சிறுகதை: சி மார்ட்!

சாத்தூர் சந்துகளில் மிளகாய் மூட்டை சுமந்த சின்னையன், இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் மார்க்கெட் அதிபராக உயர்ந்தது பற்றிய சிறுகதை.
சிறுகதை | businessman
சிறுகதை | businessmanImage credit: Chatgpt
என்.எஸ்.வி.குருமூர்த்தி

என்.எஸ்.வி.குருமூர்த்தி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து அனுபவம் கொண்டவர். 1970 முதல் கல்கி, குமுதம், விகடன், தினமணி கதிர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட இதழ்களில் எழுதி வருகிறார். சிறுவர்மணியில் சுமார் 90 நாடகங்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் சுஜாதா கையால் பரிசு பெற்றவர்.

Updated on: 
MM strip
MM strip

1991 காலகட்டத்தில் சின்னையன் சாத்தூர், சிவகாசியில் இருந்து லோடு வேனில் மிளகாய் மூட்டை ஏற்றிக்கொண்டு சென்னை கொத்தவால் சாவடியில் இறக்குவார். இங்கிருந்து சிவகாசிக்கு மெஷினரி, ஃபர்னிஷிங் படுதாக்கள், லோடு ஏற்றிக்கொண்டு திரும்ப போவார்.  அப்போ அவருக்கு வயது 35.

சீசனில் கொள்முதல் செய்து குடவுனில் மூட்டைகள் வைத்து பின் கோடை முடிந்து லோடு சென்னைக்குச் செல்லும். பின் நாமக்கல் பகுதியில் இருந்து சோம்பு, சீரகம், தனியா மூட்டைகளைச் சென்னைக்கு எடுத்துச் செல்வார்.

பொள்ளாச்சியில் இருந்து தேங்காய், திண்டுக்கல்லில் இருந்து பூ வகையறா, கொய்யாப்பழம் லோடு எடுத்துச் செல்வார். இப்படியாக ஐந்தாறு வருடங்கள் ஓடின. ஓரளவு சம்பாதித்து இன்னொரு வேன் வாங்கி கேரளாவுக்குப் பொருட்களை டிரைவர் போட்டு அனுப்பி, அங்கிருந்து மிளகு, மசாலா பட்டை சாமான்கள் ஏற்றி வந்து சென்னைக்கு அனுப்பினார்....

"சார் ப்ளீஸ் ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் பத்து செகண்ட் கூட இருந்தால் பொறுமை இல்லாமல் சாப்பிட்டுக்கிட்டே இடது கை ஒற்றை விரலால் தள்ளி விடற இந்தக்காலத்தில்... உப்பு சப்பில்லாத விஷயத்தை நீட்டி முழக்க வேண்டாம். என்ன சொல்ல வர்றீங்க..?"

"சொல்றேன் அர்ஜண்ட்டா சொல்லணும் ஓகே. புரியறது உங்க அவசர வாசிப்பு. நேரே பாயிண்ட்டுக்கு வரவா...

2026 ல் சின்னையன் என்னவா இருக்கார் தெரியுமா.. பெரிய கார்ப்பரேட் முதலாளி.

சி மார்ட் தெரியுமா...?

ஓ.. இந்தியா முழுக்க இருக்கும் மால்.. சென்னையில் மைலாப்பூர், ட்ரிப்ளிகேன், தி. நகர், வேளச்சேரி, தாம்பரம் கிழக்கில் இருக்கே.. அங்கே மொத்தமா வாங்கினால் எத்தனை மலிவு தெரியுமா.. என் மாமனார் சென்னை வரும்போது சோப், வாஷிங் மெஷின் லிக்விட் எல்லாம் வாங்கிப் போவார் தஞ்சாவூருக்கு.. என்ன இப்போ சி மார்ட்டுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் ?

வேன் ஓட்டின சின்னையன்தான் சார் சி மார்ட் முதலாளி - ஓனர். இந்தியாவில் மொத்தம் 68 நகரங்களில் சி மார்ட் இருக்கு. ஒரு நாளைக்கு மட்டும் 450 கோடி டர்ன் ஓவர். எப்படி ஆனார் இப்படிங்கிறதுதான் ஒரு ஃப்ளாஷ் பேக்...."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரியல் லைக்ஸ்?
சிறுகதை | businessman

சின்னையன் இரண்டு வேன்களுடன் திருப்தியாகத்தான் இருந்தார். சொந்த வீடு சாத்தூரில் கட்டிவிட்டார். பிள்ளைகள் கான்வென்ட்டில் படிக்கின்றனர்.

அவர் மனைவி சிந்து ஓய்வு நேரத்தில் ஜாக்கெட் தைத்துக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறாள். ஒரு ஜாக்கெட்டுக்கு தையல் கூலி 300 ரூ. கல்யாண டிசைன் ஜாக்கெட் கூலி 3000 ரூ… மணப்பெண் மேக்கப் செய்வாள். சார்ஜ் 22000/-.

