The Layers of Life: சிசேரியன் அறுவை சிகிச்சையை குறிக்கும் 7 அடுக்குகளை கொண்ட கவுன்!

வியட்நாமில் நடைபெற்ற அழகுப் போட்டியில் சிசேரியன் அறுவை சிகிச்சையின் ஏழு அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.
தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் கவுன் | The Layers of Life
தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் கவுன் | The Layers of LifeImage credit: Chatgpt
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on
MM strip
MM strip

சமீபத்தில் தாயான ஆடை வடிவமைப்பாளர் கீஷா அப்தல்லா, பிரசவம் தொடர்பான வரைபடத்திலிருந்து ஈர்ப்பு பெற்று, சிசேரியன் அறுவை சிகிச்சையின் ஏழு அடுக்குகளை பிரதிபலிக்கும் தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் (The Layers of Life) கவுனை வடிவமைத்தார். சாட்டின், டூல் துணி, பீச், சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள், முத்து மற்றும் படிக அலங்காரங்களுடன் உருவான இந்த ஆடை, பெண்களின் உடல் அமைப்பின் அதிசயத்தையும் தாய்மையின் வலிமையையும் கொண்டாடும் நோக்கத்துடன் வியட்நாம் அழகு விழாவில் அறிமுகமானது.

கடந்த, ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை அன்று வியட்நாமில் நடைபெற்ற, 17வது வியட்நாம் அழகு மற்றும் ஆடை அலங்கார விழாவான 'பாரம்பரியத்தின் ஆன்மா' என்பதன் ஒரு பகுதியாக, பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் வேவ்வேறு விதங்களில் ஆடை அணிந்திருந்தார்கள்.

ஆனால், இவர்களில் ஒருவர் அணிந்திருந்த ஆடை மட்டும் பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் இணையதளத்திலும் பரவி மிக அதிக அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமில்லாமல் மெய் சிலிர்க்கும் வகையிலும் அந்த ஆடைவடிவமைக்கப்பட்டிருந்தது. அப்படி என்ன இருந்தது அந்த ஆடையில்?? இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்..

Miss world உகாண்டா எல்லே முஹோசா அவர்கள் அணிந்திருந்த ஆடையின் வடிவமைப்பாளர் கீஷா அப்தல்லா உருவாக்கிய “தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் (The Layers of Life)” என்ற தலைப்பிலான பிரத்யேக ஆடை தான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. இந்த எல்லே முஹோசா என்பவர் 2025-ல் மிஸ் உகாண்டாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிட தக்கது.

சிசேரியன் அறுவை சிகிச்சையின் ஏழு அடுக்குகளால் வடிவமைக்கப்பட்ட கவுனை அணிந்து கொண்டு இந்த Miss world உகாண்டா மேடையேறினார்.

இதையும் படியுங்கள்:
வயதாகி விட்டதே‌‌.. இனி புதிதாகக் கற்றுக் கொள்ள முடியுமா? ஓ..முடியுமே! மூளையின் அற்புத சக்தி!!
தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் கவுன் | The Layers of Life

சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்கள் வெட்டி எடுக்கும் ஏழு அடுக்குகளைக் குறிக்கும் வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சருமம், கொழுப்பு, சவ்வு, நேர்த் தசைகள், வயிற்றறை, கருப்பைத் தசை மற்றும் பனிக்குடப் பை ஆகிய அடுக்குகளைக் காட்டும் வகையில் அந்த கவுன் தயாரிக்கப்பட்டிருந்தது.

தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் கவுன் | The Layers of Life
தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் கவுன் | The Layers of LifeImage credit: Gemini AI

சமீபத்தில் தாயான, ஆடை வடிவமைப்பாளரான கீஷா, ஆடைக்கான புதிய யோசனைகளை உருவாக்கும்போது பிரசவம் தொடர்பான படங்களைச் சேகரித்து வந்தார். அப்போது, அவற்றில் ஒரு படம் மட்டும் அவரை மிகவும் கவர்ந்தது.

ஒரு தாய் தன் குழந்தையைச் பெற்று எடுப்பதற்கு முன்னால், சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது வெட்டப்படும் ஏழு அறுவை சிகிச்சை அடுக்குகளை காட்டும் வரைபடம் தான் அவரை கவர்ந்தது.

வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிறத்தில் இருந்தது. இந்த வரைபடம் தான் அப்தல்லாவின் ஆடையிலிருந்த டல்லே துணியின் அடுக்குகளுக்கு உத்வேகம் அளித்ததென்றே சொல்லலாம்.

பிரசவம், தாய்மை மற்றும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குக் கொண்டு வரும்போது பெண்கள் அனுபவிக்கும் உடல் ரீதியான பயணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வியக்க தக்க வகையில் அடுக்குகளை கொண்டு இந்த கவுன் வடிவமைக்கப்பட்டது.

இந்த தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் (The Layers of Life) கவுன் நீளும் தன்மையுள்ள சாட்டின் மற்றும் அடுக்கு டூல் துணியால் உருவாக்கப்பட்டு, உடலோடு ஒட்டிய ஒற்றைத் தோள்பட்டை வடிவத்தையும், மென்மையாகப் பறக்கும் துணியையும் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
25,500 கடல் மைல்கள் கடந்து சாதனை படைத்த முப்படை பெண்கள்..!
தி லேயர்ஸ் ஆஃப் லைஃப் கவுன் | The Layers of Life

அதில் பீச், சிவப்பு, பர்கண்டி, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும், முத்துக்கள், கண்ணாடி மணிகள் மற்றும் படிக அலங்காரங்கள் இன்னும் கூடுதலான அழகைச் சேர்க்கின்றன.

கீஷா அவர்களின் கருத்தின் படி, இந்த நிறங்கள் வெவ்வேறு இனங்களையோ அல்லது சரும நிறங்களையோ குறியீடாகக் காட்டுவதற்காக உருவாக்கப்படவில்லை என்பதே ஆகும். இந்த ஆடையின் முக்கிய நோக்கமே “ஒரு பெண்ணும் அவளுக்குள் இருக்கும் உடலின் வியக்கத்தக்க அடுக்குகளும் தான்”.

வாசகர்கள் தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவம் குறித்த நவீன உலகளாவிய கலைப் படைப்புகளின் பின்னணியை முழுமையாகப் புரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் கூடிய புதிய உலகச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com