சிறுகதை: ஓவியம்

A Man Drawing
A Man Drawing
Published on
mangayar malar strip

சென்னை. அனாதை இல்லம். ரகு தனக்கு நினைவு தெரிந்தவரையில் இந்த இல்லத்தில்தான் வாழ்ந்தான். வளர்ந்தான். அவனுக்கு இல்லம் மீது அலாதி பாசம். பிரியம். படித்து பட்டம் பெற்றான். இல்லம் நடத்துபவர் ஒரு பெண் மணி. ரகு அவரை அம்மா என்றே அழைப்பான்.

ரகுவிடம் ஒரு தனித் திறமை இருக்கிறது. ஆம். நன்றாக ஓவியம் வரைவான்.

ரகு பட்டம் பெற்ற உடன் இல்லத் தலைவர். “நீ பிரியப்பட்டால் வேலை கிடைத்ததும் தனி வீட்டிற்குப் போகலாம்…” என்றார்.

ரகு அழதுகொண்டே “அம்மா.. எனக்கு அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை எல்லாமே நீங்கள்தான். எனது வீடு இல்லம்தான், என்றான். அவர் பேச்சைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்துபோனார். அவருக்கு ரகு தனது சொந்த மகனாகவே தெரிந்தான், அவ்வளவு பாசம்.

மத்திய அரசு ஒரு ஓவியப் போட்டி அறிவித்தது. முதல் பரிசு 10 லட்சம். தலைப்பு ‘பாரத்’. ரகுவிற்கு போட்டியில் கலந்துகொள்ள ஆசை. இல்லம் அம்மாவிடம் சொன்னான். அவர் வெரிகுட் சொல்லி… பின்னர் வரைவதற்கான எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தார். ரகுவிற்கு உற்சாகம் மற்றும் உத்வேகம் ஊட்டினார்.

ஒவிய போட்டியின் கடைசி நாளுக்கு இன்னும் 9 நாட்கள் இருந்தன. ரகு ‘பாரத்’ பற்றி யோசித்தான். அவனுக்கு சட் என்று ஞாபகத்திற்கு வந்தது ‘பாரத மாதா..’. இல்லம் அம்மாவிடம் சொன்னான். “வெரி குட். நல்ல ஐடியா…தலைப்பிற்குப் பொருத்தமானது". கை குலுக்கி “ஆல் தி பெஸ்ட்..!” சொன்னார்.

ரகு ஓவியம் வரைய ஆரம்பித்தான். பாரத மாதாவை வரையும் முன்பே படம் பற்றி தனது நினைவில் நிறுத்தினான். ஆம். இந்திய வரைபடம் பச்சை நிறத்திலும் அதன் உள்ளே சிங்கத்துடன் பாரத மாதாவை சிவப்பு நிறத்தில் வரைய திட்டம் தீட்டினான். ஆம். சிங்கம் மஞ்சள் நிறத்தில்.

கற்பனை செய்ததை ஒவியமாக மெல்ல மெல்ல கவனத்துடன் வரைந்தான். அவன் அவசரப்படவில்லை. தவறுதலாக ஏதாவது செய்துவிட்டால் அதை சரி செய்ய பெரும் கஷ்டம் ஆகிவிடும்.

எனவே, மிகுந்த அக்கறையுடன் கவனமாக தெள்ளத் தெளிவாக வரைந்தான். 6 நாட்களில் முடித்துவிட்டான்.

வரைந்த ஓவியத்தை இல்லம் அம்மாவிற்குக் காட்டினான். “ஓ.! மை காட்..! பிரமாதம்.. அற்புதம். வண்ணமயம். நிச்சயமாக பரிசு கிடைக்கும்…“ எனச் சொல்லி “எப்படி அனுப்பி வைக்கப் போகிறாய்…?” எனக் கேட்டார்.

“அம்மா... இதற்காக சென்னையிலும் ஒரு அலுவலகம் உள்ளது. அங்கு சென்று கொடுத்தால் போதுமானது…!“

“எங்கே இருக்கிறது..?“

“ம்மா... அண்ணா சாலையில்...”

“இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு… ம்மா.“

“சரி. ஓவியம் முடிந்ததுதானே…?“

“ஆமாம் அம்மா..!“

“சரி.. நீ இன்றே போய் கொடுத்துவிடு. பஸ்சில் போகவேண்டாம். ஓவியத்தைப் பத்திரமாக எடுத்து செல்ல வேண்டும். ஆட்டோவில் போ!” என்றார்.

“மிக்க நன்றிம்மா..!“ எனச் சொல்ல அம்மா ஒரு ₹500ஐ ரகுவிடம் தந்தார்.

ரகு உற்சாகமாக புதுத் தெம்புடன் ஆட்டோவில் அண்ணா சாலைக்கு கிளம்பி சென்றான். ஓவியத்தைப் பத்திரமாக அலுவலரிடம் கொடுத்தான்.

சரியாக ஒரு மாதம். ரகுவிற்கு ஒரு வாட்ஸ்அப் தகவல் வந்தது.

இந்தியா முழுவதும் நடைபெற்ற ஓவியப் போட்டியில் உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது உள்ளது. மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.

இதுதான் அவருக்கு வந்த தகவல். ரகு மிகவும் சந்தோஷப்பட்டான். பேரானந்தம். உடனே இல்லம் அம்மா அறைக்கு சென்றான். “என்ன ரகு…? என்ன விஷயம்…?” என்று கேட்டார்.

ரகு தனது மொபைல் தந்து வாட்ஸ்அப்பை பார்க்கச் சொன்னான்.

