சிறுகதை: சுய கெளரவம்!

சுயகௌரவத்தால் 4 ஆண்டுகள் பிரிந்திருந்த குடும்பம் மகனின் ஒரே செயலால் எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை விளக்கும் சிறுகதை
சிறுகதை | Family
சிறுகதை | Family Image credit: Gemini AI

நான் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. கடந்த ஒரு வருடமாக சிறுகதைகள் எழுதி வருகிறேன். நடவு காலங்களின் நிதர்சனங்களும், இன்பம் துன்பம் என்று கலந்த வாழ்க்கையில், துன்பம் என்றுமே நிரந்தரமல்ல அதை மீண்டு வெற்றி கொள்ள முடியும் என்ற கருத்துகளும் இருக்குமாறு கதைக்களத்தை அமைக்க முயல்கிறேன்.

Updated on: 
MM strip
MM strip

ஆபிசிலிருந்து நேராக அக்கா சந்தியா வீட்டிற்கு சென்று அம்மாவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அருணை அவன் அப்பா சரவணன் "அருண் டிபன் ரெடி பண்ணட்டுமா? என்று கேட்டார். "சரிப்பா" என்றவன் மனதில் 'சே .. அக்கா வீட்டிலேந்து வரேன். நம்ம அம்மாவைப்பத்தி ஒரு வார்த்தை கேக்க மாட்டேங்கிறாரே, எத்தனை வைராக்கியம் இன்னும் அவர்க்கு' என்று நினைத்தான். அப்பா கொடுத்த டிபனை வாங்கியவன், "நீங்களும் வாங்கப்பா" என்றான்.

அருணின் அம்மா திலகவதி, மகள் சந்தியாவிடனும், அப்பா சரவணன் மகன் அருணிடமும் கடந்த நான்கு வருடங்களாக தனித்தனியாக இருக்கின்றனர். சரவணனிடம் இருந்த சுயகௌரவம் சுய மரியாதை என்ற எண்ணமும் அதனால் தோன்றிய வீண் பிடிவாதமும்தான் அவர்களின் இந்த நிலைமைக்கு காரணமாகிப் போனது.

கல்லூரிப் படிப்பின் கடைசித் தேர்வு முடித்து, அருண் வீடு திரும்பியபோது வீட்டில் மிகப் பெரிய வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அக்கா சந்தியா அவள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் குமார் என்பவரை விரும்புவதாகவும், அவரைத் திருமணம் செய்து வைக்க வேண்டியும் கேட்க, இதற்குத் தன் முழு எதிர்ப்பையும் காட்டினார் சரவணன்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com