'லேப்' வைரங்கள் வாங்குவது புத்திசாலித்தனமா? அதிர்ச்சித் தகவல்கள்!

குறைந்த விலையில் வைரம் வாங்க முடியுமா? இயற்கை வைரம் Vs ஆய்வக வைரம்: நிலையான முதலீடா அல்லது நவீன நாகரீகமா?
Difference between natural and lab diamonds
Difference between natural and lab diamonds
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on
Mangayarmalar strip
Mangayar malar

வைரங்கள் என்பவை இயற்கையின் அதிசயம். அவை பூமிக்கு அடியில் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக அதீத அழுத்தம் மற்றும் வெப்பத்தால் உருவானவை. அதிசயிக்க வைக்கும் ஒளியும், காலத்தால் அழியாத வலிமையும் கொண்ட வைரங்கள் இயற்கையின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவை, இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆய்வகங்களிலும் உயிர் பெறுகின்றன. இந்த நவீன மாற்றம் வைரங்களின் உலகில் ஒரு புதிய புரட்சியையும், சுவாரசியமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

1. உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு:

ரஷியாவின் 'அல்ரோசா' மற்றும் 'டி பீர்ஸ்' போன்ற நிறுவனங்களின் சுரங்கங்கள் தற்போது தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. புதிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாததால், இயற்கை வைரங்களின் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. மறுபுறம், ஆய்வக வைரங்கள் நவீனத் தொழில்நுட்பம் மூலம் வெறும் 3 முதல் 4 வாரங்களில் உருவாக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இவற்றின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதால், சந்தையில் இவற்றின் வரத்து அபரிமிதமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
Oh My God! 27 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்ட நெக்லஸ்! தங்கமா? வைரமா? ரெண்டுமே இல்லீங்க...
Difference between natural and lab diamonds

2. விலை சரிவின் பின்னணி

நிபுணர்களின் ஆய்வின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆய்வக வைரங்களின் விலை சுமார் 70% முதல் 80% வரை குறைந்துள்ளது. வைரம் தயாரிக்கும் இயந்திரங்களின் செலவு மற்றும் உற்பத்திச் செலவு பெருமளவு குறைந்துவிட்டதும், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஆய்வக வைர உற்பத்தியில் முன்னணியில் இருப்பதால் ஏற்பட்டுள்ள கடும் போட்டியும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

இயற்கை வைரங்களின் விலை அவ்வப்போது மாறினாலும், அவை ஒரு அடிப்படை மதிப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஆனால், ஆய்வக வைரங்கள் ஒரு 'நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ்' பொருள் போலச் செயல்படுகின்றன. ஒரு மொபைல் போன் வாங்கியவுடன் அதன் மதிப்பு குறைவதைப் போல, ஆய்வக வைரங்களும் வாங்கிய பிறகு மிகக் குறைவான மதிப்பையே பெறுகின்றன.

3. மறுவிற்பனை:

இந்தியக் கலாச்சாரத்தில் நகைகள் என்பவை வெறும் அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல, அவை சிறந்த முதலீடும், சேமிப்பும் கூட. இயற்கை வைரத்தை விற்கும்போது, அதன் அன்றைய சந்தை விலையில் 80% முதல் 90% வரை பணமாகவோ அல்லது நகையாகவோ திரும்பப் பெற வாய்ப்புள்ளது. இது ஒரு பாதுகாப்பான முதலீடு. ஆனால், பெரும்பாலான பெரிய ஜுவல்லரி கடைகள் ஆய்வக வைரங்களுக்கு ‘பை-பேக்' (Buy back) வசதியை வழங்குவதில்லை. அப்படியே வழங்கினாலும், அதன் மதிப்பு வாங்கிய விலையில் 10% அல்லது 20% கூட இருக்காது.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்? (Difference between natural and lab diamonds)

எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்கள் தேவையைப் பொறுத்தது. பாரம்பரியத்தை விரும்புபவராகவோ அல்லது ஒரு முதலீட்டாளராகவோ இருந்தால், இயற்கை வைரமே உங்களுக்குச் சரியான தேர்வு. ஏனெனில் இது நீண்ட கால மதிப்பையும், கௌரவத்தையும் தருவதோடு பாதுகாப்பான மறுவிற்பனைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. அதே சமயம், நீங்கள் ஒரு பட்ஜெட் வாசியாகவோ அல்லது ஃபேஷன் பிரியராகவோ இருந்தால் ஆய்வக வைரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இது குறைவான விலையில் பெரிய அளவிலான வைர நகைகளை அணிய வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்.

இதையும் படியுங்கள்:
சமந்தாவின் வைர மோதிரத்தில் ஒளிந்திருக்கும் முகலாய கால வரலாறு!
Difference between natural and lab diamonds

நீங்கள் வாங்கும் வைரம் தலைமுறை கடந்து செல்ல வேண்டும், அது ஒரு குடும்பச் சொத்தாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், இயற்கை வைரமே சரியான தேர்வு. மாறாக, நீங்கள் ஒரு பார்ட்டிக்காக அல்லது தினசரி அலுவலகப் பயன்பாட்டிற்காக ஒரு மின்னும் நகை வேண்டும், அதற்கு அதிக முதலீடு செய்யத் தேவையில்லை என நினைத்தால், ஆய்வக வைரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், ஆய்வக வைரம் வாங்கும் பணத்தை ஒரு 'செலவாக' மட்டுமே கருத வேண்டுமே தவிர, அதை ஒருபோதும் 'முதலீடாக' எண்ணக் கூடாது.

logo
Kalki Online
kalkionline.com