

வயது வெறும் எண் என்பதை நிரூபித்த ஜோஆன் ஹிக்ஸ் (Joanne Hicks), 51 வயதில் சர்வதேச டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்து, கிரீஸ் அணியை 52 ரன்களுக்கு சுருட்டினார்; இதைத் தொடர்ந்து ஐல் ஆஃப் மேன் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 49 வயதுக்கு பின் சர்வதேச அறிமுகம் செய்த ஹிக்ஸ், அனுபவம், கட்டுப்பாடு, உடற்தகுதி மூலம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக உயர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் சாதனை படைக்க இளமை மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்திருக்கிறார் ஐல் ஆஃப் மேன் அணியின் ஜோஆன் ஹிக்ஸ் (Joanne Hicks). 51 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, பல ஆண்டுகளாக நிலைத்து நின்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார். அவரது அபாரமான பந்துவீச்சு, கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் விளையாட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சாதனை எப்படி நிகழ்ந்தது?
ருமேனியாவில் நடைபெற்ற மகளிர் டி20 கான்டினென்டல் கப்பில் கிரீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐல் ஆஃப் மேன் முதலில் பந்துவீசியது. அந்தப் போட்டியில் ஜோஆன் ஹிக்ஸ் (Joanne Hicks) நான்கு ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டும் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவரது துல்லியமான பந்துவீச்சால் கிரீஸ் அணி 15 ஓவர்களில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஐல் ஆஃப் மேன் அணி ஆறு ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அபார செயல்பாட்டுக்காக ஹிக்ஸ் ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.
முறியடிக்கப்பட்ட பழைய சாதனை:
ஹிக்ஸின் சாதனை மிகவும் சிறப்பானதாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், அவர் முறியடித்த சாதனை 1932 ஆம் ஆண்டிலிருந்து நீடித்து வந்தது.
ஆஸ்திரேலிய அணியின் பெர்ட் அயர்ன்மாங்கர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 49 வயது 314 நாட்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த அதிக வயதான வீரர் என்ற பெருமை அவரிடம் இருந்தது. தற்போது 51 வயது 173 நாட்களில் ஹிக்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
தாமதமாக தொடங்கிய பயணம்:
ஹிக்ஸின் பயணத்தில் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் உள்ளது. அவர் தனது சர்வதேச அறிமுகத்தை நாற்பதுகளின் இறுதியில் தான் செய்தார்.
2024 ஆம் ஆண்டில் மால்டா மற்றும் கிரீஸ் அணிகளுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அப்போது 49 வயதைக் கடந்திருந்த அவர், வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். தற்போது50 வயதைக் கடந்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற புதிய வரலாற்றையும் உருவாக்கியுள்ளார்.
அவரது பந்துவீச்சில் வேகம் மட்டுமல்லாமல், அனுபவத்தின் நிதானமும் வெளிப்பட்டது. முக்கியமான தருணங்களில் சரியான இடத்தில் பந்தை வீசி பேட்ஸ்வுமன்களை அழுத்தத்துக்குள் கொண்டு வந்தார்.
அவரது ஐந்து விக்கெட்டுகளில் நான்கு விக்கெட்டுகள் போல்டு அல்லது எல்பிடபிள்யூ முறையில் கிடைத்தன. இது அவரது கட்டுப்பாட்டையும் பந்துவீச்சுத் திறனையும் வெளிப்படுத்துகிறது. விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி செய்வதும், உடற்தகுதியை பராமரிப்பதும், போட்டி மனப்பான்மையை கைவிடாமல் இருப்பதும் அவரது பயணம் உணர்த்துகிறது.
கிரிக்கெட்டில் சாதனைகள் இளம் வயதில் நிகழ்ந்தாலும், சில வரலாற்று தருணங்கள் அனுபவத்தின் மதிப்பை உலகிற்கு நினைவூட்டுகின்றன. ஹிக்ஸின் சாதனையும் அத்தகைய அரிய தருணங்களில் ஒன்றாகியுள்ளது. அவரது வெற்றி, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. இதனால் சாதனை கிரிக்கெட் புள்ளிவிவரங்களில் மட்டும் இடம்பெறாமல், ஊக்கமளிக்கும் கதையாகவும் மாறியுள்ளது..
இந்தச் சாதனை பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.. பல்வேறு வயதினரும் அணிகளில் இணைந்து தங்களது திறமையை நிரூபிக்க முடியும் என்பதை ஹிக்ஸ் காட்டி உள்ளார்..
பொதுவாக சர்வதேச விளையாட்டில் இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் நிலையில், அனுபவம் கொண்ட வீராங்கனைகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை அவரது வெற்றி வலுப்படுத்துகிறது..
மேலும் குடும்ப பொறுப்புகள்,வேலை மற்றும் தனிப்பட்ட சவால்களுக்கு இடையிலும் விளையாட்டைத் தொடர முடியும் என்பதற்கும் அவர் முன்னுதாரணமாக உள்ளார்.. அவரது சாதனை வயது காரணமாக பின்வாங்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது .. ஒரு போட்டியில் கிடைத்த வெற்றியைத் தாண்டி பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஊக்கச் செய்தியாகவும் இது அமைந்துள்ளது..
சாதனையின் பின்னால் இருக்கும் செய்தி!!
ஜோஆன் ஹிக்ஸின் இந்த சாதனை சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது.. 51 வயதில் இளம் வீராங்கனைகளுடன் களமிறங்கி நான்கு ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதாரண விஷயம் அல்ல..
குறிப்பாக, அவரது ஐந்து விக்கெட்டுகளில் நான்கு விக்கெட்டுகள் போல்டு அல்லது எல்பிடபுள்யூ முறையில் கிடைத்திருப்பது அவரது பந்து வீச்சின் துல்லியத்தைக் காட்டுகிறது..
ஹிக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போது அவருக்கு ஏற்கனவே நாற்பதுகளின் பிற்பகுதி வயது.. 2024 ம் ஆண்டிலேயே ஐந்து விக்கெட்டுகள் எடுத்த அவர் தற்போது தனது சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார்..
கிரிக்கெட்டில் சாதனை படைப்பதற்கு குறிப்பிட்ட வயது மட்டுமே தேவை என்ற கருத்தை அவரது பயணம் முற்றிலும் மாற்றி உள்ளது.. அவரது வெற்றியில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தனிப்பட்ட சாதனையுடன் அணிக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.. கிரீஸ் அணியை 52 ரன்களுக்கு சுருட்டிய பிறகு, ஐல் ஆஃப் மேன் அணி வெறும் ஆறு ஓவர்களில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இதனால் ஹிக்ஸின் சாதனை மேலும் சிறப்பானதாக மாறி உள்ளது.
ஜோஆன் ஹிக்ஸின் சாதனை ஒரு கிரிக்கெட் சாதனை மட்டுமல்ல; கனவுகளைத் தொடர வயது தடையல்ல என்பதற்கான அழகான எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
இளம் வீரர்களுடன் போட்டியிட்டு, அனுபவத்தையும் நம்பிக்கையையும் ஆயுதமாக்கி அவர் படைத்த இந்த சாதனை, விளையாட்டு உலகில் நீண்ட காலம் நினைவுகூரப்படும். முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வயதிலும் புதிய அத்தியாயத்தை எழுத முடியும் என்பதை ஹிக்ஸ் நிரூபித்துள்ளார்.
உங்களது கனவுகளுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் உத்வேகத்துடன் புதிய இலக்குகளை நோக்கி பயணிக்கத் தேவையான அசைக்க முடியாத தன்னம்பிக்கையைப் பெறலாம்.