கர்ப்பிணி பெண்களே, உஷாரா இருங்க!

Vitamin D
Vitamin D
Published on

வைட்டமின் டி குறைபாட்டோடு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ADHD, schizophrenia மற்றும் Autism போன்ற மனநலக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

71,000 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து தரவை பகுப்பாய்வு செய்து, ஆராய்ச்சி செய்ததில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வைட்டமின் டி குறைபாட்டை பல நரம்பியல் வளர்ச்சி நிலைமைகளின் அதிகரித்த அபாயங்களுடன் நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்புபடுத்தினர்.

ஆரம்பகால வைட்டமின் டி மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் கர்ப்ப காலத்திலும், குழந்தைப் பருவத்திலும் மனநலக் கோளாறுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதற்கான பரிந்துரைகளை எடுத்துரைக்கின்றன.

ஆராச்சியாளர்களின் முக்கிய குறிப்புகள்:

1. அதிகரிக்கும் ஆபத்து: குறைந்த வைட்டமின் டி உள்ள குழந்தைகளுக்கு ADHD, schizophrenia மற்றும் Autism உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

2. பரவலான குறைபாடு: உலகளவில் கர்ப்பிணிப் பெண்களில் வைட்டமின் டி குறைபாடு பொதுவாக காணப்படுகிறது.

3. தடுப்பு முறைகள்: ஆரம்ப காலத்திலேயே வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை எடுத்து கொண்டால், மனநல கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.

குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் மூளை நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் மெக்ராத், ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் தேசிய பதிவு அடிப்படையிலான ஆராய்ச்சி மையம் மற்றும் டென்மார்க்கில் உள்ள மாநில சீரம்(serum) நிறுவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

அவர் 6 மனநல கோளாறுகளை ஆய்வு செய்ததாக கூறினார - major depressive disorder, bipolar disorder, schizophrenia, attention deficit/hyperactivity disorder (ADHD), autism spectrum disorder (ASD) and anorexia nervosa.

குழந்தை பருவத்தில் வைட்டமின் டி செறிவு குறைவாக இருந்தவர்களுக்கு schizophrenia, ஏஎஸ்டி மற்றும் ஏடிஎச்டி ஏற்படும் அபாயம் அதிகரித்ததற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்தோம்" என்று பேராசிரியர் மெக்ராத் கூறினார்.

"ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வைட்டமின் டி முக்கியமானது, மேலும், பொதுவாகவே இன்றைய நாட்களில் உலகம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைந்த வைட்டமின் டி அளவுகளே உள்ளன," என்றும் அவர் கூறினார்.

இதனால் தான் பல நாடுகளில் டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்து கொள்ள பரிந்துரைக்கின்றனர் என்பது அவருடைய ஆணித்தரமான கருத்து.

இதையும் படியுங்கள்:
மனம் ஒன்றும் குப்பை கிடங்கல்ல!
Vitamin D

"கர்ப்ப காலத்தில் spina bifida வை தடுக்க folate சப்ளிமெண்ட்ஸ் எவ்வாறு பரிந்துரைக்கப்படுகின்றனவோ அவ்வாறே கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலேயே வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தால் அதற்கான சப்ளிமென்ட்ஸை எடுத்து கொண்டால் பல நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கலாம்' என்று எங்கள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது எனறும் அவர் கூறினார்.

ஆகவே கர்ப்பிணி பெண்களே, உஷாராக இருங்கள். வைட்டமின் டி பொதுவாக சூரிய ஒளியில் இருந்து வருகிறது, ஆகவே முடிந்த வரை சூரிய ஒளி கிடைக்குமாறு காலையிலோ அல்லது மதிய வேளையிலோ சிறிது நடைப்பயிற்சி செய்யுங்கள். மேலும் வைட்டமின் டி உள்ள உணவுகளையும் மற்றும் சப்ளிமெண்ட்ஸையும் தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.

குழந்தையின் அறையில் பகல் நேரத்தில் சிறிது சூரிய ஒளி வருமாறு ஐன்னல்களையும், கதவையும் திறந்து வைக்கவும். காற்றோட்டமாக குழந்தையை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது வெளியில் கொண்டு செல்லவும்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
உடலின் ஹார்மோன்கள் மற்றும் அவற்றின் எதிர் செயல்பாடுகள்... அடேங்கப்பா! இப்படியெல்லாமா நடக்குது?
Vitamin D

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com