சிறுகதை: காதல் போட்டோ…!

டென்னிஸ் கோர்ட்டில் மலர்ந்த காதல், லண்டன் சர்ச் வரை சென்ற பயணம் - ஒரு அழகான காதல் காவியம்.
couple with baby
தமிழ் கதை | couple with babyImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

நான் ஒரு டென்னிஸ் சாம்பியன். சர்வதேசப் போட்டிகளில் பல முறை சாம்பியன் பட்டம் பெற்றவன்.

நான் ஆடும் எல்லா ஆட்டங்களுக்கும் அவள் வந்துவிடுவாள். என்னைப் போட்டோ எடுத்து தள்ளி விடுவார்.

போன வருடம் ஒரு போட்டியின்போது அந்தப் பெண் உணவகம் வந்தார். எனக்கு 'ஹை' சொல்லிவிட்டு எனக்கு முன்னால் உட்கார்ந்து என்னோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். எந்தவிதமான ஒளிவு மறைவு இன்றி மனதில் பட்டதை அப்படியே பேசினார்.

நான் ரஷ்யா குடிமகன். அவள் இங்கிலாந்து. அவள் நேரடியாகக் கேட்டார்.

''உங்களுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா?''

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். அவர் அடுத்து ஒன்று கேட்டார்.

''நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா…?''

எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. நல்ல அழகி. அதைவிட அவர் பேசுவது மிகவும் எனக்குப் பிடித்து இருந்தது. ஆனால், நான் எதுவும் சொல்லவில்லை.

அவள் பதில் சொல்லச் சொன்னார்.

''நான் இந்த வருடம் விம்பிள்டன் போட்டி முடிந்ததும் கல்யாணம் செய்துகொள்ளலாம்'' என்றேன்.

அவளுக்குக் குஷி. சந்தோஷம்.

விம்பிள்டன் இறுதிப் போட்டி.

மிகவும் சிரமமானப் போட்டி. அமெரிக்க வீரர் சரியான சவாலாக இருந்தார். நான் ஆடும்போது அவர் என்னை உற்சாகமாக விளையாட வைத்தார். அவரின் ஆதரவு என்னைச் சிறப்பாக ஆட வைத்தது. கடுமையான போட்டியாக இருந்தாலும் கடைசியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவள் மைதானத்தில் என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தெய்வமான குழந்தைகள்!
couple with baby
couple with baby
தமிழ் கதை | couple with babyImage credit: AI Image

நான் சந்தோஷத்தில் இருந்தேன். இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று போட்டியில் சாம்பியன் ஆனது. மற்றது என் காதலியின் முத்தம். இரண்டும் என்னைத் தள்ளாட வைத்து விட்டது.

இனி என்ன… ?

உலக சாம்பியன் ஆகிவிட்டேன். என் காதலைச் சொன்னேன்.

அவள் என்னைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்தார்.

அடுத்த மாதம். லண்டன். பெரிய சர்ச்.

எங்கள் இருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்தது.

புது மனைவி. புது இடம். புது வாழ்வு.

அவள் வீட்டில் அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். அறை முழுக்க முழுக்க என் போட்டோக்கள். சிறந்த ரசிகை என்று நான் உணர்ந்தேன்.

எங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் சிறந்த போட்டோகிராஃபர் பட்டம் வாங்கினார். எனக்கு மகிழ்ச்சி.

எங்களுக்கு இரண்டு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இருவரும் சேர்ந்து பேர் வைத்தோம்.

'விம்பிள்டன்..!'

logo
Kalki Online
kalkionline.com