

மனைவி அனிதா திருமணஞ்சோி கோவிலுக்கு மாவிளக்கு போட கிளம்பிக்கொண்டிருந்தாள். "சரி சரி கிளம்பியாச்சா எத்தனை மணிக்கு ரிட்டேன் வருவ?”
“கூட துணைக்கு யாா் வரா”?
“பையன் சசிகுமாரை அழைச்சிகிட்டு போயேன்” என்றாா் குமாரசாமி.
“ஆமாங்க, அவனையும் நம்ம வீட்டு வேலைக்காாி டாட்டர் வனிதாவையும் அழைச்சிக்கிட்டு போறேன். அவளுக்கு கல்யாணம் ஆகனும்னு அம்பாள் கிட்ட வேண்டிக்கனும்னு அவளோட அம்மா அமுதா எப்பவோ சொன்னாங்க” என்றாள் அனிதா.
“சரிங்க, நீங்க அரைநாள் ஸ்கூலுக்கு லீவு சொல்லிட்டு கோவிலுக்கு வந்துடுங்க. அப்படியே வரும்போது நம்ம வீட்டு வேலைக்காாி அமுதாவையும் அழைச்சிக்கிட்டு வாங்க” என்றாள்.
"சூரிய மூா்த்தி காா்ல வந்துடுங்க. வாடகை ஜாஸ்தி வாங்கமாட்டார்” என்றாள்.
“ஏன் தேவையில்லாம நானு, அப்புறம் அமுதா” என்றாா் குமாரசாமி.
“இருக்கட்டும் சொன்னதை கேளுங்க” என்றாள் மனைவி.
குமாரசாமி வேலைபாா்க்கும் பள்ளியில் அமுதாவுக்கு சத்துணவு உதவியாளர் வேலை.
காா் வந்து நின்றது. அமுதாவும், குமாரசாமியும் வந்து இறங்கியதும் அதிா்ச்சி காத்திருந்தது.
“மகனையும் அமுதாவின் மகளையும் மாலையும் கழுத்துமாய் அழைத்து வந்தாள் அனிதா ".
“ஏங்க இங்க வாங்க, அமுதா நீயும் வா சேர்ந்து நில்லுங்க. ஆசீா்வாதம் செய்யுங்க என்றாள்.
குமாரசாமி ஆத்திரப்பட்டாா்".
“அனிதா என்ன காாியம் செஞ்சிருக்க” என கொந்தளித்தாா்!
“அதேபோல அமுதாவும்வருத்தப்பட்டாள்" யாரும் கோபப்படவேண்டாம். உங்களுக்கும் அமுதாவுக்கும் தொடர்பு இருக்கிறது ஊர் உலகத்துக்கே தொியும். அதுமட்டுமா சொந்த பந்தங்களுக்கும் தொியும். பதினைஞ்சு வருஷமா நானு யாருக்குன்னு பதில் சொல்லுவேன். அதோட நம்ம பையனும் அமுதா மகளும் காதலிக்கறாங்க!
இது யாருக்கும் தொியாது. உங்க இரண்டு போ் விஷயம் தொிஞ்சுதான் அமுதாவோட புருஷன் இறந்து போனாரு"அது ஊருக்கே தொியும் ".
“அம்மா சரியில்லைன்னு அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையல! நீங்க சரியில்லைன்னு நம்ம பையனுக்கும் நல்ல வரன் அமையல! கொட்ட பேரு வேற!”
“அதனால நீங்க ரெண்டு பேரும் செய்த பாவத்துக்கு நானு பரிகாரம் செஞ்சுட்டேன் என்றாள் அனிதா" அதாங்க விக்கிரமாதித்தன் கதை மாதிாிங்க சரி தானே அமுதா” என்றாள்.
குமாரசாமியும் அமுதாவும் அனிதா காலில் விழுந்தாா்கள்.
“மருமகளும் மகனும் குமாரசாமி மற்றும் அமுதா காலில் விழவில்லை"
அனைவரும் கோயிலை விட்டு வெளியேறி காாில் வீட்டுக்கு வந்தாா்கள்!
“யாா் முகத்தில் யாா் முழிப்பதெனவும், அதோடு என்ன பேசுவதெனவும் ஈகோவும் வெட்கமும் தடுத்தன".
“ஏங்க ஸ்கூல் ரீஓப்பன் ஆகறதுக்குள்ள பையன் வேலைபாக்கற ஒரகடம் ஏாியாவில வாடகைக்கு வீடு பாருங்க. நானு அவங்களுக்கு துணையா அங்கே போறேன்” என்றாள் அனிதா நிதானமாக. எனக்கும் மனசு பாரம் கொஞ்சம் குறையும் என்றாள்.
“மேலும் மெளனம் நீடித்தது "....