
எல்லா பெண்களுக்கும் சிசேரியன் குறித்து வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. சிசேரியன் சிலருக்கு எளிதான வழியாக தோன்றுகிறது. இடுப்பு பகுதியில் கொடுக்கப்படும் ஊசிகள் குறித்து பல கருத்துகள் இருப்பதால் சிசேரியன் என்ற பயம் பல பெண்களுக்கு இருக்கிறது. சிசேரியன் போது முதுகில் செலுத்தப்படும் ஊசிகள் முதுகு வலியை ஏற்படுத்தும் என பெரும்பாலான மக்களால் நம்பபப்படுகிறது. இந்த ஊசிகள் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் முதுகு வலியை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
அறிவியல் ஆதாரம் இல்லை:
சிசேரியன் பிரசவத்தின் போது இடுப்பு பகுதியில் ஊசி போடுவதால் வாழ்நாள் முழுவதும் முதுகு வலி ஏற்படும் என்பது தவறான கருத்தாகவும் கட்டுக்கதையாகவும் இருக்கிறது . இன்றுவரை சிசேரியன் பிரசவத்தின் போது கொடுக்கப்படும் ஊசிகளால் நீண்டகால முதுகு வலி ஏற்படும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. இதை பெண்கள் நம்பக்கூடாது என்பது மூத்த மகப்பேறு மருத்துவர்களின் கூற்றாக உள்ளது.
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் நிறைய நுணுக்கமான வேலைகள் செய்து மயக்க மருந்து ஊசி போடுவதால் எந்த சேதாரமும் ஏற்படாது. ஊசி செலுத்துவதில் தவறு ஏற்பட்டாலோ அல்லது ஏற்கனவே பெண்ணின் முதுகெலும்பு பலவீனமாக இருந்தாலோ வலி நீண்ட நேரம் இருக்கும். ஆனால் இது மிகவும் அரிதான ஒன்றாகும்.
மோசமான தோரணைக்கான காரணங்கள்:
நாள்பட்ட முதுகு வலிக்கு மருத்துவர்களின் கூற்றுப்படி நீண்ட நேரம் பெண்கள் முதுகை வளைத்து உட்காரும்போது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகு வலிக்கு வழிவகுக்கிறது.
உங்கள் முதுகை நேராக வைத்திருங்கள்
சிசேரியனுக்கு பிறகு முதுகு வலி ஏற்பட்டால், பெண்கள் உட்காரும்போது முதுகை சரியாக நேராக வைத்திருப்பதில் கவனம் செலுத்தினாலே முதுகு வலி ஏற்படாது.
ஒரு தலையணையைப் பயன்படுத்துங்கள்:
நேராக உட்கார முடியவில்லை என்றால் முதுகுக்கு பின்னால் ஒரு தலையணையை வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது போதுமான ஆதரவை முதுகெலும்புக்கு வழங்குவதோடு இடுப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
தசைப்பிடிப்பும் ஒரு காரணம்
சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ச்சியாக முதுகு வலி ஏற்படுகிறது. இந்த நேரங்களில் வெந்நீரை பயன்படுத்தலாம். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.
முதுகுவலிக்கான பிற காரணங்கள்
சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், தவறான நிலையில் உட்காருதல், குழந்தைகளை சுமக்கும் போது ஏற்படும் தவறான பழக்கங்களால் முதுகு வலி ஏற்படுகிறது.
முதுகு வலியை எப்படி தவிர்ப்பது?
குழந்தையை சரியான நிலையில் மடியில் உட்கார வைப்பது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது, லேசான உடற்பயிற்சி செய்வது, நடப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் இல்லாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி பிசியோதெரபி எடுத்துக் கொள்வது ஆகியவை முதுகு வலியை தவிர்க்கும் வழிமுறைகளாகும்.
சிசேரியன் பிரசவத்தில் ஏற்படும் முதுகு வலிக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஊசிதான் காரணம் என்ற கட்டுக்கதையை நம்பாமல் உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)