கீழே விழுந்தாலும் பயந்தாலும் ஏன் 'அம்மா' என்று கத்துகிறோம்? அறிவியல் ரகசியம்!

காயம் படும்போதோ அல்லது பயம் வரும்போதோ நாம் ஏன் 'அம்மா' என்று அழைக்கிறோம்? மனித மூளையின் செயல்பாடு மற்றும் ஹார்மோன் சுரப்பு பற்றிய முழுத் தகவல்கள்.
அம்மா | A man with an injured leg
அம்மா | A man with an injured leg
அகிலா சிவராமன்

கடந்த 5 வருடங்களாக அகிலா சிவராமனின் கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 
MM strip
MM strip

கீழே விழுந்தாலோ, பயம் என்றாலோ, அல்லது வலி தாங்க முடியாத போதோ எந்த வயதினராக இருந்தாலும் நம் நாவில் முதலில் வருவது 'அம்மா' என்ற சொல் மட்டுமே. உலகெங்கும் உள்ள மனிதர்களும் ஏன் விலங்குகளும் கூட ஆபத்தில் தாயையே அழைக்கின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமூட்டும் உளவியல் காரணங்கள் மற்றும் மூளை வெளிப்படுத்தும் ரகசிய ஹார்மோன்களின் அற்புத உண்மைகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

அம்மா என்று அழைக்காத ஜீவனே இந்த உலகத்திலே கிடையாது. ஆனால் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா?? அதாவது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.. கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது ஒரு மன கஷ்டம் வந்தாலோ.. இல்லை எதையாவது பார்த்து பயந்தாலோ அல்லது வலி தாங்க முடியாத உபாதை இருந்தாலோ அம்மா என்று தானே கூப்பிடுகிறார்கள்.. 

எந்த வயதினராக இருந்தாலும் சரி...  சிறிய குழந்தையிலிருந்து 80 வயது, 90 வயது ஆனால் கூட உடம்பு முடியவில்லை என்றால் அம்மா என்று தானே கூப்பிடுகிறோம். ஏன் அப்படி அம்மா என்று அழைக்கிறோம்??

அப்பா, அண்ணன், தங்கை மகன், மகள் என எல்லோரும் இருக்கையில் நாம் அம்மாவை மட்டும் ஏன் அழைக்கிறோம் இதற்கான காரணம் என்ன?? நானும் பலமுறை யோசித்ததுண்டு... சரி, காரணத்தை பார்க்கலாமா..

ஒரு குழந்தையானது, தன்னுடைய தாயின் வயிற்றில் தான் பத்து மாதம் இருக்கிறது. ஆகவே அந்த குழந்தை பிறந்து அறிவு வளர்வதற்கு முன்னாலேயே அதன் மூளையில் பாதுகாப்பு என்றாலே அம்மாதான் என்று பதிந்து விடுகிறது. ஆகவே அந்த குழந்தையின் மூளையின் சப்கான்சியஸ் மைண்டிலும் இதுதான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு அவசர உதவி: 181, 112, காவலன் செயலி எப்படிப் பயன்படுத்துவது?
அம்மா | A man with an injured leg

மேலும், குழந்தை பிறந்த உடனேயே  முதன் முதலாக அந்த குழந்தைக்கு தன் தாய்ப்பாலை கொடுத்து பேச கற்றுக் கொடுப்பது நடக்க வைப்பது என எல்லாமே அந்த தாய் தான். எனவே தான் வயிற்றிற்குள் கிடைத்த பாதுகாப்பு, முதலில் பார்த்த முகம், உணவு கொடுத்த முகம், அரவணைக்கும் முகம் என எல்லாவற்றிற்கும் இந்த அம்மா முகம் தான் மூளையில் first program ஆக பதிந்து விடுகிறது.

இந்த காரணத்தினால் தான், ஆபத்து ஏற்படும் போதோ அல்லது வலியை பொறுக்க முடியவில்லை என்றாலோ, நம்முடைய மூளை பாதுகாப்பை தூண்டும் வகையில் நம்மை உடனடியாக நம்மை அம்மா என்று கத்த வைக்கிறது.  

மாநிலம் வேறுபட்டு இருக்கலாம் மொழிகள் வேறுபட்டு இருக்கலாம். மம்மி, மம்மா, மா, மாதாஜி, ஆத்தா என பல்வேறு பெயர்களில் இந்த அம்மாவை அழைக்கிறார்கள். அழைக்கின்ற விதம் மாறி இருந்தாலும் அழைப்பது ஒருவரை மட்டும் தான். ஆம்!! உலகத்திலுள்ள எல்லா நாட்டிலும் உள்ள குழந்தையின் சப்கான்சியஸ் மைண்டில் பாதுகாப்பு என்றால் அம்மா தான் என்று அறிவு வளர்வதற்கு முன்னாலேயே மூளையில் பதிந்து விடுகிறது.

மனிதர்கள் மட்டுமில்லாம் பசு, ஆடு இவை எல்லாம் கூட வழி தவறி விட்டால் அம்மா.. மே.. என்று தான் கூப்பிடுகிறது. அவை கூட தங்களுடைய பாதுகாப்பிற்காக அம்மாவைத்தான் கூப்பிடுகின்றன.. ஆக மொத்தத்தில் அம்மா என்றால் பாதுகாப்பு..

