் எனக்குக் கிடைத்த விமர்சனம் இது. இதைப் பற்றி யோசித்தேன். அதன் விளைவுதான் இந்தக் கடிதம். காதல் திருமணம் வேண்டுமா இல்லை அரேன்ஜ்ட் திருமணம் வேண்டுமா என்று கேட்டால், 75% இளைஞர்கள் கூறுவது லவ் மேரேஜ்தான். ஆனால் என்னுடைய பதில் அரேன்ஜ்ட் மேரேஜ்தான். நண்பர்களே! வெயிட், வெயிட். நான் சரியான பத்தாம் பசலியென்று கட்டுரைக்கு போர்க்கொடி காட்டி பக்கத்தைத் திருப்பிவிடாதீர்கள். நான் சொல்வதையும் கேட்கலாமே...

நானும் உங்களைப் போல் மாடர்ன் பெண்தான். எனக்கும் தோழிகள், தோழர்கள் உண்டு. நம் விவாதத்தை மேலும் தொடர்வதற்கு முன், என் வீட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும். அம்மா அப்பாவுக்கு திருமணமாகி 25 வருடங்களாயிற்று, ஆனால் இன்னும் இளமை பொங்கும் ஜோடி, நானே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு. நான் ஒரே பெண், செல்லம் அதிகம். விளையாட்டாக ஒருநாள் அப்பா அம்மாவை தனித்தனியே பேட்டி கண்டேன். நான் கேட்ட கேள்வி, "உங்கள் வெற்றிகரமான மணவாழ்க்கையின் ரகசியம் என்னவோ?" என்று கேட்டபோது -

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com