இரசாயனம் வேண்டாம்! துணிக்கு இயற்கையாக சாயம் பூசும் அதிசய நதி! எங்கே உள்ளது தெரியுமா??

மத்தியப் பிரதேசத்தின் பாக் கிராமத்தில் இரசாயனமின்றி துணிகளுக்குப் பிரகாசமான சாயம் சேர்க்கும் பாகினி நதியின் ரகசியம்.
பாகினி நதி | Baghani River
பாகினி நதி | Baghani RiverImage credit: Gemini AI
அகிலா சிவராமன்

வணக்கம், நான் சென்னையில் பிறந்து வளரந்தேன். 1995 ஆம் ஆண்டு திருமணத்திறகுப் பிறகு நான் ஜம்ஷேட்பூரில் settle ஆகி விட்டேன். நான் கடவுள்களின் பெயரில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் தான் எனக்கு எழுதும் ஆர்வம் வந்தது. நான் முதன் முதலாக எழுதிய கதை, புயலின் மறுபக்கம் கல்கியின் மங்கையர் மலரில் 04.01.2025 அன்று வெளி வந்தது. கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதன்முதலாக எழுத சந்தர்ப்பம் கொடுத்த கல்கி குழுவினருக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும உங்களின் மனதை கவரும் வகையில் எழுத முயற்சி செய்வேன்.

Updated on
MM strip
MM strip

செயற்கை இரசாயனங்கள் இல்லாத, இயற்கையான முறையில் துணிகளுக்கு நிரந்தரமாக சாயம் பூசும் ஒரு வியக்கத்தக்க நதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் பாய்ந்து வருகிறது! உலகப் புகழ்பெற்ற 'பாக்' அச்சுக்கலைக்குப் பின்னால் இருக்கும் இந்த அதிசய நதியின் ரகசியமும், நம் பாரம்பரியக் கைவினைக்கலையின் சிறப்புகளும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். வாருங்கள், இந்த அற்புதக் கலையைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்!

நம்முடைய இந்தியாவில் இரசாயனங்களைப் பயன்படுத்தாமலேயே துணிகளுக்கு நிரந்தரமாகச் சாயம் பூசக்கூடிய ஒரு நதி இருக்கிறது. கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதா?? ஆனால் உண்மையிலேயே இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாமா...

சரியான நிறத்தைப் பெறுவதற்காக மக்கள் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறார்கள் மேலும் பலவிதமான இரசாயனயங்களையும் உபயோகித்து தான் சாயத்தை பூசுகிறார்கள். இரசாயனக் கலவையால் நமக்கு பல்வேறு வியாதிகளும் ஏற்படுகின்றன. ஆனால், இதே சாயம் பூசுவதை இரசாயனமே இல்லாமல் இயற்கையாகவும் அதே சமயத்தில் மிகச் சரியாகவும் செய்யும் வகையில் ஒரு நதி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா??

நமக்கு இது சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இந்த யோசனை மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாக் என்ற கிராமத்து மக்களால் உருவானது. மேலும் இந்த பாக் அச்சுக்களின் மாயாஜாலம், இயற்கையுடனான உறவை, குறிப்பாக பாக் கிராமத்தின் வழியாகப் பாயும் பாகினி நதியை அடிப்படையாகக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
சண்டைகளைத் தாண்டி கணவன் - மனைவி மனதில் அன்பை வளர்க்கும் எளிய வழி முறைகள்!
பாகினி நதி | Baghani River

தார் மாவட்டத்தில் உள்ள பாகின் என்ற சிறிய கிராமத்திலுள்ள இந்த பாகினி ஆறு மற்ற ஆறுகளை விட முற்றிலும் மாறு பட்ட விதத்தில் செயல்படுகிறது. ஆம்!! இந்த ஆறு துணிகளுக்கு வண்ணமளிக்கிறது. இந்த ஆற்றின் நீரில் இயற்கையாகவே கால்சியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருக்கும் காரணத்தினால் துணி பட்ட கணமே, சாயங்கள் பிரகாசமாக, அடர்த்தியாக மேலும் உயிர்பெற்றும் மாறுகின்றன. துணிகளும் மென்மையடைகின்றன.

