புத்தகக் கடை டோட் பைகள் (Tote bags): கலாச்சாரத்தின் புதிய அடையாளம்!

புத்தகக் கடை டோட் பைகள் எப்படி உலகளவில் வாசிப்பின் கலாச்சார அடையாளமாக மாறின? அதன் சுவாரஸ்யமான வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சியை அறியுங்கள்.
டோட் பைகள் | Tote bag
டோட் பைகள் | Tote bagImage credit: Gemini AI
வைகறை கண்ணன்

வணக்கம். நான், அனைத்து ஊடக, பத்திரிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் விளம்பரங்கள் வெளியிட்டு தரும் விளம்பர ஏஜென்ஸி தொழில் செய்து வருகிறேன். விளம்பரப்படம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறேன். பல முன்னணி பத்திரிக்கைகள், வார, மாத, இணைய இதழ்களிலும் சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். கட்டுரைகள் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய கல்கி ஆன்லைன் குழுமத்திற்கு என்றென்றும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். முதல் காதல்! முதல் வாய்ப்பு! முதல் வெற்றி! முக்கியம் தானே..!

Updated on: 
MM strip
MM strip

உங்கள் தோளில் தொங்கும் அந்த எளிய 'டோட் பேக்' (Tote Bag) வெறும் பை மட்டுமல்ல; அது ஒரு கலாச்சார சின்னம்! 1500களில் தொடங்கி இன்று உலகெங்கிலும் உள்ள வாசகர்களின் அன்பின் மொழியாக மாறிய டோட் பைகளின் சுவாரஸ்யமான வரலாற்றுப் பயணம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள ரகசியங்களை இந்தக் கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

புத்தகக் கண்காட்சி, புத்தகக் கடைகள், புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களுக்கு, நீங்கள் கடைசியாக எப்போது சென்றீா்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இரண்டு உறுதியான கைப்பிடிகள் மற்றும் தாராளமான இடவசதியுடன் கூடிய ஒரு எளிமையான பையை, புத்தகங்களைப் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பலர் எடுத்துச் செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தப் பை உங்கள் இதயத்தில் அன்பின் மொழியை எழுதிச் சென்றதை உணர்ந்திருக்கிறீர்களா? அது கலாச்சார புத்தக வாசிப்புச் சின்னமாக மாறிவருவதை கண்டிருக்கிறீர்களா?

அதன் பின்னே தைக்கப்பட்டுள்ள வரலாறு மற்றும் அந்தப் பை எங்கிருந்து வந்தது? எப்போது வந்தது? என்பதை ஆழமாக அறிந்துகொள்வோம்.

ஒரு வார்த்தையிலிருந்து தொடங்கியது...

பருத்தி அல்லது தோல் பொருட்களிலிருந்து ஒரு சாக்கை உருவாக்குவது ஒன்றும் புதிதல்ல. மனிதர்கள் அதை காலங்காலமாக செய்து வருகிறார்கள். ஆனால், அதன் எளிமையில் கம்பீரமாகவும் நடைமுறையில் பிரபலமாகவும், இரண்டு உறுதியான கைப்பிடிகள் மற்றும் தாராளமான இடவசிதிகள் கொண்ட அந்தப் பைதான் நம்மால் இன்று பிரபலமாக அறியப்படும் ‘டோட் பேக்’ (tote bag) ஆகும்.

‘டோட்’ என்னும் வார்த்தைக்கு பொருள் ‘சுமந்து செல்வது' என்பதாகும்.

1500களிலிருந்து மக்கள் ‘டோட்’ என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினர். 1940களில், புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான எல்.எல்.பீன் பனிக்கட்டிகளை எடுத்துச் செல்வதற்கான உறுதியான கேன்வாஸ் பையைத் தயாரித்தது. அதன் பிறகு மக்கள் இந்தப் பையை தினமும் பயன்படுத்தத் தொடங்கினர். அதன் வடிவமைப்பே பிரபலமடைய உதவியது.

1960கள், மற்றும் 1970களில் மக்கள் டோட் பைகளில் கலைப்படைப்புகள், வாசகங்கள் மற்றும் பிராண்ட் பெயர்களை பொறிக்கத் தொடங்கினர். அவை நாகரீகமாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் மாறின.

