சிறுகதை: பாட்டியைக் காணோம்!

பொருளாதார வசதிக்காகவும் சுயநலத்திற்காகவும், நம் வீட்டு பெரியவர்களின் உணர்வுகளையும் அவர்களின் வாழ்நாள் நினைவுகளையும் அலட்சியப்படுத்துவது, மீள முடியாத பெருந்துயரத்திற்கு வழிவகுக்கும்.
Grandma | Tamil short Story
Grandma | Tamil short StoryAI Image
என். கோமதி

முப்பது வருடங்களாக பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். மங்கையர் மலரில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. புடவைகள், மேஸ்ட்ரோ குக்கர், சிவகாமியின் சபதம்மற்றும் கல்கி குழும நான் வாங்கிய பரிசுகளில் ஹைலைட். வயது66 வாசிப்பை நேசிக்கும் எனக்கு நாவல்கள் படிப்பது பிடிக்கும். வாழ்க்கையை ரசிக்கும் நான், பிரச்னை வந்தால் ப்ரீஸ் ஆகாமல் வாட் நெக்ஸ்ட்ன்னு அடுத்த கட்டம் சென்று விடுவேன்.

Updated on
MM strip
MM strip

"என்னங்க பாட்டியைக் காணோம்ன்னு, கீழே வீடே அல்லோலப்படுது. நீங்க என்னடான்னா மணி எட்டாகியும் தூங்குறீங்களே" கணவனை எழுப்பினாள் பவித்ரா.

"பவி..இன்னிக்கு சன்டே தானே.. தூங்க விடு" முனகி விட்டு, புரண்டவனிடம், "கீழே மாமா உங்களை கூப்பிடுறாங்க. எழுந்திருங்க" உலுக்கினாள். எழுந்து, பல் தேய்த்து விட்டு, டிஷர்ட்டை போட்டு கீழே இறங்கி வந்தான்.

ஹாலில், குடும்பமே சோகமாய் கூடியிருக்க, அப்பா ஆரம்பித்தார், "ஜெகன் ...காலையில இருந்து பாட்டியை காணோமடா.."சொல்லும் போதே, குரல் கம்மியது.

"பார்வதி அத்தை வீட்டுக்கு போயிருக்கும். நேத்து கூட, பார்வதி இருக்குற கொக்கிர குளத்துல மழைத் தண்ணி ரோடெல்லாம் வெள்ளமாப் போகுதுன்னு பேப்பர்ல போட்டிருக்கான். என்னாச்சுன்னு போயி பார்க்கணும்ன்னு சொல்லிட்டிருந்தா.." ஜெகன் சொல்ல, "அண்ணா, அத்தைக்கு போன் போட்டுக் கேட்டேன். வரலைன்னு சொல்லிட்டாங்க " தங்கை சாரு பதிலளித்தாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com