தொடர்கதை: உறவெனும் சோலையிலே - அத்தியாயம் 2

தலைமுறை இடைவெளியில் உழலும் குடும்ப உறவுகளையும் முதியோரின் மனநிலையையும் உணர்த்தும் ஒரு எதார்த்தமான கதை.
Tamil Serial story - Uravenum Solaiyile
Tamil Serial story - Uravenum SolaiyileImage Credit: ChatGPT

நான் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஒரு வருடமாக சிறுகதைகள் எழுதி வருகிறேன். நடவு காலங்களின் நிதர்சனங்களும், இன்பம் துன்பம் என்று கலந்த வாழ்க்கையில், துன்பம் என்றுமே நிரந்தரமல்ல அதை மீண்டு வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்துகளும் இருக்குமாறு கதைக்களத்தை அமைக்க முயல்கிறேன்.

Updated on: 
MM strip
MM strip

உறவெனும் சோலையிலே - அத்தியாயம் 2

இன்று தியாகு ஒரு வட இந்திய மாநிலத்தில் 'எம் பி ஏ' முடித்து, அங்கேயே 'கேம்பஸ்’ஸில் தேர்வாகி பெங்களூரில் வேலை கிடைத்து, வேலை பயிற்சி முடிந்த கையோடு வெளிநாடு செல்வதற்கான ஏற்பாட்டில் இருக்கிறான். சிறு வயதிலிருந்தே தியாகுவிற்கு வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. நிறைய எதிர்கால திட்டங்கள். வெளிநாட்டில் சென்று மேலும் அங்கிருந்து தன் தனித்திறனால் பணியில் நன்கு உயர்ந்து திருமணத்திற்குள் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தான். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்குள் எப்போதுமே உண்டு. திறமைகளுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் இந்த காலத்தில் அவனுக்கும் அது காத்திருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகுவின் வெளிநாட்டுப் பயணத் தேதி தெரிந்து கிளம்ப இன்னும் 15 நாட்கள் இருக்கின்றது. இன்னும் 2 நாட்களில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து தன் வீட்டில் இருந்துவிட்டு அங்கிருந்து பயணிப்பதாக முடிவு.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com