மினி தொடர்: மழைச்சாரலில் ஒரு பூங்குருவி... அத்தியாயம் 2

மழை நாளும் பறவையும் கொண்டுவந்த நினைவுகளுடன், பாசத்தின் ஆழத்தை விவரிக்கும் ஒரு அற்புதமான தமிழ் சிறுகதை
Tamil Mini series - Mazhaicharalil  Oru Poonguruvi
Tamil Mini series - Mazhaicharalil Oru Poonguruvi Image credit: Gemini AI
பவானி உமாசங்கர்

இலக்கியம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பர். அதன் படி என்னுடைய படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி அதிகமாக எழுத விருப்பம். நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த பத்து வருடங்களாக பத்திரிகைகளுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன். இதுவரை 150 சிறுகதைகள் எழுதி உள்ளேன். இரண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். சிறார்களுக்காக நல்வழி கதைகள் புராணக் கதைகள் எழுதி வாசித்து சமூக ஊடகமான Spotify யில் வெளியிட்டுள்ளேன். பள்ளியில் கல்வியோடு வாழ்க்கை பாடத்தை கதை வடிவில் கற்பிப்பது என் வழக்கம்.

Updated on: 
MM strip
MM strip

மினி தொடர்: மழைச்சாரலில் ஒரு பூங்குருவி... அத்தியாயம் 2

ருக்மணிக்கு சினிமா பார்க்க ரொம்ப பிடிக்கும். அதனால் மாதம் ஒருமுறை எப்படியாவது லட்சுமியிடம் அனுமதி வாங்கி மதியக்காட்சிக்கு போய்விட்டு வந்துவிடுவாள். வீட்டுக்கு வந்ததும் கிணற்றடிக்குப்போய் குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலை செய்வாள்.

அன்று ஏதோ சினிமா பார்த்துவிட்டு வந்த அவளின் முகம் இறுக்கமாக கனத்த மவுனத்தில் இருப்பதுபோல் இருந்தது சாரதாவுக்கு. அவள் அருகில் வந்து "மாமி உனக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க" என வினவினாள்.

அடுத்த நொடி ருக்மணியின் கண்கள் கண்ணீரால் ததும்பியது. "மாமி அழறியா?" என்று கேட்ட சாரதா அவள் கண்களை துடைத்துவிட்டாள் ருக்மணி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் அந்தச் சினிமாவுல வந்த சம்பவங்கள் என் வாழ்க்கைமாதிரி இருந்தது. அதான் என லேசாக முறுவலித்தாள்.

"என்னன்னு சொல்லு மாமி" என திரும்பவும் கேட்ட சாரதாவிடம் "என்னத்த சொல்றது கண்ணா எனக்கு எட்டு வயசுல கல்யாணம். அந்த மாப்பிள்ளைக்கு பதினெட்டு வயசு. அன்னைக்கு அந்தப் பையன பார்த்ததோடு சரி.

Loading content, please wait...