

இதோ இன்று தியாகு தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு சென்னை வரும் நாளும் வந்தது. சாந்தாவின் மனதில் தியாகுவின் நினைவுதான். அவனுக்கு இன்னும் கொஞ்சநாளில் திருமணம், அவன் நன்றாக இருக்கவேண்டும் என்று மனதில் பிரார்த்தித்தவாறு படுக்கச் சென்றார்.
மறுநாள் காலை அவரின் வழக்கமான பூஜை முடித்து தன்னை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லி சில கற்கண்டுகளையும் உலர் திராட்சையும் நைவேத்தியம் செய்தார். மனது ஆரோக்கியமாக இருந்தால் உடம்பு ஆரோக்கியம் தானாகவே வந்துவிடும். தேவையில்லாத குறைகள், கவலைகள் இவற்றால் விளையப்போவது உடல், மனம் பலவீனங்கள்தான். வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து கொண்டால், எப்படிப்பட்ட வாழ்க்கையும் எளிதாக வாழலாம்.
சிறிய விதைகள் இட்டு பாத்திபோட்டு வைத்திருந்த மண்ணில் அருகில் இருந்த வாளியில் தண்ணீர் பிடித்து தெளிக்க ஆரம்பித்தார் சாந்தா. நேற்றுதான் கொண்டு வந்து கொடுத்தார்கள் இந்த விதைகளை. சிறு சிறு பூச்செடி விதைகள்.