சிறுகதை: ஏழை நகையின் ஏக்கம்!

பேங்கையே காவல் காத்த மகமாயியின் ஒரு பவுன் நகை பற்றிய சிறுகதை!
சிறுகதை | Woman with gold chain
சிறுகதை | Woman with gold chainImage credit: Gemini AI
ஆ.நர்மதா

ஆ.நர்மதா, வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். விருதுநகர் அருகே பாளையம்பட்டி கிராமத்திலிருந்து எழுதி வருகிறார். பள்ளிப் பருவம் முதலே தமிழார்வம் கொண்ட இவர், சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு தேடும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படைத்து வருகிறார்.

Updated on: 
MM strip
MM strip

மகமாயி கூலி வேலை செய்யும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவள் தினமும் 150 ரூபாய்க்கு கூலி வேலைக்கு செல்வாள்.

அவளும் அவளுடைய தோழிகளும் சேர்ந்து ஒரு காட்டில் ஆறு மாதம் முழு விவசாய வேலைக்கு பேசி வைத்து வேலை செய்வார்கள்.

அவ்வாறு வேலைக்குச் சென்று வேலை செய்யும்போது, அப்பொழுது அங்கு வந்த காட்டின் முதலாளி பெண்ணின் கழுத்தில் எட்டு பவுன் தாலி இருப்பதைக் கூலி வேலை செய்யும் அனைத்து பெண்களும் பார்த்தார்கள்.

கூலி வேலை செய்யும் அனைத்து பெண்களின் கண்களும் முதலாளியம்மா போட்டிருக்கும் எட்டு பவுன் தாலி மீது இருந்தது. காட்டில் வேலை கூட சரியாக நடக்கவில்லை!

தோழிகள் அனைவரும் முதலாளி அம்மாவின் 8 பவுன் தங்கத் தாலியைப் பார்த்தவுடன் அவரவர் வீட்டில் எத்தனை பவுன் இருப்பது என்பதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

அவரவர் வசதிக்கேற்ப ஒரு பவுன், இரண்டு பவுன், மூன்று பவுன் என தங்க நகைகள் வீட்டில் இருப்பதாகப் பேசினார்கள்.

இதைக்கேட்ட மகமாயின் மனதில் தன்னிடம் ஒரு பவுன் கூட தங்க நகை இல்லை என்ற ஏக்கம் ஏற்பட்டது.

தோழிகள் பேசுவது மற்றும் முதலாளி அம்மா போட்டிருக்கும் 8 பவுன் தங்கத் தாலி இரண்டுமே மகமாயின் மன நிம்மதியைக் குழைத்தது.

மகமாயிக்கு தங்க நகை வாங்கி போடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

அன்றைய காட்டு வேலை முடிந்தது.

மகமாயி வீட்டிற்கு வந்தவுடனே, தான் சேர்த்து வைத்திருக்கும் பேங்க் பேலன்ஸைப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு ஒரு ஞாபகம் வந்தது. அவள் இருக்கும் வாடகை வீட்டைச் சொந்த வீடாக வாங்கவே பணம் சேர்த்து வைத்துள்ளோம் என்பது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வாழ்க்கையே, ஒரு நடிப்புதான்!
சிறுகதை | Woman with gold chain

மகமாயி தன்னுடைய கணவரிடம் ''தான் தங்க நகை வாங்குவதற்காக இந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளலாமா?'' என்று கேட்டபோது, அதற்கு மகமாயின் கணவன் ''வீடு வாங்குவதே முக்கியம். தங்க நகை கிடையாது...'' என்று கூற.

மகமாயி தன்னுடைய கணவனிடம், ''நமக்குப் பெண் குழந்தை இருப்பதால் அதற்கு சேமிப்பிற்காகவாவது நகை வாங்க வேண்டும்'' என்று கூறிப் போராடினாள்.

இறுதியாக இருவரும் சேர்ந்து ஒரு நகைக்கடைக்கு சென்று அவர்கள் வைத்திருக்கும் பணத்திற்கு ஏற்ப ஒரு தங்கச் சங்கிலியை வாங்கி வீட்டிற்கு வந்தார்கள். அந்த நகையை அவள் பத்திரமாக பீரோவில் பூட்டி வைத்தாள்.

நகை வாங்கிய நேரமோ என்னமோ மகமாயின் மகளுக்கு நல்ல வரன் வந்தது.

இருந்த பணத்தில் நகை எடுத்த காரணத்தினால் அவள் தன்னுடைய மகளை கட்டிக் கொடுக்கப் போதிய பணம் இல்லாமல் தவித்தாள்.

இதனை சரி செய்ய மகமாயின் கணவன் ''நாம் வாங்கிய நகையை பேங்கில் வைத்து அதன் மூலம் பணம் புரட்டி மகளின் திருமணத்தை முடித்துவிட்டு நகையை மீட்டுக் கொள்ளலாம்'' என்று கூற!

மகமாயின் கணவன் கூறியபடியே நகையை பேங்கில் வைத்து, பணத்தைப் பெற்று திருமணத்தை நல்முறையில் நடத்தி வைத்தார்கள்.

சிறுகதை | Poor Woman
சிறுகதை | Poor WomanImage credit: Gemini AI

பின் அவர்கள் இருவருமே வேலை செய்து கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து நகையை மீட்டு வீட்டில் வைத்தார்கள்.

மகமாயி அந்த நகையை தன்னுடைய மகளுக்கு கொடுத்துவிட்டாள்.

மகமாயின் மகளின் கணவன் சுயதொழில் ஆரம்பிப்பதற்காக மனைவியிடம் கேட்டபோது அவள் தன்னிடம் இருக்கும் நகையை கொடுத்துவிட்டாள்.

அந்த நகையை வாங்கி மகமாயி மகளின் கணவன் மீண்டும் பேங்கில் அடகு வைத்துவிட்டான்.

அடகு வைத்த நகையை திருப்ப முடியாத சூழ்நிலை நிலவியதன் காரணமாக மீண்டும் அந்த நகையை மகமாயியும் அவளுடைய கணவனும் திருப்பி தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டார்கள்.

மகளோ கர்ப்பம் தரித்துவிட்டதால் அவளுடைய வளைகாப்புச் செலவிற்காக மீண்டும் அந்த நகை வங்கிக்குச் சென்றது.

மகமாயி அந்த நகையை எடுத்து ஒரு முறை கூட போடவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஒரு தாயின் காத்திருப்பு!
சிறுகதை | Woman with gold chain

அவளுடைய மகளும் இரண்டு மூன்று முறை மட்டும்தான் போட்டு இருப்பார்கள். பின்னது அதிக நேரம் பேங்கைதான் காவல் காத்தது.

ஏழையின் நகை அழகைத் தவிர அதிகமாக அடமானத்திற்குச் சென்றது.

logo
Kalki Online
kalkionline.com