பப்ளிக் டாய்லெட், ATM பட்டன் தொட பயமா? கிருமிகளை விட ஆபத்தான விஷயம் இதுதான்!

பப்ளிக் டாய்லெட், ATM பட்டன் போன்ற பொது இடங்களில் கிருமிகள் இருக்குமோ என்ற பயத்தில் பாத்ரூம் அடக்கி வைக்கிறீர்களா? அறிவியல் சொல்லும் எளிய வழிகள்.
கிருமி | Public hygiene
கிருமி | Public hygieneImage credit: Chatgpt
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

வெளியூர் பயணங்களின் போது பப்ளிக் டாய்லெட், பஸ் சீட், ஏடிஎம் பட்டன் ஆகியவற்றைத் தொடவே தயங்குகிறீர்களா? "நூறு பேர் தொட்ட இடமாச்சே, கிருமி இருக்குமோ?" என்ற பயம் உங்களுக்கும் இருக்கிறதா? உங்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் உண்மைகளும், எளிய தீர்வுகளும் இதோ!

நானும் சரி, என் கூட டிராவல் பண்ற பிரண்ட்ஸும் சரி, பல தடவை இந்த விஷயத்த பத்தி பேசியிருக்கோம். வெளியூர் போகும்போது பப்ளிக் டாய்லெட், பஸ் மற்றும் ட்ரெயின் சீட், ஏடிஎம் (ATM) பட்டன், லிப்ட் பட்டன், ஹோட்டல் சேர், தியேட்டர் சீட், கடைகள்ல இருக்குற டிராலி இதையெல்லாம் தொடவே ஒருவித தயக்கமும், பயமும் வரும். "நூறு பேர் தொட்ட இடமாச்சே, இதுல எவ்வளவு கிருமி இருக்குமோ?" அப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருப்போம்.

இந்தப் பயம் தப்புன்னு சொல்ல முடியாது; ஏன்னா பொது இடங்கள்ல கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குதான். ஆனா, சயின்ஸ் என்ன சொல்லுதுன்னா, ஒரு இடத்துல கிருமி இருக்குங்கிறதுக்காகவே நமக்கு உடனே வியாதி வந்துடாது.

நம்ம தோலும், உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்தியும் தினமும் ஆயிரக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத சின்னக் கிருமிகள சமாளிச்சுதான் வாழ்ந்துட்டு இருக்காம்.

இதுல உண்மையான பிரச்னை கிருமிகள் இல்ல; அதை நினைச்சு நாம படுற தேவையில்லாத பதட்டம்தான்! உதாரணத்துக்கு, ஒரு லாங் பஸ் டிராவல்ல நமக்கு அவசரமா பாத்ரூம் போகணும்னு தோணுது வச்சுக்கோங்க. அந்த நேரத்துல "பப்ளிக் டாய்லெட் அழுக்கா இருக்குமோ"ன்னு பயந்து அடக்கி வச்சா, அந்த டாய்லெட்டால வர்ற ஆபத்தை விட, நம்ம உடம்புக்கும் மனசுக்கும்தான் பெரிய பாதிப்பு வரும்.

இதையும் படியுங்கள்:
அம்மனுக்கு சுடச்சுட பர்கர், பாஸ்தா பிரசாதம்! இந்த அதிசய கோவில் எங்குள்ளது?
கிருமி | Public hygiene

இங்க நாம ரெண்டு விஷயத்த புரிஞ்சுக்கணும். கிருமி இருக்க 'வாய்ப்பு' இருக்கு, ஆனா அது நமக்கு வியாதியக் கொண்டு வருவது 'நிச்சயம்' கிடையாது. மனதளவில தயாரா இருக்குறவங்க, "ஐயோ இது அழுக்கா இருக்குமோ?"ன்னு பயப்படுறத விட்டுட்டு, "இப்போ நான் எப்படி கவனமா இருக்கணும்?"னுதான்? யோசிப்பாங்க.