அம்மா பார்த்ததும் “ஓ மை காட்… கடவுளே..!” என்று கத்தினார். அவர் பேரானந்தம் கொண்டார். உடனே உதவியாளரை அழைத்து, "இன்று ஸ்பெஷல் சாப்பாடு. வடை, பாயசம், அப்பளம் ஏதாவது ஒரு ஸ்வீட்" என்று ஆனந்தமாக சொன்னார். அவர் நார்மல் மூடிற்கு வர அரை மணி நேரம் ஆனது.

“ரகு நீ அதிர்ஷ்டமான இளைஞர்... உனது திறமைக்கும், கடினமான உழைப்பிற்கு அந்தக் கடவுள் கொடுத்த அன்பளிப்புதான் இது..!” என்றார்.

“ம்மா… எனக்கும் சந்தோஷமாக உள்ளது.!” என்றான் ரகு.

இல்லம் அம்மா விஷயத்திற்கு வந்தார். “₹10 லட்சத்தை என்ன செய்யபோகிறாய்.?” என்று கேட்டார்.

ரகு “ம்மா… இது நீங்கள் எனக்கு தந்ததாகவே நினைக்கிறேன். எனவே, ₹9 லட்சத்தை இல்லம் பெயரிலும் மீதி ₹1 லட்சத்தை என் முதுமை பருவத்திற்காக எனது கணக்கில் போடலாம் என நினைக்கிறேன்.“

“ஆர் யு மேட்…? என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா.?“

“எனக்குப் புரியவில்லை..!“

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'மதுபான விலாஸ்'
A Man Drawing

“மண்டு… மண்டு… இந்த இல்லம் எப்போதும் இருக்கும் என்று நினைத்தாயா…? எனக்கும் வயசாகிவிட்டது. நான் இறந்துவிட்டால் இந்த இல்லத்தைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை.. நீ வெளியுலகம் தெரியாமல் இருக்கிறாய்.. அச்சு பிச்சு… வெகுளியாக இருக்கிறாய்… இது பணநாயக நாடு. பணம் இல்லாதவன் பிணம். ஜடம்..!”

“அம்மா எனக்கு ஒன்றும் புரியவில்லை... சத்தியமாக...!” இது ரகு.

“ரகு... கண்ணா... இல்லத்திற்கு நீ உதவ நினைப்பதில் தவறு இல்லை. ஏதோ 10 அல்லது 20 ஆயிரம் கொடுத்துவிட்டு போ. இல்லையா..? ₹1 லட்சம் கொடு. மீதியுள்ள ₹9 லட்சத்தை உன்னிடம் வைத்துக்கொள். ஏதாவது ஒரு பிசினஸ் ஆரம்பி… சிலருக்கு வேலை கொடு… சுதந்திரமாக இரு… அதை விட்டுவிட்டு இல்லமாம்..! உதவியாம்..!“

“ம்மா... மெய்யாகவே சொல்லுகிறீர்களா..?“

“ஆம். மண்டு. நீ தனி ஆளாக முன்னுக்கு வந்து கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று இருக்கவேண்டாமா..?”

“சரிம்மா நான் யோசித்துச் சொல்கிறேன். கிளம்புகிறேன்..!” இது ரகு.

ஒரு வாரம் ஆனது.

ரகு அம்மா அறைக்குச் சென்றான்.

“ம்ம்... என்ன…?”

“அம்மா... நான் யோசித்துப் பார்த்தேன். இரண்டு விஷயங்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அழுக்கு இருக்கும் இடம்!
A Man Drawing

ஒன்று ஒரு ஓவியப் பள்ளி திறப்பது; அடுத்தது ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிப்பது. இப்போது செயற்கை நுண்ணறிவு வேறு வந்துவிட்டது. நானும் ஒரு விஞ்ஞானி ஆக கம்ப்யூட்டர் கல்வி அவசியம். எனக்கு படிப்பதுதான் வேலை. கம்ப்யூட்டர் சென்டருக்கு இரண்டு உதவியாளர்களை வைக்க முடிவு செய்து உள்ளேன். ஓவிய பள்ளிக்குத் தலைவர் நான்தான். அதே மாதிரி கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரும் நான்தான்.”

“குட்... வெரி குட். நல்லா யோசிச்சு இருக்கே… எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.”

“அம்மா.. எல்லாம் நீங்கள் கொடுத்தது…!”

“ரகு… எனக்கும் இந்த இல்லம் நடத்தவே பிரியமான விஷயம். ஆனால், எனக்குப் பிறகு இதை யார் பார்ப்பார்கள் என யோசித்து முடிவு எடுத்துவிட்டேன். ரகு. இந்த இல்லத்தை உன் பேருக்கு மாற்றி விடுகிறேன். நீ இல்லத்தைக் கண்காணிக்கும் மேலாளராக இருந்து உனக்குப் பிடித்த சேவையைச் செய்.. செய்வாயா.?”.

“அம்மா.. ஏன் அபசகுணமாக பேசுகிறீர்கள்…?”

“இல்லை ரகு… எனக்குப் பின்னர் இந்த இல்லம் சேவை செய்ய வேண்டும் என நிச்சயமாக ஆசை…!”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மனைவிகள் மாறுவதில்லை!
A Man Drawing

“அம்மா…! இது என் தாய் வீடு. இதை நிச்சயமாக என் சேவை பணியே முதலானது..! என் உயிர் இருக்கும் வரை இந்த இல்லம் வெற்றிகரமாக இயங்கும். “

“ரொம்ப நன்றி ரகு… ஆமாம் ஓவிய பள்ளி மற்றும் கம்ப்யூட்டர் சென்டருக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய்.? “

“பாரத மாதா ஓவிய பள்ளி... பாரத மாதா கணினி மையம்.!!”

“சூப்பர் ரகு..! வாவ்… வாவ்..!!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com