முதியோர் இல்லங்கள் வரமா சாபமா? தனிமையில் வாடும் பெற்றோரின் கண்ணீர் கதை

பெருகிவரும் முதியோர் இல்லங்கள் சமூக மாற்றமா அல்லது குடும்ப உறவுகளின் வீழ்ச்சியா? முதுமைப் பருவ சவால்களும் தீர்வுகளும் குறித்த விரிவான அலசல்.
முதியோர் இல்லங்கள் | Old woman
முதியோர் இல்லங்கள் | Old womanAI Image
Updated on

முதியோர் இல்லங்கள் அதிகரிப்பது சமூக மாற்றத்தின் அடையாளமாக இருந்தாலும், குடும்ப அன்பு குறைவதைக் காட்டுகிறது. வெளிநாடு செல்லும் பிள்ளைகள், வேலைச்சுமையில் தத்தளிக்கும் குடும்பங்கள் காரணமாக, முதியவர்கள் தனிமையில் வாடுகின்றனர். சன்னல் வாசலில் மகனை எதிர்நோக்கும் முதிய தாயின் கண்ணீர், முதுமை ஒரு நோயல்ல; அன்பு குறைவின் விளைவு என்பதை உணர்த்துகிறது.

பச்சிளம் குழந்தை, பாலகன், இளைஞன் என்று வாழ்க்கையின் பல கட்டடங்களைக் கடந்து முதுமையை சந்திப்பது என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்று.. ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரன் என்ற வேறுபாடின்றி இந்த முதுமைப் பருவத்தில் பலரும் தனிமையில் தள்ளப்படுகின்றனர்.. பொருளாதார முன்னேற்றத்திற்காக பிள்ளைகள் வெளிநாடு செல்வதும், கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்கள் அதிகரிப்பதும் வயதான பெற்றோர்களைப் பராமரிப்பதில் பல சவால்களை உருவாக்கி உள்ளது.. பலர் வேறு வழியின்றி முதியோர் இல்லங்களை நாடுகின்றனர்.. பலருக்கு அது பாதுகாப்பாக இருந்தாலும் குடும்ப அன்பிற்கு மாற்றாக எதுவும் இருக்க முடியாது..

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்ற நண்பர் ஒருவர் கூறிய சம்பவம் மனதை நெகிழ வைத்தது.

அங்கு வயதான பெண்மணி ஒருவர் அமைதியாக சன்னல் வழியே சாலையைப் பார்த்து கொண்டு இருந்ததைக் கண்டவர்கள் என்ன என்று கேட்க "பொருளாதார தேவைக்காக என் மகன் வெளிநாடு சென்று விட்டான்.. வருடம் ஒரு முறை என்னை பார்க்க வரும் போது இன்றாவது என்னை அவனுடன் அழைத்துச் செல்ல மாட்டானா என்று ஒவ்வொரு முறையும் ஏக்கமாக இருக்கும். இன்று என் மகன் என்னைப் பார்க்க வருவான்.. அதுதான் வாசலையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்று கண்கலங்க கூறினாராம்.. அந்த வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்ததாம்..

முதியோர் இல்லங்கள் | old woman
முதியோர் இல்லங்கள் | old womanAI Image

ஏழை மக்களின் நிலை இன்னும் வேதனையானது.. வயது முதிர்ந்த காலத்தில் உணவு, மருந்து மருத்துவ செலவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் முதியவர்கள் ஏராளம்.. பிள்ளைகளும் பொருளாதாரச் சுமையில் தவிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் தவிக்கின்றனர்..

இன்று பெருகி வரும் முதியோர் இல்லங்கள் சமூக மாற்றத்தின் அடையாளமாக இருக்கலாம்.. ஆனால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குடும்ப உறவுகளின் அரவணைப்பு குறைவதைத் தான் காட்டுகிறது..

இன்று மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளதால் மனிதர்களின் ஆயுட்காலம் நீண்டுள்ளது.. ஆனால் ஆயுள் நீண்டாலும் அன்போடு வாழும் காலம் நீளுகிறதா என்ற கேள்வி எழுகிறது..

முதுமை ஒரு நோய் அல்ல.. அது வாழ்க்கையின் இயல்பான பருவம்.. இன்று இளமையாக இருப்பவர்கள் நாளை முதுமையை எதிர்நோக்குவார்கள்.. இது நம் அனைவருக்கும் பொருந்தும்..

பெற்றோருக்கு நாம் அளிக்கும் அன்பும் ஆதரவும் நம் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக அமையும்..

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க சில டிப்ஸ்!
முதியோர் இல்லங்கள் | Old woman

குழந்தைகள் நாம் சொல்வதைக் காட்டிலும் நாம் வாழ்ந்து காட்டுவதையே ஒரு பாடமாக நினைத்து கற்றுக் கொள்கிறார்கள்.

முதியோரை மதித்து அவர்களைப் பராமரிப்பது குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு நல்ல பண்புகளை விதைக்கும்.. அன்பும் கருணையும் நிறைந்த ஒரு குடும்பம் முதியோருக்கான மிகச்சிறந்த இல்லம்..

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்"

அதாவது ஒருமகன் தன் தந்தைக்கு ஆற்றும் உதவி ", இவனைப் போல மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று உலகம் புகழும் வகையில் வாழ்வதே ஆகும்..",சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே", என்று புறநானூறு தந்தையின் கடமையைச் சுட்டிக்காட்டுகிறது..

அத்தகைய பண்புள்ள மகன் பெற்றோரை இறுதி வரை அன்போடு பேணிக் காக்க வேண்டும் அல்லவா?

பெருகி வரும் முதியோர் இல்லங்கள் வரமா சாபமா என்பதை விட வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு உழைத்தவர்கள் முதுமை காலத்தில் அவர்களை அன்புடன் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும்..

பாலூட்டி, தாலாட்டி தோளில் சுமந்து கல்வி கற்க வைத்து வேலை கிடைக்கும் வரை பிள்ளைகள் மனம் கோணாமல் பார்த்து கொண்டு அதன் பின் திருமணம் செய்து வைத்து அவர்கள் பிள்ளைகளையும் வளர்த்து பாசத்திற்கும் பண்பாட்டிற்கும் இலக்கணமாக திகழ்பவர்கள் பெற்றோர் தான்..

இதையும் படியுங்கள்:
ஆண்களை விட பெண்கள் மிக வேகமாக மது பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் - ஏன் தெரியுமா?
முதியோர் இல்லங்கள் | Old woman

வேறு வழியின்றி தான் எங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்கிறோம்.. எங்களுக்கு அன்பும் பாசமும் இல்லாமல் இருக்குமா? பொருளாதார தேவைக்காக வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்கும் இளைஞர்கள் கூறுவதும் மனதிற்கு கஷ்டமாக தான் இருக்கிறது.. முதுமைப் பருவத்தில் பலரும் எதிர் நோக்கும் இந்த பிரச்சினை தீர வழி தான் என்ன என்று தெரியவில்லை..

முதியோரைப் பாதுகாக்கும் உத்திகளை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் குடும்பத்தில் தலைமுறை இடைவெளியைக் குறைத்து, அன்பும் பாசமும் நிறைந்த நிம்மதியான கூட்டு வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com