ரொம்ப பயந்து எதையுமே தொடாம இருக்குறதும் தப்பு; அதே சமயம் சுத்தமே இல்லாம கவனக்குறைவா இருக்குறதும் தப்பு. இந்த ரெண்டுக்கும் நடுவுல இருக்குற பேலன்ஸ்தான் ஆரோக்கியமான வாழ்க்கை.

வெளிய போகும்போது கையில ஒரு சின்ன சானிடைசர் (Sanitizer), டிஷ்யூ பேப்பர் வச்சுக்கோங்க. சோப்பு இருந்தா நல்லா கை கழுவுங்க; கை கழுவுறதுக்கு முன்னாடி தேவையில்லாம முகத்துல, கண்ணுல, மூக்குல கைய வைக்காதீங்க. இவ்வளவு செஞ்சாலே போதும், நாம பாதுகாப்பா இருக்கலாம். வெளிய எங்கேயுமே போகாம, எதையுமே தொடாம இருக்குறது நிஜ வாழ்க்கையில முடியாத விஷயம், அது அவசியமும் இல்ல.

கிருமி | Public hygiene
கிருமி | Public hygieneImage credit: Gemini AI

அதேபோல, பொது இடங்கள பயன்படுத்துறதுக்கு முன்னாடி சின்னச் சின்ன விஷயங்கள கவனிச்சாலே போதும், தேவையில்லாத பயத்த தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, பப்ளிக் டாய்லெட் போகும்போது சுத்தமா இருக்குற வெளிச்சமான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறது, கதவு ஹேண்டில புடிச்சி திறக்கும்போது ‘டிஷ்யூ பேப்பர்’ பயன்படுத்துறது; இந்த மாதிரி சின்னப் பழக்கங்கள் நம்ம மனசுக்கு பெரிய நிம்மதியையும், தைரியத்தையும் கொடுக்கும்.

இதுல பல பேருக்கு தெரியாத சுவாரஸ்யமான சயின்ஸ் உண்மை என்னன்னா, நம்ம உடம்புக்குள்ளேயே ஏற்கனவே லட்சக்கணக்கான கோடி கணக்குல நல்ல பாக்டீரியாக்கள் இருக்கு; அதுல நிறைய நமக்கு நன்மை செய்றவைதான்.

அதேமாதிரி, பார்ப்பதற்குப் பளிச்சுனு சுத்தமா தெரியுற ஒரு மேஜையில கூட கிருமிகள் இருக்கலாம்; இதே அழுக்கா தெரியுற இடத்துல நோய்க் கிருமிகள் இல்லாமலும் இருக்கலாம். அதுமட்டுமில்ல, ஹெல்த் சைக்காலஜி (Health Psychology) ஆய்வுகள் என்ன சொல்லுதுன்னா, கிருமிகளை நினைச்சு அளவுக்கு அதிகமா பயந்து டென்ஷன் ஆகுறதுதான் நம்ம மன அழுத்தத்தை அதிகப்படுத்தி, உடம்போட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்குதாம்!

இதையும் படியுங்கள்:
கீழே விழுந்தாலும் பயந்தாலும் ஏன் 'அம்மா' என்று கத்துகிறோம்? அறிவியல் ரகசியம்!
கிருமி | Public hygiene

அதனால, பொது இடங்கள யூஸ் பண்ண வேண்டிய நேரம் வரும்போது பயப்படாம பயன்படுத்துங்க. நார்மலான சுத்தத்த பின்பற்றுங்க, தேவையான சானிடைசர், டிஷ்யூவை கையில வச்சுக்கோங்க. 

சோ, எதை எதையோ நினைச்சு பயப்படறத விட்டுட்டு, சயின்ஸ் சொல்ற எளிய ‘சேப்டி விஷயங்கள’ நம்பி, நிம்மதியாவும் தன்னம்பிக்கையாவும் வெளிய போயிட்டு வாங்க!.

இந்தக் கட்டுரையை வாசிக்கும்பொழுது, பொது இடங்களைப் பயன்படுத்தும்போது ஏற்படும் தேவையற்ற அருவருப்பையும் மன அழுத்தத்தையும் முழுமையாகக் களைந்து, தன்னம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கும் மனநிலையைப் பெறுவீர்கள்.