

ா நித்யா... வாங்க மாப்பிள்ளை..." என்று சொல்லிக் கொண்டே, அவர்களுடன் வந்த பேரன் வருணை தூக்கி கொஞ்சினாள் பிரேமா.
"அம்மா, நாங்க வெளியே போகணும். ஏதாவது டிபன் செய்" என்றாள் நித்யா.
"சரிம்மா" என்று சமையலறைக்கு சென்றாள் பிரேமா.
"ஏம்மா நித்யா, வரேன்னு முன்கூட்டியே சொல்லி இருந்தா, அம்மா எல்லாம் செய்து வைத்து இருப்பாளே" என்றார் அப்பா சங்கரன்.
"சர்பரைஸா இருக்கட்டுமேன்னு தான் சொல்லலை."
"குழந்தையா இருக்கும் போது இருந்த குறும்பு தனம் அப்படியே இருக்கு."
"போங்கப்பா… என்று சிணுங்கிக் கொண்டே, சரிப்பா, நீங்க எப்படி இருக்கீங்க. சுகர் மாத்திரை விடாமல் போடுறிங்களா? வாக்கிங் போறிங்களா?" என்று அப்பாவின் நலனில் அக்கறையுடன் கேட்டாள்.
"இம்... எல்லாமே ஓகே. ஆனால் அம்மாவுக்கு தான் அடிக்கடி எதாவது உடம்பு படுத்திக் கொண்டே இருக்கு."
"என்னிடம், அம்மா எதுவுமே சொல்லலையே?"
"அவள், யாருடைய மனதையும் சங்கடப்பட விரும்பாமல், மெளனம் காப்பவள் ஆச்சே!"
"அப்படியா! நான் கேட்கிறேன். நீங்க கவலை படாதிங்க.”
அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகரத் தொடங்கியது.