

மேற்கு வங்க திருமணங்களில் மீன் சடங்கு ஏன் இவ்வளவு முக்கியமானது? ஐபுரோபாத் முதல் தட்டா பரிசுகள் வரை பெங்காலி கலாச்சாரத்தின் சுவாரஸ்யமான தகவல்கள்.
இந்தியாவிலே பல்வேறு மாநிலங்களில் பலவிதமான கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு சடங்குகள் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் சிறிது வித்தியாசமாகவே திருமண சடங்குகள் நடைபெறுகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில் மீனை ஒரு சுபமாக கருதுகிறார்கள்.
புதுமணப் பெண் வீட்டிற்குள் வரும்போது அந்த மீனையும் சேர்த்துக் கொண்டுதான் உள்ளே வருவாள். அதைப் போல அந்தப் பெண் நுழையும் வீட்டிலும் ஒரு மீனை வைத்து வெட்ட சொல்வார்கள். அவர்களுக்கும் அந்த மீனிற்கும் அத்தனை ஒரு ஈடுபாடு. மீனை அவர்கள் ஒரு சாப்பாடு பொருளாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு கடவுளின் அவதாரமாகவே நினைக்கிறார்கள்.
பெங்காலி இனத்தில் பிராமணர் குலத்தை சேர்ந்தவர்களும். மீனை உண்பார்கள். அவர்களுடைய கலாச்சாரத்தில் விதவைப் பெண்கள் மட்டும் தான் மீனை உண்ண மாட்டார்கள். நம்முடைய தமிழ் கலாச்சாரப்படி சுப நிகழ்வுகளில் பெண்கள் எந்த அளவிற்கு பூவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு மீனிற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பெங்காலி கலாச்சாரம் மற்றும் ஐபுரோபாத் விருந்துச் சடங்கு:
திருமணத்திற்கு முன்னால் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் தனித் தனியாக தங்களுடைய வீடுகளில் மகன் அல்லது மகளுக்கு single life இன் கடைசி நாளை கொண்டாடும் வகையில் ஒரு விருந்தை வைப்பார்கள். அந்த சடங்கு ஐபுரோபாத் என்றழைக்கப்படுகிறது. இந்த சடங்குதான் திருமணத்திற்கான முதல் சடங்காக கருதப்படுகிறது. இந்த நிறைவான உணவு விருந்தில், மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் மீன் ஒரு இன்றியமையாத அம்சமாக கருதப்படுகிறது. இந்தச் சடங்கு திருமண நாளுக்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது.
பெங்காலி கலாச்சாரம் மற்றும் திருமண மீன் சடங்குகள்:
இதைத் தொடர்ந்து, திருமண நாளன்று காலையில், ஹல்தி சடங்கில் (மஞ்சள் பூசம் சடங்கு) மணமகனின் குடும்பத்தினர், 'தட்டா' என்று அழைக்கப்படும் பரிசுகளின் அணிவகுப்போடு மணமகளின் வீட்டிற்கு வருவார்கள்.
அந்த 'தட்டா'வில், மணப்பெண்ணைப் போலவே புடவையை உடுத்தி அலங்கரிக்கப்பட்ட ஒரு ரோகு மீனுடன், சிவப்பு சுர்னி, நகைகள் மற்றும் குங்குமம் என பல பரிசுகள் இருக்கும். திருமண விழாவின் போது, இரு குடும்பங்களுக்கும் இடையே பரிமாறப்படும் 'தட்டா'வில், மீன் வடிவில் மடிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் புடவைகளும் அடங்கும்.
இவ்வாறு திருமணத்தின் அனைத்து சடங்குகளிலும் இரு வீட்டார்களும் அழகாக அலங்கரிக்கப்பட்டு மற்றும் பேக் செய்த மீனை பரிமாறிக் கொள்வார்கள்.
நம்முடைய கலாசாரத்தில் சடங்கு முழுவதும் நாம் வெற்றிலை பாக்கு மற்றும் பழமில்லாமல் நாம் மற்ற பொருட்கள் எதையுமே பரிமாறிக் கொள்ள மாட்டோம். அதைப் போலத் தான் அவர்கள் மீனிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இப்படி பல ஆண்டுகளாக திருமணத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மீன் இருப்பதற்கு, பலவிதமான கருத்துக்களை அவர்கள் கூறுகிறார்கள்.
அதில் மிக முக்கியமான கருத்து என்னவென்றால், திருமண நாள் என்பது எல்லோருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான நாள் என்பதாலும், அது நம் வாழ்வின் முக்கியமான பயணங்களில் ஒன்றைத் தொடங்குவதாலும், நல்ல அதிர்ஷ்டம், நல்வாழ்த்துக்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக திருமண சடங்குகளில் ஒரு தட்டில் வைத்து மீன் அனுப்பப்படுகிறது என்பதே ஆகும்.
இதைப் போலவே நம் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் வெவ்வேறு விதத்தில் சடங்குகள் நடத்தப்படுகின்றன. காலமும் நம் வாழக்கை முறையும் மாறின போதிலும் நம் இந்திய கலாச்சாரம் என்றென்றும் மாறாது.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், மேற்கு வங்காளத்தின் தனித்துவமான திருமண முறைகள் மற்றும் சடங்குகளுக்குப் பின் உள்ள ஆன்மீக மற்றும் கலாச்சார ரகசியங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரியத்தின் மீது ஆழமான புரிதலையும் மதிப்பையும் பெறுவீர்கள்.