ஒரு முறை சின்னையன் பட்டாசு லோடு ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவில் புனே வுக்குப் போனார். திரும்பி வரும்போது வேன் காலி.

புனே ஹை வேயில் ஒரு பெரிய டிரக் ஓரமாக நின்றது.. தற்செயலாகப் பார்த்தார்.. டிரைவர் ஸ்டீயரிங்கில் தலை கவிழ்ந்து இருந்தார். கைகள் தொங்கின. கிளீனர் பின்னால் தூங்கறான். இவர் வேனை நிறுத்திவிட்டு ஏறிப் பார்த்தார். முச்சு லேசாகவந்தது. கிளீனரை எழுப்பினார். இருவருமாக ரோடு ஓரம் ஒரு போர்வையில் டிரைவரைப் படுக்க வைத்து, இவர் நெஞ்சை அமுக்கி அமுக்கி விட்டார். 

அந்த வழியாகக் காரில் போன ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் காரை ஓரமாக நிறுத்தி இறங்கினார். ஹார்ட் அட்டாக்… சி பி ஆர் தர்றார் ஒருத்தர் எனப் புரிந்துகொண்டார்.

சின்னையனை நகரச் சொல்லிவிட்டு தன் கைப்பையில் இருந்து ஒரு செட் லோடிங் டோஸ் மாத்திரைகளை விழுங்க வைத்தார். நாக்கின் அடியில் ஒரு மாத்திரை வைத்தார். கிளீனர் போன் செய்து லாரி டிரைவர்கள் பலர் கூடி விட்டார்கள். ஆம்புலன்ஸ் வந்து தூக்கிச் சென்றது. லாரி டிரைவர் பெயர் தரம்சிங். கிளீனரிடம் தன் போன் நம்பரைத் தந்து விட்டு சின்னையன் ஊர் திரும்பிவிட்டார்.

ஒரு மாதம் கழித்து பார்த்தால் வீட்டு வாசலில் ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. அதில் இருந்து புனே லாரி டிரைவர் தரம்சிங் பழக் கூடைகளுடன் இறங்கினார்.

சிறுகதை |  lorry drivers help the other lorry driver
சிறுகதை | lorry drivers help the other lorry driverImage credit: Chatgpt

ஆச்சரியம்.. “சார் சௌரியமா நீங்க மட்டும் அன்னிக்கு சி பி ஆர் பண்ணாவிட்டால் போயிருப்பேன். உங்களுக்கு என்ன செய்தாலும் தகும்.”

அப்புறம்தான் தெரிந்தது தரம்சிங் வெறும் டிரைவர் மட்டும் இல்லை.. 150 லோடு லாரிகளுக்கு சொந்தக்காரர். நேஷனல் பர்மிட்.. டெல்லி, கல்கத்தா, அகமதாபாத், பெங்களூர், ஹைதராபாத் டிரிப் போகும். 

ஒரு சென்னை டிரிப்புக்கு 120000/- கட்டணமாம். புது டூ வீலர்கள், புது கார்கள் ஷோரூம்களுக்கு டெலிவரி செய்பவர். லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி ஓனர். 

எச்செலவும் போக ஒரு டிரிப்புக்கு ரூ 75000 நிற்கும். முதலாளியாக இருந்தாலும் தரம்சிங் எப்போதாவது வண்டி எடுப்பார். தற்போது ரோடு நிலவரம் எப்படி இருக்கு என அறிய.

சின்னையனுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததோடு சென்னையில் லாயிட்ஸ் ரோடில் ஒரு சிறிய கடை இருக்கு.. அதை நடத்துங்கள் எனச் சொன்னார். அது பாழடைந்து பராமரிப்பு இன்றி இருந்த ஸ்பேர் பார்ட்ஸ் கடை.

சின்னையன் அதை புதுப்பித்து மளிகை மற்றும் காய்கறி பழங்கள் விற்கும் கடையாக நடத்தினார்... வேன்களும் ஓடின. டிரைவர் போட்டு.

சின்னையன் கடை பிக் அப் ஆனது வியாபாரத்தில். லாயிட்ஸ் ரோடில் வர வரக் கூட்டம் தாங்கவில்லை. காரணம் இதுதான்.. மற்ற கடைகளைவிட விலை ஐந்து ரூபா கம்மி. பருப்பு மகாராஷ்டிராவில் இருந்து வரும். தூத்துக்குடியில் இருந்து எண்ணெய் வரும். ஊத்துக்குளியில் இருந்து வெண்ணை வரும். தரம்.. விலையும் கம்மி. கடை பெயர் சி மார்ட் (சின்னையன் மார்ட்)

காலை 9 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை வியாபாரம். ஆயில், சோப், அரிசி, பருப்பு, என எல்லாம் இருக்கும்.

