சிறுகதை: வார்த்தைகளின் மாயாஜாலம்!

அப்புசாமி தாத்தா செய்த வேலை: வேர்க்கடலை வியாபாரம் ஸ்டார்ட் அப் ஆன சிறுகதை!
The bride-viewing ceremony
The bride-viewing ceremonyImage credit: Chatgpt
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on
MM strip
MM strip

பாலாஜி மெட்ரிமோனியல் ஸைட் மூலம் கிடைத்த வரனை நேரில் பார்க்க அப்புசாமி தாத்தாவும், அம்புஜம் பாட்டியும் சேர்ந்து பேரன் சங்கருக்கு பெண் பார்க்க போனார்கள். சங்கருக்கு வேறு வேலை இருந்த காரணம், பெண் பார்க்க செல்லவில்லை. தாத்தா, பாட்டி பார்த்தால் போதுமென்று சொல்லிவிட்டான். போகிற வழியில் சங்கரின் நண்பன் விஜய் இவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

77 வயதான அப்புசாமி தாத்தா அந்த காலத்து P.U.C. படித்திருந்தாலும், இந்தக் காலத்து நாட்டு நடப்புகள், AI, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் தேர்ந்தவர். பேச்சிலேயே மற்றவர்களை மடக்கி விடும் திறமைசாலி.

ஒரு விபத்தில் மகன் ராமனும், மருமகள் ஜானகியும் விண்ணுலகம் செல்ல, அருமைப் பேரன் சங்கரை கண்ணும் கருத்துமாக வளர்த்து படிக்க வைத்தனர் தாத்தாவும் பாட்டியும். சங்கர் சொந்தமாக தொழில் செய்து வருகிறான்; வருமானம் சுமார்தான். தாத்தா பாட்டி சொல் தட்டாதவன்.

இப்போது சங்கருக்கு வயது 31 ஆக, பெண் பார்க்கும் படலம்.

பஜ்ஜி, சொஜ்ஜி, காப்பி சாப்பிட்ட பிறகு, வழக்கமான பேச்சுக்கள் முடிந்தன. பெண் அகிலா சற்று நிறம் குறைவாக இருந்தபோதும் லட்சணமாக, பார்க்க புத்திசாலியாக தெரிந்தாள். படிப்பு சுமார்தான்.

பெண்ணின் அப்பா மெதுவாக முக்கியமான விஷயத்துக்கு வந்தார்:

“உங்கள் பேரன் இப்போ என்ன வேலை பண்ணிக்கிட்டிருக்கார்?”

அப்புசாமி கண்ணாடியை சரிசெய்து, தொண்டையைச் சுத்தம் செய்துகொண்டு,

“எங்கள் பேரன் தற்போது ஒரு விவசாய அடிப்படையிலான நேரடியாக வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் ஸ்டார்ட் அப் கம்பெனியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். முக்கியமாக இயற்கை வழியிலான ஆரோக்கியத் துறையில் வேலை செய்கிறான்.”

இதைக் கேட்டவுடன் பெண்ணின் தகப்பனார் ஆச்சரியப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாயானார் மாமியார்..!
The bride-viewing ceremony

"வாவ்! அப்படின்னா உங்கள் தயாரிப்பு என்ன - என்ன?" என்று கே.பி. சுந்தராம்பாள் பாணியில் கேட்கையில்,

“எங்கள் அட்டவணையில், முக்கியமாக அதிக புரத சத்து நிறைந்த வறுத்த பயறுகள் மற்றும் பாரம்பரிய கேரமல் மிட்டாய்கள் உள்ளன.

நாங்கள் தேவையான பொருட்களை நேரடியாக மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி, எங்கள் சொந்த யூனிட்டில், முறைப்படி வறுக்கிறோம். அதில் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், எங்கள் தயாரிப்பு சுற்றுப்புறச் சூழலை பாதிக்காது மற்றும் இயற்கையாகவே அழியும் தன்மை கொண்டது.

இதை கேட்ட பெண்ணின் குடும்பத்தினர் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.

இது ஏதோ பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனி மாதிரி தோன்றியது அவர்களுக்கு.

பெண்ணின் மாமா அடக்க முடியாமல் கேட்டார்:

“உங்க கம்பெனியின் தலைமை அலுவலகம் எந்த இடத்தில் இருக்கிறது? எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?

அப்புசாமி தயக்கமே இல்லாமல் “இப்போது புது வகையான ஸ்டார்ட் அப் அதிகம். டெக்னாலஜி வளர-வளர எல்லாமே புதுசுதான். அதனால் கடை வாடகை, எலக்ட்ரிக் பில் போன்ற தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை. ஒரு மொபைல் சில்லறை விற்பனை நிலையம் இருக்கிறது. போக்குவரத்து மற்றும் கூட்டத்தைப் பொறுத்து தினமும் இடம் மாறும். எல்லாம் எங்கள் பேரன் சங்கர் ஒருத்தனே பார்க்கிறான் — முழு உரிமையாளர் அவன்தான்.

பெண்ணின் தகப்பனாருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அப்புசாமியின் பேச்சு அவருக்கு சுத்தமாக புரியவே இல்லை.

"அய்யா! இந்த வியாபார மொழிப் பேச்சு எனக்கு புரியலை. உங்கள் பேரன் என்ன பண்ணுறான்னு சாதாரணமா சொல்லுங்க?”

கூடவே வந்திருந்த சங்கரின் நண்பன் விஜய்,

சிறுகதை | The bride-viewing ceremony
சிறுகதை | The bride-viewing ceremonyImage credit: Gemini AI

“அங்கிள்… தாத்தா சொல்வது என்னனா…! சங்கர் ஹைவே பக்கத்தில் ஒரு வண்டியில் வறுத்த வேர்க்கடலை, பொரிகடலை விற்கும் வியாபாரம் செய்கிறான்.

இரும்புச் சட்டியில் மணலைப் போட்டு அதில் வேர்க்கடலையை வறுப்பான் (சொந்த யூனிட்டில் முறைப்படி செய்வது). அதை பழைய செய்தி தாளில் சுற்றி கொடுப்பான் (இயற்கையாக அழிந்துவிடும். மேலும் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காது.) உங்க வீட்டுப் பெண் அகிலாவை, சங்கர் நன்கு பார்த்துக் கொள்வான். வாழ்க்கையில் முன்னேறுவான். அருமையான தாத்தா பாட்டி வளர்ப்பு அவன்" என்று சொன்னதும்,

இதையும் படியுங்கள்:
சிறுகதை: யாருக்கு வாய்ப்பு?
The bride-viewing ceremony

பெண்ணின் தகப்பனாரின் கையில் இருந்த டீ கப் கீழே விழுந்து சிதறியது.

பிறகு என்ன நடந்தது...?

உள்ளிருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அகிலா, உடனே வெளியே வந்து அப்புசாமி-அம்புஜம் கால்களில் விழுந்து வணங்கி எனக்கு சம்மதம் தாத்தா என்றாள். அம்புஜம் பாட்டி புன்னகைத்தார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த அகிலாவின் மாமாவின் கைகளில் இருந்த டீ கப் இப்போது கீழே விழுந்தது.

logo
Kalki Online
kalkionline.com