சிறுகதை: இரண்டு பவுன் தாலி செயின்…!

The teacher, the teacher's husband, thieves, the police,
The teacher, the teacher's husband, thieves, the police, Img credit: AI Image
Published on
MM strip
MM strip

தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டு இருக்கிறது.

பவுன் ரூபாய் 1 லட்சம் வந்து விட்டது. பாக்கெட் திருட்டை விட செயின் பறிப்பு அதிக லாபம் தருகிறது.

மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் போன வாரம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் போது, ஸ்கூட்டியில் இரண்டு தடியன்கள் வேகமாக தலைமை ஆசிரியர் பக்கம் வந்து, சில நொடிகள் தான். ஆசிரியரின் தாலி சங்கிலியை அறுத்து எடுத்து கொண்டு பறந்து விட்டார்கள்.

தலைமை ஆசிரியர் “ திருடன்.? திருடன்… !!“ என்று கத்தியும், யாரும் வரவில்லை. அந்த பகுதியில் எப்போதும் ஜனநடமாட்டம் கம்மியாகத் தான் இருக்கும்.

திருடர்களுக்கு இது வசதியாக இருந்தது. பல நாள் நோட்டம் பார்த்து இன்று கொள்ளை அடித்து விட்டார்கள்.

தலைமை ஆசிரியர் அழுதார். பள்ளிக்கு ஒரு வாரம் செல்லாமல் விடுமுறைக்கு எழுதி கொடுத்து விட்டார்.

அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. நடுத்தர வர்க்கம் தான். தனது 2 லட்சம் ரூபாய் களவு போனது அவரால் தாங்கி கொள்ள முடிய வில்லை.

ஒரு வாரம் அழுதுகொண்டே இருந்தார். கணவர் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்க வில்லை. கணவர் தனது அலுவலகத்தில் ரூபாய் 2 லட்சம் கடன் வாங்கினார்.

திங்கள் கிழமை.

கணவர் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் அன்று லீவ் போட்டு விட்டார். மனைவியை ரெடியாகச் சொன்னார்.

"ஏங்கே" எனக் கேட்டார். அவர் "டி. நகர்" என்றார்.

“எதற்காக..?“

“உனக்கு ஒரு பரிசு வாங்க… !“

“என்ன பரிசு… ?“

இதையும் படியுங்கள்:
பொய் சொல்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் கண்களின் ரகசியம்!
The teacher, the teacher's husband, thieves, the police,

“இரண்டு பவுன் தாலி சங்கலி வாங்க தான்..!“

“ஏது அவ்வளவு பணம்… ?“

“ஆபிசில் லோன் வாங்கினேன்… !“

“இது எல்லாம் எதற்காக… ?“

“இல்லை.. இந்த ஒரு வாரமாக உன்னைப் பார்த்தேன். நீ சோகத்தில் மூழ்கி இருந்தாய்..!”

மணி காலை பத்து. இருவரும் ஆட்டோவில் டி. நகர்வந்து விட்டார்கள். டிவி விளம்பரத்தை பார்த்து ஒரு பெரிய நகை கடை சென்றார்கள்.

"சங்கலி திருடப்பட்டது" என்று ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அவர் மனமின்றி தான் கடைக்கு வந்தார்.

சிப்பந்தி நகைகள் காட்டினார். ஆசிரியர் சுற்றும் பார்த்தார்.

தனது இருக்கைக்கு இடது புறம் 5 அடி தள்ளி இரண்டு இளைஞர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். கடை சிப்பந்தி அவர்கள், நகையை கொடுத்து எதுவோ பேசினார்.

ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது. இளைஞர்கள் சிப்பந்திக்கு கொடுத்த சங்கலி கண்டு அசந்து போனார்.

சாட்சாத் தனது சங்கிலி என்று புரிந்து கொண்டார். அவர் பதட்டம் அடைய வில்லை. தனது கணவரிடம், "இதோ வருகிறேன்" என்று சொல்லி வெளியே வந்தா.ர்

அவர் போன் செய்தார் அவசர காவல் உதவிக்கு. தொலைபேசியில் எல்லாவற்றையும் சொன்னார்.

சரியாக 9 நிமிடங்களில் போலீஸ் வந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: விளங்கா விளா மரமும் ஆலமர அம்புலுவும்!
The teacher, the teacher's husband, thieves, the police,

இளைஞர்கள் கிளம்பி வெளியே போக முயற்சி செய்த போது போலீஸ் அவர்களை தடுத்தது. அவர்கள் பாக்கெட்டில் செயின் இருந்தது.

போலீஸ் ஆசிரியரிடம் காண்பித்தார்கள்.

"ஆம்.. ஆம்.. இது தான் என்னுடைய செயின்."

இளைஞர்கள் அசடு வழிந்தார்கள். போலீஸ் அவர்களை திரும்ப திரும்ப விசாரிக்கும் போது, தாங்கள் செயின் பறித்ததாம் என்று ஒப்புக் கொண்டார்கள்.

போலீஸ் அவர்களை கைது செய்தது.

போலீஸ் ஆசிரியரிடம் சங்கிலியை கொடுத்து எல்லா தகவல்களையும் காவல் நிலையத்தில் எழுதி தரச் சொன்னார்கள்.

ஆசிரியருக்கு படு குஷி.

"பின்னே என்ன..? ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள செயின் திரும்பி கிடைத்தது. தனது கணவரை கட்டிப்பிடித்து முத்தம் நெற்றியில் கொடுத்தார்.

ஆம். நமக்கு என்று முடிவானது நம்மை வந்து சேரும்.

ஆம். நம் பொருள் நமதே…!

பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான்..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com