

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஒன்பது பெண் அதிகாரிகள், புதுச்சேரியில் கட்டப்பட்ட 50 அடி நீளமுள்ள IASV திரிவேணி பாய்மரக் கப்பலில் 25,500 கடல் மைல்கள் கடந்து, டிரேக் கணவாய், கேப் ஹார்ன் போன்ற உலகின் மிக அபாயகரமான கடல்வழிப் பாதைகளையும் வென்று, ‘கேப் ஹார்னர்ஸ்’ என்ற கௌரவத்தை பெற்றனர். இந்த சாதனை, இந்திய கடலோடி பெண்களின் வளர்ச்சியை உலகளவில் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் கடல், கப்பல் சார்ந்த பணியில் இருப்பவர்கள் 5,54,054 பேர்கள். கடல் சார்ந்த பணிகளில் ஈடுபடுகின்றவர் கடலோடிகள் என்கிறார்கள். அதில் பெண்கள் 7033 பேர். 2021 ம் ஆண்டு 1599 கடலோடி பெண்இருந்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் அது 4 மடங்கு உயர்ந்துள்ளது.
கடலோடி பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு 314 நாட்களில் முப்படைகளையும் சேர்ந்த முழுக்க முழுக்க பெண்கள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சாகசங்கள் நிறைந்த சமுத்திர பிரதட்சிணப் பயணம் அண்மையில் நிறைவடைந்தது.
ஒன்பது இந்திய ராணுவ அதிகாரிகள், 314 நாட்களில் நான்கு கடல்களைக் கடந்து 25,500 கடல் மைல்கள் பயணித்து திரும்ப, ஐ.ஏ.எஸ்.வி திரிவேணி பாய்மரப்படகை பயன்படுத்தினர். ஐ.ஏ.எஸ்.வி திரிவேணி (MMSI: 419001980) 50 அடி நீளமுள்ள 'கிளாஸ்-ஏ' வகை சொகுசுப் பாய்மரப் படகு, புதுச்சேரியில் 2024-ல் கட்டப்பட்டது. இந்த குழுவில், லெப்டினன்ட் கர்னல் அனுஜா வருத்கர் (ராணுவம்) தலைமையில், ஸ்குவாட்ரன் லீடர் ஸ்ரத்தா பி. ராஜு (இந்திய விமானப்படை) துணைத் தலைவராக இடம்பெற, ஒன்பது பெண் அதிகாரிகள் இருந்தனர்.
நான்கு பெருங்கடல்கள், சர்வதேச எல்லைகோடு மற்றும் மூன்று பெரும் முனைகள் வழியாக 25,500 கடல் மைல்கள் கடக்க திட்டமிடப்பட்ட இந்த பயணத்தின் தொடக்கம், 2025 செப்டம்பர் 11 மும்பையில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டு, 314 நாட்களுக்குப் பிறகு 2026 ஜூலை 22 அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் காணொளி மூலம் கொடியசைப்புடன் நிறைவடைந்தது.
ஹரியானாவின் சிர்சாவைச் சேர்ந்த, ராணுவ செவிலியர் சேவையைச் சேர்ந்த கரம்ஜீத்கவுருக்கு.
விமானப்படையின் கணக்குப்பிரிவைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் வைஷாலி பண்டாரிக்கும் கடல்பயண அனுபவம் இல்லை. பயணுக்குழுவில் ஒரு சிலருக்கு மட்டுமே கப்பல் நுணுக்கம் தெரியும்.
சமுத்திர பிரதட்சிணம் எல்லா தீர்க்கரேகைகளையும் பூமத்தியரேகையை இருமுறை கடந்து, சர்வதேசக் கோட்டைக் கடந்து, மேலும் லீவின் முனை, ஹார்ன் முனை மற்றும் நன்னம்பிக்கை முனை. இவை பொதுவாக 3 பெரும் முனைகள் என்று அழைக்கப்படுபவை. இவற்றைச் சுற்றி வந்ததன் பயனாக ஒரு உலக பயணத்தை முடித்ததாக கருதப்படுகிறது.