இந்த பாகின் நதியிலிருந்துதான் இந்தியாவின் மிகவும் பிரசித்த பெற்ற இயற்கை ஜவுளிகளில் ஒன்றான 'பாக்' அல்லது 'பாகின் பிரிண்ட்' உருவாகிறது. இந்தக் கைவினைக்கலை தற்போது உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திய வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியாக மட்டுமே இருந்த பாகின் கிராமம், இப்போது இந்த நதிக்காகவும் இந்தக் கலைக்காகவும் உலகளவில் அறியப்பட்டு வருகிறது.

பாகினி நதி நீரில் உள்ள அதிக கனிமச் சத்து, குறிப்பாக அதனுள் அடங்கியுள்ள செம்பு, சாயமிடும் செயல் முறையில் ஒரு இயற்கையான வினையூக்கியாக அல்லது சாயமூன்றியாகச் செயல்பட்டு, செயற்கை இரசாயனங்களின் உதவி இல்லாமலேயே வண்ணங்களை அடர்த்தியாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்கவும் வழி வகுக்கிறது. இந்த இயற்கையான செயல்முறையானது, துணியில் உள்ள மாவுச்சத்தை நீக்குவதற்காக ஆற்றுக்கற்களில் துணியைக் கழுவும் 'காரா' என்ற முறையுடன் தொடங்குகிறது; பின்னர், தாமிரம் நிறைந்த நீரோட்டத்தில் துணி மூழ்கடிக்கப்பட்டு, பிறகு அதை நன்றாக காய வைத்து சாயமிடுவதற்காக தயார் செய்யப்படுகிறது.

பாகினி நதி | Baghani River and Bagh Print
பாகினி நதி | Baghani River and Bagh PrintImage credit: Gemini AI

இந்த வகை சாய அச்சுக்களின் மிக முக்கியமான அம்சம் கை அச்சுப் பதிப்பு ஆகும். இது புளி, மாதுளைத் தோல், இரும்புத் துரு மற்றும் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாவரச் சாயங்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. சாயம் அச்சிடப் பட்ட பிறகு அலிசரின் மற்றும் தாவடி சாற்றில் (Alizarin and thavadi extract) அதாவது சிவப்பு அல்லது ஆரஞ்சு படிகம் மற்றும் காட்டாத்தி பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றில் இந்த துணிகள் கொதிக்க வைக்கப் படுகின்றன. இறுதியாக, அந்தத் துணிகளை ஆற்றில் பலமுறை அலசுகிறார்கள்.

கடைசியாக அலசும் போது நிறம் மாறாமலும் மேலும் துணிகள் மீது படிந்திருக்கும் கறைகளும் அகற்றப் படுகின்றன. மேலும் இரசாயனப் பொருட்கள் இல்லாமலேயே நிறங்கள் பிரகாசமாகவும் நீடித்து உழைக்கும் தன்மையையும் இந்த துணிகள் பெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும் யோகா தரும் பயன்கள்!
பாகினி நதி | Baghani River

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, பாக் அச்சுக்கலையானது, சிந்துவிலிருந்து தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டுவந்த கத்ரி சமூகத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. 1962-ஆம் ஆண்டில், அவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாகினி ஆற்றைக் கண்டறிந்து, அதன் செம்புச்சத்து நிறைந்த நீரை அவர்கள் கண்டுபிடித்தார்கள். மேலும் அந்த நீர், எந்தவொரு இரசாயன பொருட்களின் உதவி இல்லாமலேயே சாயங்களைப் பிரகாசமாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்க செய்யும் என்பதையும் அவர்கள் கண்டறிந்தார்கள். பாகினி ஆற்றின் இந்த தனித்துவமான தரம் நம் இந்திய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், இந்த கைவினைக் கலையில் பொதிந்துள்ள இயற்கையையும் நமக்கு எடுத்து காட்டுகிறது.

ஆறுகள் வறண்டு போகும் காரணத்தினாலும் மாசுபடுவதாலும் பாக் அச்சுக்கலையின் எதிர்காலமும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த இயற்கையை தக்க வைக்கும் பொறுப்பு மக்களாகிய நம் கைகளில் தான் இருக்கிறது.

இரசாயன நச்சுகளிலிருந்து விலகி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆடைகளை அணிவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக்கலையையும் எவ்வித தடையுமின்றி உங்கள் தினசரி வாழ்வில் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com