

மாதாந்திர மின் கட்டணம் உங்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறதா? அதற்கு உங்கள் வீட்டு சமையலறையில் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டி (Fridge) தான் முக்கியக் காரணமாக இருக்கக்கூடும்!
பிரிட்ஜ் அதிக கரண்ட் எடுப்பதற்கான உண்மையான காரணங்கள் என்ன? அதை எளிய முறையில் தடுத்து மின் கட்டணத்தைக் குறைப்பது எப்படி? இதோ உங்களுக்கான சிலிர்ப்பூட்டும் மற்றும் அவசியமான அறிவியல் பூர்வமான வழிகாட்டல்கள்!
குளிர்சாதன பெட்டி (பிரிட்ஜ்) இன்று எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான சாதனம். ‘இன்று, நாளை அல்லது ஒரு வாரத்திற்கு’ பிறகு செய்ய வேண்டிய ‘சமையல்களின் திட்டமிடல்கள்’; இந்த பிரிட்ஜ் மூலம் தான் பல இல்லதரசிகளுக்கு சாத்தியமாகிறது. இப்படிப்பட்ட பிரிட்ஜை நீங்களே கண்டுகொள்ளாமல் இருந்தால் என்னென்ன ஆகும் தெரியுமா?
பிரிட்ஜை எப்படி குறைந்த மின்சாரத்தில் செயல்பட வைக்கலாம்?
ஒரு குளிர்சாதனப் பெட்டி(பிரிட்ஜ்) 24/7 இயங்கும் ஒரு இயந்திரம். இதன் சிறிய செயல்திறன் குறைபாடுகள் கூட நமக்கு பெரிய செலவுகளாக மாறுகின்றன.
பிரிட்ஜின் பின்னால் உள்ள தூசி படிந்த கண்டன்சர் காயில்கள் (condenser coils), அதன் கம்ப்ரசரின் (compressor) பணிச்சுமையை 20% வரை அதிகரிக்கின்றன. இதோடு பிரிட்ஜின் பின்புறம் அல்லது அதை சுற்றி சரியான காற்றோட்டம் இல்லை என்றால், அது மின்சார பயன்பாட்டை 15% வரை உயர்த்தக்கூடும் என்றும் அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
பிரிட்ஜில் வைக்க வேண்டிய உணவை முன்கூட்டியே ஆறவைப்பது, பிரிட்ஜை முழுமையாக இல்லாமல் 70-80% மிகாமல் பொருட்களை மட்டும் நிரப்பி வைப்பது மற்றும் அதன் கதவில் உள்ள கேஸ்கெட்டுகள் (gaskets) காற்று புகாதவாறு இருக்கிறதா போன்றவற்றை உறுதி செய்வது; பிரிட்ஜின் தேவையற்ற செயல்பாட்டை குறைப்பதற்கான வழிகளாகும்.
சுவாரஸ்யமாக, ‘வெப்பநிலை தக்க வைக்கும் முறை’ ஒன்றை ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதாவது பிரிட்ஜில் ‘தண்ணீர் பாட்டல்களை’ சேமித்து வைத்தால், நாம் பிரிட்ஜை ஒவ்வொரு முறை திறக்கும்போது உள்ளே புகும் வெப்பம் இந்த பாட்டல்களால் ஈர்த்துக் கொள்ளபடுகிறதாம். இதுவும் பிரிட்ஜின் செயல்பாட்டை குறைக்க உதவுகிறதாம்.
பிரிட்ஜ் அதிக மின்சாரம் உபயோகித்தால் உண்டாகும் தாக்கங்கள்:
ஒரு பிரிட்ஜ் அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்தும்போது, அதன் விளைவுகள் உங்கள் மின் கட்டணம் தாண்டி நீண்டு கொண்டே போகின்றன.
இதனால் பிரிட்ஜ் கம்ப்ரசர் அதிக வெப்பமடையும், இது அதன் ஆயுட்காலத்தை குறைக்கிறது; சில நேரம் ‘அதை மாற்ற வேண்டிய’ சூழ்நிலைக்கும் வழிவகுக்கிறது.
இப்போதுள்ள நவீன இன்வெர்ட்டர் பிரிட்ஜ்கள் PCB போர்டுகளை சார்ந்துள்ளன. பிரிட்ஜின் அதிகப்படியான மின்சார சுமை அல்லது மின்சார ஏற்ற இறக்கங்கள் இந்த போர்டுகளை முன்கூட்டியே சேதப்படுத்தக்கூடும். இந்த அதிக மின்சார பயன்பாடு பிரிட்ஜை சூடாக்கி, அவை இருக்கும் இடத்தின் வெப்பத்தையும் ஏற்றிவிடும். இறுதியில் இதுவும் பிரிட்ஜின் உள்ளே வெப்பத்தை அதிகரித்து, குளிரை தக்கவைக்க அதை ஓய்வு இல்லாமல் செயல்பட வைத்துவிடும்.
இதற்காக தலைவர்கள் சொன்ன வார்த்தைகள்:
உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் (Brajesh Pathak) சமீபத்தில், பிரிட்ஜ்கள் பத்தாண்டுகள் மேல் நீடித்து உழைக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் குறிப்பிடுகையில், “ஒரு ஏழை மனிதன் ஒரு முறை பிரிட்ஜ் வாங்குகிறான், ஒரு நடுத்தர வர்க்க மனிதன் ஒரு முறை வாங்குகிறான். எனவே அது குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது நீடிக்க வேண்டும்," என்றார்.
அவர் கூறுவது, நீடித்த நிலைத்தன்மையும், மின்சார குறைபாட்டின் மறைமுகச் செலவுகளையும் இதில் பிரதிபலிக்கிறது.
உலகளவில், சீமென்ஸின் (Siemens) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோ கேசர் (Joe Kaeser) இதை ‘ஆற்றல்’ என்ற பெயரில் வலியுறுத்தினார்: அதாவது மனிதர்களின் திறமையான ஆற்றல் பயன்பாடு அனைத்துப் பகுதிகளிலும் ‘கார்பன் டை ஆக்சைடு (CO₂) நச்சை குறைப்பதற்கான ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது என்றார்.
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்:
அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, வீட்டு உபயோக மின்சாரத்தில் சுமார் 9% பிரிட்ஜ்களால் பயன்படுத்தப்படுகிறது என்று அமெரிக்க எரிசக்தி துறை (U.S. Department of Energy) உறுதிப்படுத்துகிறது. அதோடு ஒரு பிரிட்ஜின் நீண்ட வருட செயல்பாடு; அவற்றின் பராமரிப்பு, அதன் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் மனிதர்களின் பயன்பாட்டு முறை ஆகியவற்றை பெரிதும் சார்ந்திருக்கிறது என்கிறார்கள்.
குளிரசாதனப் பெட்டியின் பராமரிப்பு மற்றும் சரியான பயன்பாடு மூலம் மின் கட்டணத்தை கணிசமாகக் குறைத்து, சாதனத்தின் ஆயுட்காலத்தை பல ஆண்டுகள் அதிகரிக்கலாம்.