சிறுகதை: முகவரி தேடும் கனவுகள்!

நகரத்தில் எல்லா வசதிகளும் இருந்தாலும் பெற்றோர் ஏன் ஊருக்குப் போக விரும்புகிறார்கள்? குடும்ப உறவுகளும் சுதந்திரமும் பேசும் உணர்வுப்பூர்வச் சிறுகதை.
சிறுகதை | family
சிறுகதை | familyImage credit: Chatgpt
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள், பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்கள் வெளியிடபட்டுள்ளன. பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இவருக்கு, சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றவர். ஆன்மீக கட்டுரைகள், கதைகள், ஆலயத் தகவல்கள் திறம்பட வழங்குவதில் தனி ஆர்வம்.

Updated on: 
MM strip
MM strip

“இப்ப எதுக்கு ஊருக்குக் கிளம்பணும்னு அடம்புடிக்கறீங்க? அப்படி ஊர்ல என்னதான் இருக்கு? ஏன்பா இப்படிப் பண்றீங்க? அம்மா, நீயாவது அப்பாகிட்ட சொல்லேன்.”

எரிச்சலுடன் பேசிய தன் மகன் ஸ்ரீதரை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்புஜம். மகன் அடுத்து என்ன சொல்வான் என்பது தெரிந்தது மாதிரி சங்கரனும் கலங்காமல் உட்கார்ந்திருந்தார்.

“என்ன மா, நீயும் ஒண்ணும் பேச மாட்டேங்கறே? இந்த வீட்ல உங்களுக்கு என்ன வசதி குறைச்சல்? சென்னைக்கு வந்து ஒரு மாசம்தானே ஆகுது. அதுக்குள்ள கீழாம்பூர் போகணும், டிக்கெட் புக் பண்ணு ஸ்ரீதரான்னு சொல்றார் அப்பா. வயசானாலும் பிடிவாதம் மட்டும் போகல அவருக்கு.”

ஸ்ரீதரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி தாரிணி, தன் பங்குக்கு எடுத்துவிட்டாள்.

“நீங்க எதுக்குங்க டென்ஷன் பண்ணிக்கறீங்க? உங்க அப்பாவோட பிடிவாதம் தெரிஞ்ச விஷயம்தானே, விட்டுத் தள்ளுங்க. பெத்தவங்களை உங்ககூடவே வச்சுப் பார்த்துக்கணும்னு நீங்க ஆசைப்படறீங்க. ஆனா அவங்க அதையெல்லாம் புரிஞ்சுக்கற மாதிரியே தெரியல. அவங்களுக்கு அவங்க சந்தோஷம்தான் முக்கியம். அதான் ஊருக்குக் கிளம்பணும்னு நினைக்கறாங்க. நம்ம கஷ்டத்தையெல்லாம் அவங்க புரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லையே. நாம அதை எதிர்பார்க்கறதே தப்புதான்.

Loading content, please wait...