அவர்களின் பயணத்தில், சிலியின் கேப் ஹார்னுக்கும் தெற்கு அண்டார்டிகாவின் ஷெட்லாந்து தீவுகளுக்கும் இடையிலுள்ள, ஹோசஸ்கடல் என்றும் அழைக்கப்படும் டிரேக் கணவாயும் அடங்கியிருந்தது; இது அதன் பிரம்மாண்டமான அலைகள், கொந்தளிப்பான ஓதம் மற்றும் புயல் வேகக் காற்றுக்காகப் பெயர் பெற்றது. 965 கி.மீ அகலமுள்ள இந்த சவாலான கடல்வழிப் பாதையை அவர்கள் வெற்றிகரமாகக் கடந்ததும், கேப் ஹார்னைச் சுற்றி வந்ததும், உலகின் மிகவும் சவாலான கடல்வழிப் பாதைகளில் ஒன்றைக் கடக்கும் மாலுமிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு கௌரவமான 'கேப் ஹார்னர்ஸ்' அவர்களுக்கு பெற்று தந்தது.
ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் மணிக்கு 60 நாட்டிக்கல் மைல் வேகத்தில் வீசிய பலத்த காற்றில், நான்கு முதல் ஐந்து மீட்டர் உயர அலைகள் கப்பலின் அடிப்பாகத்தைத் தாக்க, மிகப்பெரிய பாய்மரம் கிழிந்துபோகும் சத்தம், எந்தவொரு பாய்மரக் கப்பல் தலைவரும் கேட்க விரும்பாத ஓர் ஒலியாகும். இந்திய ராணுவப் பாய்மரக் கப்பலான (IASV) திரிவேணியின் தலைவரான லெப்டினன்ட் கர்னல் அனுஜா வருத்கர், சரியாக அந்த ஒலியைத்தான் ஒரு முறை கேட்டதாக நினைவு கூர்ந்தார்.
ஐ.ஏ.எஸ்.வி திரிவேணியும் அதன் குழுவினரும், தென் பெருங்கடலின் அபாயகரமான அலைகளையும் கேப் ஹார்னின் சீற்றத்தையும் எதிர்த்துப் போராடி, டிரேக் பாசேஜ் வழியாகப் பயணித்து, கேட்வே ஆஃப் இந்தியாவில் வெற்றிகரமாகத் திரும்பினர். அந்தக் கப்பல் ஜூலை 4 அன்று மும்பைக்குத் திரும்பியது. ஆனால் ஜூலை 22 அன்றுதான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
பயணக்குழுவின் துணைவரான, இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் ஸ்ரத்தா ராஜு, பயிற்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு பாய்மரப் படகில் கால் கூட வைத்ததில்லை.
இயல்பாகவே அவர் ஒரு ஸ்கூபா டைவர். டாஸ்மேனியாவில் நள்ளிரவில், சீற்றமடைந்த அலைகள் படகின் மீது மோதி, தென் பெருங்கடலுக்குள் படகை தள்ளிய போது ராஜுவும் கௌரும் சேர்ந்து படகின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்று, தடம் மாறிய பாய் மரத்தை சரி செய்தனர்.
அல்பட்ராஸ் பறவையைக் காண்பது அதிர்ஷ்டம் என்று மாலுமிகள் நீண்ட காலமாக நம்பி வருகின்றனர். திரிவேணியின் குழுவினர், அர்ஜென்டினா கடற்கரையில் பெங்குவின்கள், துள்ளிக் குதிக்கும் டால்பின்கள் மற்றும் சீல்கள், இரவில் கப்பலின் அலைகளை ஒளிரச் செய்யும் உயிர் ஒளிரும் ஜெல்லிமீன்கள் ஆகியவற்றுடன், அல்பட்ராஸ் பறவைகளையும் கண்டு ரசித்தனர். இந்த சாகச பயணத்தின் போது பயணக் குழு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு உள்ளனர். அதில் ஜைன உணவும் அடங்கும். "நாங்கள் எல்லா இடங்களிலும் இந்திய உணவைத் தவறவிட்டோம்" என்கிறார்கள் பயணக்குழுவினர்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாசகர்கள் நாட்டின் முப்படைப் பெண்களின் அசாத்திய துணிச்சலையும், சவால்களை எதிர்கொண்டு உலகை வெல்லும் மன உறுதியையும் உணர்ந்து உத்வேகம் பெறுவார்கள்.