டேப், லேப்டாப் வேண்டாம்: குழந்தைகளுக்கு மணல் குவியலில் பாடம் நடத்தும் பாட்டி!

டிஜிட்டல் வகுப்பறைகளைத் தாண்டி, வெறும் மணலும் குச்சியும் கொண்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கேரள மூதாட்டியின் வியக்க வைக்கும் பயணம்.
ஆஷாட்டி அம்மும்மா | A old woman teaches children with sand
ஆஷாட்டி அம்மும்மா | Ashaatti AmmummaImage credit: Chatgpt
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on: 
MM strip
MM strip

டிஜிட்டல் போர்டுகளும் டேப்களும் நிறைந்த இந்த நவீன காலத்திலும், கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வெறும் மணலும் குச்சியும் கொண்டு குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்றுக்கொடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறார். வியக்க வைக்கும் இந்த பாட்டியின் பாடம் நடத்தும் முறை என்ன? இந்தக் கட்டுரையைப் படித்து முழு விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்!

முன்பெல்லாம் பள்ளிக் கூடத்தில் கரும்பலகை தான் இருக்கும். டீச்சர் கலர் கலரான சாக்பீஸால் எழுதி மாணவர்களுக்கு கற்று கொடுத்த பிறகு அதை அழித்து விட்டு வேறொன்றை எழுத தொடங்குவார். இன்றைய நாட்களில் நவீன முறையில் டிஜிட்டல் போர்டு வந்த போதிலும் இன்னும் முக்கால் வாசி பள்ளிக் கூடத்தில் கரும்பலகை இருக்கிறது. முற்றிலும் நவீன முறையை பின்பற்றுகினற பள்ளிக்கூடங்களில் Tab, laptop போன்றவற்றை ஆசிரியர்கள் கற்பிப்பதற்காக உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், கேரளாவில் ஒரு அம்மையார் மணலில் எழுதி குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா???

சிறு குழந்தைகளுக்கு முதன் முதலாக எழுதக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு வகுப்பறை, கரும் பலகை, பயிற்சிப் புத்தகங்கள் இவையெல்லாம் கட்டாயமாகத் தேவை என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், கேரளாவில் உள்ள ஒரு வயதான பாட்டி, உண்மையான கற்றலுக்கு இதெல்லாம் தேவையே இல்லை, மாறாக அர்ப்பணிப்புள்ள ஒரு ஆசிரியர், ஒரு மணல் குவியல், மற்றும் அளவற்ற பொறுமை ஆகியவையே போதும் என்று நிரூபித்துள்ளார்.

மேலும் அவருடைய இந்த பணியானது இணையதளத்தில் ஒரு காணொளி மூலமாக வெகு வேகமாக பரவியதோடு மட்டுமில்லாமல் மக்களின் மனதையும் கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இப்போதைய இளைஞர்களுக்கு முதுமை சீக்கிரம் வர என்ன காரணம்?
ஆஷாட்டி அம்மும்மா | A old woman teaches children with sand

கேரளாவைச் சேர்ந்த ஆஷாட்டி அம்மும்மா என்கிற மூதாட்டி, சிறு குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக வழக்கமான கரும்பலகை, நோட்டுப் புத்தகங்கள் அல்லது டிஜிட்டல் கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மணல் குவியல் வகுப்பறையாக மாற்றியுள்ளார். இதன் மூலம், மிக எளிய வளங்களைக் கொண்டே கல்வியைத் தொடங்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்து காட்டியுள்ளார்.

அந்த காணொளியில், இந்த அம்மையார், ஒரு சிறுவர் குழுவிற்கு எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுப்பது இடம் பெற்றுள்ளது. மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் மற்றும் அவருடைய கற்பித்தல் முறையின் தனித்துவமான பாணிக்காக இந்தக் காணொளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆஷாட்டி அம்மும்மா எப்படி கற்பிக்கிறார் என்றால், ஒரு வாளி மணலை வரிசையாக அமர்ந்திருக்கும் சினனஞ் சிறு மாணவர்களுக்கு முன்னால் தரையில் பரப்பி, ஒரு குச்சியைப் பயன்படுத்தி மேற் பரப்பைச் சமப்படுத்தி, எழுதும் பலகையைபோல உருவாக்குகிறார்.

ஆஷாட்டி அம்மும்மா | A old woman teaches children with sand
ஆஷாட்டி அம்மும்மா | Ashaatti AmmummaImage credit: Gemini AI

மேற்பரப்பு தயாரானதும், ஆஷாட்டி அம்மும்மா குச்சியைக் கொண்டு எழுத்துக்களை எழுதத் தொடங்குகிறார். மேலும், ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு உருவாகிறது என்பதைக் குழந்தைகள் கவனிக்கும் வகையில், அந்த எழுத்துக்களின் வளைவு வடிவங்களையும் அவர் செய்து காட்டுகிறார். மாணவர்கள் அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மணல் குவியலில் தங்கள் விரல்களால் எழுத்துக்களைத் தடவி, தாங்களாகவே எழுதப் பழகுகிறார்கள்.

இந்த அணுகு முறையானது, ஒரு புத்தகத்திலிருந்து எழுத்துக்களை வெறுமனே பார்த்து எழுதுவதற்கு பதிலாக, நேரடியாக பார்த்து பார்த்து பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கிறது மேலும் மிக விரைவிலேயே கற்றுக் கொள்ளவும் உபயோகமாக இருக்கிறது. மணலையும் ஒரு குச்சியையும் மட்டுமே கொண்டு, இந்த அம்மையார் குழந்தைகளுக்கு ஒரு ஆர்வமூட்டும் கற்றல் சூழலை உருவாக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காணொளி மிக அதிகளவில் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு அவசர உதவி: 181, 112, காவலன் செயலி எப்படிப் பயன்படுத்துவது?
ஆஷாட்டி அம்மும்மா | A old woman teaches children with sand

ஆஷாட்டி அம்மையாருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையானது, பயனுள்ள கற்பித்தல் என்பது எப்போதும் விலையுயர்ந்த உபகரணங்களையோ அல்லது தொழில்நுட்ப வசதியையோ சார்ந்திருப்பதில்லை என்பதை நமக்கு அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறது..

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், எளிய முறையில் குழந்தைகளிடம் கற்பித்தல் ஆர்வத்தை வளர்த்து, குறைந்த செலவில் ஆழமான அடிப்படைக் கல்வியை வழங்க உதவும் ஊக்கமளிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com