இதைத் தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது.

நாம் வலியால் துடிக்கும் போதோ அல்லது துக்கத்தில் இருக்கும் போதோ அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போதோ, நாம் அம்மா என்று அழைத்தாலோ அல்லது அம்மாவின் குரலைக் கேட்டாலோ அல்லது அந்த தருணத்தில் அம்மாவை நினைத்தாலே போதும். உடனடியாக ஒரு ஆறுதல் கிடைக்கும். எப்படி தெரியுமா??

அம்மா | a old woman with her mother photo
அம்மா | a old woman with her mother photoImage credit: Gemini AI

நாம் அம்மா என்றழைத்தாலோ அல்லது அவர்களுடைய குரலை நாம் கேட்கும் போது நம் உடலில் ஆக்ஸிடாசின் (Oxytocin) மற்றும் எண்டோர்பின்ஸ் (Endorphins) என்கிற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை வலியைக் குறைக்கின்றன, மனதை அமைதிப்படுத்துகின்றன. இதனால் தான் நம்முடைய உடலும் மனதும் இயற்கையாகவே அந்த ஆறுதலைத் தேடி அம்மாவை அழைக்கிறது.

ஆகவே, ஒரு குழந்தைக்கு அம்மா மிகவும் அவசியம். அந்த குழந்தையின் மூளைக்கு பாதுகாப்பாக இருப்பது அம்மா.. மேலும் அம்மா என்று அழைக்கும் போது அந்த குழந்தையின் மனநிலை முற்றிலும் ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் தைரியமாகவும் இருக்கும்.

இந்த காரணத்தினால் தான் நம் முன்னோர்கள் குழந்தை பிறந்த உடனேயே ஒரு வேளை தாய் இறந்து விட்டால் அந்த கணவருக்கு உடனடியாக மறுமணம் செய்து வைத்தார்கள். அந்த குழந்தை பிறந்து வளர்ந்து நான்கைந்து வருடம் கழித்து இறந்தால் கூட ஆண்களுக்கு மறுமணம் செய்து வைப்பதற்கான காரணம் இதுதான்.

நாம் கூட கேட்போம்.... ஏன் மனைவி இறந்தால் ஆணுக்கு உடனே திருமணம் செய்கிறார்கள்?? ஆனால் அதைப் போல பெண்களுக்கு செய்வதில்லையே.. ஏன்?? என்று கேட்போம்.. இந்த காரணத்தை மனதில் வைத்து தான் நம் முன்னோர்கள் ஆண்களுக்கு மறுமணம் செய்தார்கள்.

ஒரு குழந்தை தன் தாயின் ரூபத்தில் இன்னொரு தாயை மனதார ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை அம்மா என்று அழைக்கும் போது அந்த குழந்தையை அறியாமலேயே அந்த குழந்தையின் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒரு குழந்தை கண்டிப்பாக அம்மா என்ற வார்த்தையை அதாவது அவரவர்கள் மொழிக்கேற்ப கூறியே ஆக வேண்டும். அம்மாவின் குரலை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இது வெறும் குழந்தை பருவத்திற்கு மட்டுமல்ல. நமக்கு எத்தனை வயதானாலும் நேரடியாக அம்மாவை பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை என்றாலும் போன் மூலமாக பேசலாம்.. அப்படி பேசும் போது அவருடைய குரலும் நமக்கு கிடைக்கும். நாமும் அவரிடம் பேசும் போது அம்மா என்கிற வார்த்தையை உபயோகிக்க முடியும்.

அப்படி போன் மூலமாக பேச முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் போனில் ஒரு மெசேஜை வாரத்திற்கு ஒருமுறை போட்டாலே நமக்கு நிச்சயமாக ஒரு ஆறுதல் கிடைக்கும். மனதிலே ஒரு இன்பம் வரும்.

இதையும் படியுங்கள்:
மிக்ஸியில் அரைக்கும்போது சத்தம் அதிகமாக வருவது ஏன் தெரியுமா?
அம்மா | A man with an injured leg

ஆகவே துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட பதவி உயர்வு வந்தாலும் சரி அம்மாவை மட்டும் மறந்து விடாதீர்கள்.. எத்தகைய பிஸி லைஃப் இருந்தாலும் வாரத்தில் ஒருமுறையாவது அம்மாவிடம் பேசுங்கள்..... அம்மாவின் குரலை கேளுங்கள்......

ஒரு வேளை தாய் இறந்து விட்டால் கூட அவளுடைய புகை படத்தை உங்களிடம் எப்போதும் வைத்திருங்கள். அவள் பேசிய வார்த்தைகள் ஏதாவது ரெக்கார்டிங் செய்யபட்டிருந்தால்  அதை ஓய்வு நேரத்தில் போட்டு கேளுங்கள்...

வாழ்க வளமுடன்!!!!

இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், மனிதனின் ஆழ்மனம் மற்றும் ஹார்மோன் சுரப்புக்கும் தாய்க்கும் உள்ள ஆழமான தொடர்பை அறிந்து, வாழ்நாளின் எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் மன உறுதியையும் இயற்கையான ஆறுதலையும் பெற முடியும்.