இதையும் படியுங்கள்:
குறைவான செலவில் வீட்டை அழகாக்கும் சுடுமண் சிற்பங்கள்!
டோட் பைகள் | Tote bag

1980களில் நியூயார்க் நகரவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன டோட் பைகள். நியூயார்க் நகரத்தின் மனஉறுதி, படைப்பாற்றல், பிரமாண்டம் ஆகியவற்றை வரையறுத்த ‘தி ஸ்ட்ராண்ட்’ என்ற புத்தகக் கடை டோட் பைக்கென ஒரு வடிவமைப்பை அறிமுகப்படுத்தியது. அதில் கடையின் பெயர், முகவரி, அவர்களின் தனித்துவமான “18 மைல் புத்தகங்கள்“ என்பதை துணிச்சலாக விளம்பரப்படுத்தியது. இது நாளடைவில் தனித்துவமாக கலாச்சார வாசிப்பின் நினைவுச் சின்னமாக மாறத்தொடங்கியது.

‘அன்பின் மொழி’ புத்தகக் கடை டோட் பைகள்

புத்தகக் கடை டோட் பைகள், வாசிப்புச் கலாச்சாரத்தின் சின்னமாக மாறிவருகின்றன. நகரம் முழுவதும் உள்ள வாசகர்கள், தற்களுக்குப் பிடித்த புத்தகக் கடைகள் மற்றும் பதிப்பகங்களிலிருந்து டோட் பைகளைச் சேகரித்து நினைவுப் பொருட்களாகவும் அடையாளச் சின்னங்களாகவும் பாதுகாத்து வருகின்றனர்.

டோட் பைகள் | tote bag
டோட் பைகள் | tote bagImage credit: Gemini AI

இந்தப் பைகளின் மதிப்பு அவற்றின் வடிவமைப்பில் குறைவாகவும், அவை பாதுகாக்கும் நினைவுகளில் அதிகமாகவும் உள்ளன. இந்தப் புத்தகக் கடைப் பைகள் நீங்கள் சென்ற இடத்தையும், அங்கு நீங்கள் கண்டறிந்த புத்தகங்களையும் உங்களுக்கு நினைவூட்டுகின்றன. இது வெறும் பை என்பதையும் தாண்டி ஒரு நினைவுப் பரிசு போல உணர்வளிக்கிறது.

ஒரு வாசகராக, அப்படி ஒரு புத்தகப் பை எடுத்துச் செல்வதைப் பார்க்கும்போது, நாம் அவரை பெரிதும் மதிக்கத் தோன்றுகிறது. அவர் ஒரு அற்புதமான வாசகர் சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும், புத்தகக் கடைகளை ஆதரிப்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதையும் உணர்த்துகிறது.

புத்தகக் கடைப் பைகள் அன்பின் மொழி என்பதை உணர்த்துகின்றன. ஒரு காதல் மொழி போன்றது. அது வெறும் பை மட்டுமல்ல, அது நாம் எடுத்துச் செல்லும் ஒரு அடையாளம் ஆகும். நீங்கள் எங்கு சென்றாலும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதன் நினைவுகளை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
The Life Of The Bee: இந்திராகாந்தியை இரும்பு மங்கையாக மாற்றிய அந்த ஒரு புத்தகம்!
டோட் பைகள் | Tote bag

புத்தகக் கடைகளில் விற்கப்படும் பைகள் வாசகர்களிடம் ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தாலும், அவை நினைவுப் பொருளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதாமல், நினைவுச் சின்னங்களாகப் பார்க்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றன.

ஒவ்வொரு பையும், வாழ்க்கையின் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்தவை. அவை அனைத்துடனும் ஒரு வரலாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை அமைதியாக சொல்வதை நம் மனதுக்குக் கேட்பதை நிச்சயம் தவிர்க்கமுடியாது என்பது மிகையல்ல!

இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பதன் மூலம், நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் எளிய டோட் பைக்கு பின்னால் இருக்கும் உலகளாவிய கலாச்சார வரலாறு மற்றும் அதன் உன்னத அடையாளத்தைப் புரிந்து கொண்டு, உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com