சிறுகதை: வாழ்க்கையே, ஒரு நடிப்புதான்!

பெண்களின் சுதந்திரம் இல்லறத்தில் எவ்வாறு பறிபோகிறது என்பதையும், குடும்ப வன்முறையின் நிஜ முகத்தையும் உணர்த்தும் சிறுகதை
சிறுகதை | Domestic violence
சிறுகதை | Domestic violenceImage credit: Gemini AI
முருகன்

ஆசிரியர் இயற்பெயர் ஜி.சுப்பிரமணியன். வயது 73. சுமார் நாற்பது ஆண்டுகளாக சிறார்களுக்கு சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் எழுதி அவைகள் பல சிறார் இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அது தவிர அன்னாரின் ஏழு கதை புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன இதில் இரண்டு இந்தி சிறார் கதை புத்தகங்கள். ஆசிரியர் அவர்கள் கீழ்கண்ட யு டியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1. Suppinithathasiruvarkathaigal 2. Hindi stories – children – suppinidhadha 3. Mannaimurugan touring talkies

Updated on: 
MM strip
MM strip

''ஹலோ... ஹலோ…''

''சொல்லுங்க... சொல்லுங்க...''

''அது என்ன ஒரு கால்சத்தம் கேட்டால் எடுக்காமல், இரண்டுவாட்டி கேட்டபிறகு வர்றே...? அப்படி என்ன செய்திட்டு இருந்தே?”

''வந்துங்க...''

''என்ன வந்துங்க... போயிங்க... வீட்டுக்கு யாராச்சும் வந்தாங்களா?''

''அய்யோ, அதெல்லாம் இல்லீங்க. காப்பிக்கு பால் வெச்சேன். கொஞ்சம் பொங்கிப்போச்சு. அதான் அடுப்பைத் துடைத்துக்கொண்டிருந்தேங்க...''

''அவ்வளவு அலட்சியம். ஒரு பால் பொங்கிறதுகூடத் தெரியாமல், செல்போன்ல, யார்கிட்டயோ பேச்சு. பாலுக்குக் காசு உங்க அப்பன் வீட்டுலயா கொடுக்கிறாங்க?''

''தப்புங்க. இனிமே அப்படி நடக்காதுங்க...''

''சரி... சரி... மதியம், என்ன சாப்பாடு?''

''உங்களுக்குப் பிடித்த மீன் குழம்பு, பிரியாணியும் செய்திருக்கேங்க...''

“உனக்கு மூளை இல்லையா? இன்னைக்கு ‘ஷஷ்டி விரதம்’ நான் இருப்பேன்னு தெரியாது. நாள்முழுதும் நான் சைவம்தானே. அப்ப எல்லாத்தையும் நீயே கொட்டிக்கணும்னுட்டு செய்திருக்கே. இருக்கட்டும். அலுவலகம் முடிந்து வர்றேன். வந்து... சரியா வெச்சிக்கிறேன்.''

''அய்யோ வேண்டாங்க. இப்பவே, பக்கத்துல இருக்கிற அனாதை ஆசிரம குழந்தைகளுக்குக் கொடுத்துட்டு வந்துடறேனுங்க...''

''அப்ப, நான் சம்பாதிக்கிறது எல்லாம் இப்படித்தான் பாழாகனுமா? இங்க என்ன பிள்ளை இல்லா சொத்தா? பாழாப்போறது... நமக்கு ரெண்டு பிள்ளைங்க. அதுகள் படிப்பு, வேலை, திருமணம் எவ்வளவு இருக்கு. உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு வேணாமா? உருப்படாத கழுதை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
சிறுகதை | Domestic violence

உடனே, ஒரு காரக் குழம்பும் உருளைக்கிழங்கு பொறியலும் ரெடி செய்து வை. இதோ வந்துடறேன்...''

''உருளைக்கிழங்கு வாங்க நீங்க காசு கொடுக்கலியே... அதனால வேறு பொறியல் செய்யட்டுங்களா?''

''வர்ற கோபத்துக்கு, அப்படியே கழுத்தை நெறித்து கொலை செய்யணும்னு... அவ்வளவு கோபம் வர்றது. ஆனா, அலுவலகத்துல இல்ல நான் இருக்கேன். இருக்கட்டும் வந்து கவனிச்சிக்கிடறேன்...''

சிறுகதை | Domestic violence
சிறுகதை | Domestic violenceImage credit: Gemini AI

கணவன், மாலதியிடம் அலைபேசியில் அந்தச் சத்தம் போட்டான்.

டொய்ன் டொய்ன் மணி ஏழை காட்டியது.

ஒரே உதை. கட்டிலில் இருந்து கீழே விழுந்தவள் ஒரு கணம் யோசித்து, நினைவுக்கு வந்தாள்.

''ஏண்டி, அப்படியே மல்லாக்க படுத்து கனவு காணறியலோ. மணி என்னாவுது. லீவு நாள் ஞாயிற்றுக்கிழமைனா ரெஸ்ட் வேண்டிக்கிடக்கோ. எனக்கு தூக்கம் வரலே. காப்பி வரும்னுட்டு நான் காத்துக்கிட்டு இருக்கேன். நீ என்னவோ முணுமுணுத்துட்டே கனவுலகத்துல மிதக்கிறே...''

அவன் கை ஓங்கி இன்னும் ஒரு போடு போடுவதற்குள், தலை தெறிக்க ஓடி, கேஸை மூட்டினாள் மாலதி.

அய்யோ பாவம் நம் பெண்களுக்கு ஒரு ஆணுக்குண்டான சுதந்திரம், கனவில்கூட கிடைப்பதில்லையே.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காவல்காரன்.. சீஸர்!
சிறுகதை | Domestic violence

‘அக்கிரமம், அக்கிரமம்' 'கொடூரம், கொடூரம்' என்று சுவற்று பல்லி கத்தியதில் இருந்து, தன் நிலை அறிந்துகொண்டாள் மாலதி. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இது என்ன, தினம் தினம் நடக்கும் வாடிக்கைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

“தொண்ணூறு சதவிகித பெண்களின் நிலை இதுதான் என்கிறபோது நமக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது.

நம் பெண்கள் வாழவில்லை. 'வாழ்வதுபோல் நடிக்கிறார்கள்' அவ்வளவே...

இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், குடும்ப வன்முறை மற்றும் இல்லறச் சிக்கல்களுக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியலைப் புரிந்துகொண்டு, உங்கள் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுப்பதற்கான தெளிவையும் மன வலிமையையும் பெறுங்கள்.

பெண்களின் நசுக்கப்பட்ட கனவுகளுக்குப் பின் உள்ள உளவியல் அழுத்தங்களை ஆராய்ந்து, சமத்துவமான மற்றும் நிம்மதியான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள உத்வேகம் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com