சிறுகதை: எது உதவி?

வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் மறைந்திருக்கும் உண்மையைப் பேசும் சுவாரசியமான குடும்பச் சிறுகதை.
சிறுகதை | family responsibility
சிறுகதை | family responsibilityImage credit: Chatgpt
ஜி. ரமேஷ்

ரமேஷ்ஜி டெக்ஸ்டைல் துறையில் பரவலாக அறியப்படும் நிபுணர். உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகிய இரு துறைகளிலும் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம், லாண்ட்மார்க், அரவிந்த் பேஷன்ஸ், அம்பத்தூர் clothing போன்ற முன்னணி நிறுவனங்களில் பணி. தனது அறிவையும் அனுபவத்தையும் தனது எழுத்து, பேச்சு,பயிற்சி மற்றும் கல்வி மூலமாக பகிர்ந்து ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

காலைப்பொழுது உற்சாகத்துடன் விடிந்திருந்தது.

கணவன் கார்த்திக் வீட்டைப் பெருக்கிக்கொண்டிருக்க, பத்து வயதான கவினும் அவனது அக்கா யாழினியும் தோசை மாவு  ஊற்றுவதும், துணிகளை மடித்துவைக்கும் வேலையையும் செய்துகொண்டிருந்தார்கள். தாய் மீனா, அடுப்படியில் நின்று சமையலை கவனித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது, முதல் மாடிப் படியிலிருந்து மெல்ல இறங்கி வந்தார் பாட்டி மரகதம்.

வீட்டு வேலைகளில் மாப்பிள்ளையும் பேரக் குழந்தைகளும் மீனாவுக்குத் துணையாக நிற்பதைப் பார்த்ததும், மரகதத்தின் முகத்தில் பெருமிதமும் புன்னகையும் போட்டி போட்டன.

"அடடே... மாப்பிள்ளையும் குழந்தைகளும் அம்மாவுக்கு இவ்வளவு பொறுப்பா 'உதவி' பண்றதைப் பார்க்கவே எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா! நிஜமாவே நீங்க தங்கமான குடும்பம்!" — பாட்டியின் குரலில் அத்தனை பாராட்டு.

அதைக்கேட்ட மீனா, மெதுவாக மரகதம் அருகில் சென்று, "அம்மா... கொஞ்சம் இங்க வர்றியா?" என்று தாழ்ந்த குரலில் அழைத்தாள்.

மீனா பக்கமாக வந்த தாயிடம், மீனா மெதுவாகச் சொன்னாள், "அம்மா... உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இவங்க வீட்டு வேலை செய்றதைப் பார்த்து 'அம்மாவுக்கு உதவி பண்றாங்க'ன்னு தயவுசெஞ்சு சொல்லாதீங்கன்னு..."

மரகதத்தின் முகத்திலிருந்த புன்னகை சட்டென்று மறைந்தது. அவரது குரல் சற்று உயர்ந்தது.

"ஏண்டி... இதுல என்ன தப்பைக் கண்ட நீ? வீட்டு ஆம்பளையும், குழந்தைகளும் உனக்கு இவ்வளவு துணையா, உதவியா இருக்குதேன்னு பெருமையிலதானே சொல்றேன்! நீ சின்னப் பொண்ணா இருக்கும்போது எனக்கு வேலை செய்யும்போது கூடத்தானே உன்னை இப்படிப் பாராட்டுவேன்? அப்பவும் நீ இப்படித்தான் முகத்தைத் தூக்கி வப்ப. இப்போதும் அதையேதான் சொல்ற."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரியல் லைக்ஸ்?
சிறுகதை | family responsibility

மரகதத்தின் கோபம் அடுத்தடுத்த வரிகளில் வெடித்தது.

"உன்னை வளர்த்து ஆளாக்கின எனக்கு ஒண்ணுமே தெரியாது, சரியா? நீதான் பெரிய அறிவாளி! என் மாப்பிள்ளையையும் பேரக் குழந்தைகளையும் பாராட்டக்கூட எனக்கு உரிமை இல்லை? அவங்க உனக்குச் செய்யுற உதவியை நான் பாராட்டக் கூடாதா?" — மரகதத்தின் குரலில் கோபமும், கூடவே தான் புறக்கணிக்கப்பட்டுவிட்டோமோ என்ற ஆதங்கமும் கலந்து ஒலித்தது.

மீனா தாயின் கோபத்தைப் பார்த்து நிலைதடுமாறவில்லை. தாயின் கைகளை மெதுவாகத் தன் கரங்களுக்குள் எடுத்துக்கொண்டு, மிக நிதானமாக, அன்பாகப் பேசத் தொடங்கினாள்.

"அம்மா... நீ கோபப்படுறதுல நியாயமே இல்லை..." தயவுசெஞ்சு நான் சொல்றதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. மீனா மரகதத்தின் கண்களை நேராகப் பார்த்தாள்.

சிறுகதை | family responsibility
சிறுகதை | family responsibilityImage credit: Chatgpt

"இவங்க எல்லாரும் வீட்டு வேலை செய்யும்போது 'அம்மாவுக்கு உதவி பண்றாங்க'ன்னு நீ சொல்றப்பவே... இந்த வீட்டு வேலையெல்லாம் 'அம்மாவுக்கு மட்டும்தான் சொந்தம்', மத்தவங்க செஞ்சா அது அவங்களுக்குப் பண்ணுற 'உதவி'ன்னு மறைமுகமா நீ அவங்க மனசுல விதைக்கிறம்மா..."

மீனா தொடர்ந்தாள், "கொஞ்சம் யோசிச்சுப் பாரம்மா... இந்த வீடும், இங்க இருக்குற பொருள்களும், நாம வாழ்கிற இந்தச் சூழலும் இந்த வீட்டுல இருக்குற எல்லோருக்கும் பொதுவானதுதானே? அப்போ இந்த வேலையைச் செய்யுறது ஒவ்வொருத்தரோட கடமையும் பொறுப்பும்தானே தவிர, இதுல 'உதவி'ங்கிற வார்த்தைக்கு என்ன வேலை? பொண்ணோ, பையனோ, புருஷனோ... வீட்டு வேலை செய்யுறது அவங்களோட பொறுப்பு! அது  செய்யுற சலுகையோ, உதவியோ இல்லை, (This is not a help, it’s  entire family responsibility).

மரகதம் பதிலின்றி மீனாவைப் பார்த்தார். மீனா சிரித்துக்கொண்டே "இப்ப சொல்லும்மா... என் குடும்பத்துல இருக்குறவங்க அவங்க சொந்த வீட்டு வேலையைத்தானே செய்றாங்க? இதுல நான் அவங்களைப் பாராட்டணுமா?, இல்ல 'உதவி பண்றாங்க'ன்னு தப்பா வழிகாட்டணுமா?"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இயற்கை கொடுத்த பரிசு!
சிறுகதை | family responsibility

அவர் அமைதியாகத் குடும்பத்தைப் பார்த்தார். மாப்பிள்ளையும் பேரக் குழந்தைகளும் இப்போது வீட்டில் வேலையை பொறுப்பாக'க் குதூகலத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்துகொண்டிருந்தார்கள்.

மரகதத்தின் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.