மக்களே நடந்துபோய் எடுத்து வரவேண்டும் டிராலிகளில். கம்ப்யூட்டர் பில்தான். வருபவர்கள் கார் டூவீலர் நிப்பாட்ட பின்னால் நிறைய இடம்.

(சில சின்ன சில்லறை வியாபரிகள் 50 கிலோ என வாங்கிப் போனார்கள்)

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இயற்கை கொடுத்த பரிசு!
சிறுகதை | businessman

ஒரு பழைய தியேட்டர் மயிலாப்பூரில் பிள்ளையார் கோயில் அருகில் விலைக்கு வந்தது. வாங்கினார் சின்னையன். அதிகம் மாறுதல் இல்லாமல் கொஞ்சம் வேலை பார்த்து சி மார்ட் கிளை 2 உருவானது. வியாபாரம் சூடு பிடித்தது. தரம் சிங் உதவியுடன் பெரிய நகரங்களில் சி மார்ட் தோன்றியது.

ஆங்கங்கே ஆட்களை நியமித்து நிர்வாகத்துக்கு எம் பி ஏ நன்கு படித்தவர்களை நியமித்தார். இப்போது சி மார்ட் இந்தியாவின் நம்பர் ஒன் மால்.

அதற்கென சில விதிகள் உண்டு. மாடி கிடையாது. தரை தளம் மட்டுமே. இரவு 9 மணி முதல் ஊழியர்கள் ஒரு ஷிஃப்ட்டில் தீர்ந்து போன சாமான்களை நிரப்புவார்கள். 

ஷூ, செருப்பு, பாய், வாளி, தரை விரிப்பு மேட், துடைப்பம் மாப் எல்லாம் இருக்கும்.

லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜிகளில் பொருள் திருட்டுப் போகாமல் கண்காணிப்பார்கள். உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் பேண்ட் பாக்கெட்டில் ஒரு ஷேவிங் பிளேடு பாக்கெட்டை ஒளித்துவைத்தால் பில் போடும்போது கவுண்டரில் சிப்பந்தி சொல்வார்.

“சார் மறந்து விட்டீர்கள் ஒரு பாக்கெட் பிளேடு உங்க பாக்கெட்டில் இருக்கு. அதையும் சேர்க்க வேண்டும் பில்லில்..” எப்படி கண்டு பிடிக்கிறார்கள்.. டெக்னாலஜி. ! எதுவும் மை தடவி இருக்குமோ..?

24  மணி நேரமும் ஆட்கள் இருப்பார்கள்.. வேலை நேரத்தில் பொதுமக்கள். பிறகு எந்தெந்த பொருட்கள் நிரப்ப வேண்டுமோ அவற்றை நிரப்புவார்கள். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். பாசுமதி அரிசி, ஆடை வகைகள், ஷூ, செருப்பு, விலை இங்குள்ள தரமான கம்பெனி விலைகளில் பாதி தான்.

இங்கு பெரிய ஷூ செருப்பு கம்பெனியில் ஒரு குழந்தையின் கான்வென்ட் ஷூ 2999 ரூ 99 பைசா என்றால் சி மார்ட்டில் ரூ 850 தான். விலை மலிவு என்பதால் தரம் குறைவாக இருக்காது.

சி மார்ட்டில் நீங்கள் பர்ச்சேஸுக்குப் போனால் சூடாக வடை டீ கிடைக்கும். வடை ரூ 5, டீ ரூ 10.

அதுக்கு ஒரு கூட்டம் க்யூவில் நிற்கும்.

பாப்கார்ன் ஐஸ்கிரீம் பார்லர் உண்டு. ஒரு கை கொள்ளா பாப்கார்ன் பாக்கெட் ரூ 30 மட்டுமே. 

மகாராஷ்ட்ராவில் இருந்து பெரிய வெங்காயம் கிலோ ரூ 10 தான். லாரி லாரியாக தரம் சிங் அனுப்புவார்.

சி மார்ட்டின் வியாபாரத்தை முடக்க சில சில்லறை மளிகைக்கடை வியாபாரிகள் அரசியல் சூழ்ச்சி செய்து பார்த்தார்கள்.

அதை எப்படி மோப்பம் பிடித்தார் சின்னையன் எனத் தெரியவில்லை. முளையிலேயே கிள்ளிவிட்டார்.  

சூழ்ச்சி செய்தவர்களின் கையாட்களே காட்டிக் கொடுத்து விட்டார்கள் எனப் பரவலாகப் பேச்சு.

சி மார்ட்டில் எப்போதும் திருவிழா கூட்டம்தான்.

அது இன்று இந்தியாவின் பெருமை.