சிறுகதை: கத்தரிக்காய் பறித்த கைகள்!

தாயின் உழைப்பைக் கண்டு, ஏழ்மையை வென்று தன் லட்சியத்தை அடைந்த ஒரு இளைஞனின் உத்வேகம் தரும் சிறுகதை!
சிறுகதை | Son and mother
சிறுகதை | Son and motherImage credit: Chatgpt
Updated on
MM strip
MM strip

உயர்ந்த மலையும் காடுகளுமாய் காட்சியளிக்கக்கூடிய குருமலை என்ற சிறிய கிராமத்தில் கருப்பாயி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவன் சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவனை இழந்தபோது அவளுடைய மகன் அருணுக்கு வயது எட்டு.

கணவன் இறந்த நாளில் கருப்பாயி கதறி அழுதாள்.

“என்னை விட்டுப் போய்விட்டாயே! நம்ம பையனை எப்படி நான் வளர்ப்பேன்?” என்று கண்ணீர் விட்டாள்.

ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, “என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் மகன் நன்றாகப் படிக்க வேண்டும். அவன் வாழ்க்கையில் என்னைப் போல கஷ்டப்படக்கூடாது,” என்று உறுதி செய்தாள்.

அதன்பிறகு அவள் அருகிலிருந்த கத்தரிக்காய் தோட்டத்தில் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து மகனுக்குச் சாப்பாடு செஞ்சு கொடுத்துட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தோட்டத்திற்குச் செல்வாள். காலைல இருந்து சாயங்கால வரைக்கும் குனிந்து கத்தரிக்காய்களைப் பறிப்பாள்.

கைகளில் காயம் ஏற்பட்டாலும் கவலை இல்ல. அவளுடைய மனதில் ஒரே எண்ணம்:

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com