சிறுகதை: திருமணம் என்பது…!

பெற்றோர் போட்ட திருமணத் திட்டத்தை பிள்ளைகள் மாற்றிய சுவாரசியமான சிறுகதை
சிறுகதை | marriage home
சிறுகதை | marriage homeImage credit: Chatgpt
வேலூர் D. ஸ்ரீனிவாசன்

சிறுகதைகள் எழுதுவது என்பது என்னுடைய பத்து வயதில் தோன்றிய ஆர்வம். ஆனால் படிக்கும் வயதில் கதை எழுதுவது என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும், அந்த காலத்தில் பெற்றோர்கள் அனுமதி அளிக்கமாட்டார்கள். எங்கள் வீட்டிலும் அதே நிகழ்வு தான். முதலில் உன் கதையை நல்லபடியாக முடித்து, வாழ்க்கையில் முன்னேறிய பின்னர், அடுத்தவர் கதையை எழுது என்றனர். காத்திருந்தேன் தந்தையின் சொல்லில் மதிப்பு வைத்து, அந்த நாளுக்காக. வாழ்க்கையில் பல சோதனைகள், தோல்விகள், தடங்கல்கள், சறுக்கல்கள் என்று கடந்து நான் என் வாழ்க்கையில் முன்னேற மேலும் 50 ஆண்டு காலம் பிடித்தது. 62 வயதில் எழுத ஆரம்பித்தேன். இது வரையிலும் சுமார் 86 கதைகள் எழுதி விட்டேன். தொடர்ந்து எழுதி வருகிறேன் பல இணையதளங்களில் இன்று வரையிலும். தொடர்ந்து எழுத இறைவன் அருளை வேண்டுகிறேன்.

Updated on: 
MM strip
MM strip

காரைக்குடியில் சிதம்பரம் என்பவரின் வீடு இருந்த அந்தத் தெருவே திருவிழா போன்று, அவர் மகளின் திருமணத்திற்காக வண்ண, வண்ணப் பந்தல்களாலும், அலங்கார மின்சார விளக்குகளாலும், தோரணங்களாலும், வாழை மரங்களும், கலர் கோலங்களும், ஒலி பெருக்கிகளும் என மிகவும் சிறப்பாக இருந்தது.

திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ளது. தான் வசிக்கும் வீடு பெரிய ஜமீன் வீடு போன்று இருப்பதால், மகளின் திருமணத்தைத் தன் வீட்டிலேயே நடைபெறத் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தார் மணப்பெண்ணின் தந்தை சிதம்பரம் அவர்கள்.

கல்யாண வீட்டுக்காரர்கள் இருவரும், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் வருகையை எதிர்பார்த்து மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். காரணம், இந்தத் திருமணம் முடிந்தவுடன், அதே நாளில் மற்றொரு திருமணத்திற்குப் பிள்ளையார் சுழிபோட முடிவு செய்து மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

Loading content, please wait...