மஹா பெரியவா - : உலகை வென்ற ஆன்மிக ஞானியின் வியக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு!

மஹா பெரியவா - ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - வாழ்வை மாற்றும் அருளுரைகளும் அனுபவங்களும்..
மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்AI Image
Updated on
MM strip
MM strip

மஹா பெரியவா _ எளிமையால் உலகை வென்ற ஞான சூரியன்.. இந்திய ஆன்மிக வரலாற்றில் காலத்தால் அழியாத மகான்களில் முதன்மையான இடத்தைப் பெறுபவர் காஞ்சி மஹா பெரியவா.. அவருடைய வாழ்க்கை, போதனைகள், எளிமை, கருணை மற்றும் தர்ம நெறிகள் இன்றும் எண்ணற்ற மக்களின் வாழ்விற்கு வழிகாட்டியாக உள்ளன. அவரைப் பற்றி அறிந்து கொள்வது என்பது ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் படிப்பது அல்ல. வாழ்வை எப்படி உயர்வாகவும், பணிவாகவும் வாழ வேண்டும் என்பதை உணர்வதாகும்..

மஹா பெரியவா என்று அன்புடன் அழைக்கப்படுபவரின் இயற்பெயர் சுவாமிநாதன். அவர் துறவறம் ஏற்ற பிறகு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற திருநாமத்தைப் பெற்றார். இவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதி ஆவார். மிக இளம் வயதிலேயே பீடாதிபதியாக பொறுப்பேற்ற அவர் பல தசாப்தங்களாக இந்தியா முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மஹா பெரியவாளின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அவரது எளிமை. அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், செல்வந்தர்கள், சாதாரண மக்கள் என அனைவரையும் ஒரே பார்வையில் அணுகினார்.

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனித நேயம், தர்மம், பக்தி, ஒழுக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றை வலியுறுத்துவதாக இருந்தது. வேதங்களையும், பாரம்பரியத்தையும் காக்க அவர் எடுத்த முயற்சிகள் இன்றளவும் போற்றப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
கணவன் கொடுமைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பழையனூர் நீலி அம்மன் வழிபாடு!
மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

கல்வி, கலாச்சாரம், மொழி, இசை, இலக்கியம் போன்ற பல துறைகளுக்கும் அவர் அளித்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்லொழுக்கத்துடனும் அன்புடனும் வாழ வேண்டும் என்பதே அவரது அறிவுரைகளின் அடிப்படை. 'பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் சேவையே' என்ற எண்ணத்தை அவர் தனது வாழ்வின் மூலம் எடுத்துக் காட்டினார்..

காஞ்சி மஹா பெரியவாளின் அருளுரைகளின் தொகுப்பான "தெய்வத்தின் குரல்" நூலில் மனிதர்களின் அகந்தையை ஒழித்து எளிமையைக் கற்பிக்க அவர் விவரித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முறை ஒரு பக்தர் மஹா பெரியவாளைத் தரிசிக்க ஸ்ரீமடத்திற்கு வந்தார். அந்த பக்தர் தன் வாழ்வில் பல சோதனைகளையும் இழப்புகளையும் கடந்து வந்தாலும் குருவின் மீதும் இறைவனின் மீதும் தான் கொண்ட பக்தி கொஞ்சமும் குறையாமல் ஒரே சீராக இருப்பதாக பெருமையுடன் கூறினார்..

அவர் பெரியவாளிடம் "வெவ்வேறு சூழ்நிலைகள் வந்தாலும் மனம் மாறாமல் எதிலும் சமநிலையில் இருக்கும் உன்னதமான நிலைக்கு ஆங்கிலத்தில் என்ன சரியான வார்த்தை?" என்று தன் அறிவை வெளிப்படுத்தும் விதமாக கேட்டார்..

மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்AI Image

அப்போது புன்னகைத்த பெரியவா "நான் ஒரு வார்த்தை சொல்லட்டுமா? அது இதற்கு பொருந்துமா? என்று பார்.. EQUIPOISED (சமநிலை மனம்) என்றார். பெரியவா ஆன்மிக ஞானி மட்டும் அல்ல உலகியல் மொழிகளிலும் அறிவிலும் எத்துணை ஆழமானவர் என்பதை புரிந்து கொண்டு அந்த நபர் வியந்து போனார்.

தன் முன்னால் நிற்கும் பெரியவரின் அறிவுத் திறனைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்ற பாடத்தையும் மனிதனிடம் எப்போதும் தலைக்கனம் இருக்க கூடாது என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தியது..

காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக இருந்த மஹா பெரியவா காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்பாளின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அம்பாளை பராசக்தியின் முழு வடிவமாக கருதி தினமும் வழிபட்டார். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் தொடரவும், சனாதன தர்ம நெறிகள் நிலைத்திருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

'அம்பாளின் அருளே அனைத்திற்கும் ஆதாரம்' என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்த மஹா பெரியவா பக்தர்களையும் இறைநம்பிக்கையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ வழி காட்டினார்.

இதையும் படியுங்கள்:
மேற்கு வங்க திருமணங்களில் மீன் ஏன் முக்கியமானது? ரகசியம் இதோ!
மஹா பெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

மகான்கள் உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர்களின் சிந்தனைகளும் வாழ்வியல் நெறிகளும் என்றும் அழியாது. மஹா பெரியவாளின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை வாசிப்பதும், தெய்வத்தின் குரல் போன்ற அரிய தொகுப்புகளை அறிந்து கொள்வதும் நமது வாழ்க்கை முறையை உயர்த்த உதவும். அவரது அருள்வாக்குகளை நடைமுறையில் பின்பற்றினால் தனிமனித முன்னேற்றத்தோடு சமுதாய நலனுக்கும் நம்மால் பங்களிக்க முடியும்.

இந்த ஆன்மிக தகவல்களை முழுமையாகப் படிப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, வாழ்வியலில் எளிய மற்றும் அமைதியான முறைகளைக் கடைப்பிடித்து நிலையான மனச் சமநிலையைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com