சிறுகதை: சீசன் வியாபாரம்!

Tamil short story | Village funeral
Tamil short story | Village funeralImg credit: AI Image
Updated on
MM strip
MM strip

ராஜவேலு பொஞ்சாதி குருவம்மாவை வாசலுக்கு அழைத்தான்.

"ஏய்யா தொரை என்னா சேதி" ரொம்ப பவ்யமாக கூப்பிடறே!

"அதெல்லாம் ஒன்னுமில்ல. நானு பைனான்ஸ் பரமசிவம் அண்ணாச்சியை பாத்துட்டு வரேன்; வந்து சேதி சொல்றேன்" என மஞ்சபைய கக்கத்தில் வச்சுக்கிட்டு கிளம்பினான்.

வராந்தாவில் நாடா கட்டிலில் படுத்திருந்த தாயம்மா 'ஹச்' என தும்மினாள்.

கோபம் தலைக்கேற, "சனியன் புடிச்சது வெளியே போகும்போது தும்முது சகுனமே சரியா இல்லயே!" என குழம்பிவாறே!

"ஏய் குருவம்மா, கொஞ்சம் தண்ணி கொண்டாடி, புறப்படும்போதே உங்க அம்மா தும்முது," எனக் கூறியபடியே தண்ணீா் குடித்துவிட்டு கிளம்பினான்.

நல்லவேளை பைனான்ஸ் பரமசிவம் கிளம்ப ரெடியானாா்!

"வணக்கம் எசமான்."

"சொல்லுய்யா ராஜவேலு பணம் கொன்டாந்திருக்கியா" என்றாா் பரமசிவம்.

"இல்ல எசமான், பத்துநாளா வேலை வித்து சரியா இல்ல... அதான் பழைய பாக்கிய கொடுக்க முடியலே!

கொஞ்சம் பொருத்துக்க சாமி" என தலய சொரிந்தான்!

"சரி, சரி சீக்கிரமா கணக்கை முடிய்யா," என்றவாறே கிளம்பிய பரமசிவத்தை தடுத்து நிறுத்திய ராஜவேலுவை தொடர்ந்தான்.

"என்னய்யா சொல்லு?"

"அது ஒன்னுமில்லே... மவளுக்கு தோதா காடு வெட்டியிலோ்ந்து ஒரு வரன் வந்துச்சு. அவகளுக்கு மவளை புடிச்சுப்போச்சு" என்ன கழுதய ரெண்டாம் தாரமா கேட்டாக; கட்டின புடவையோட வந்தா போதுமுன்னு சொன்னாக; அதோட கைத்தாம்பூலமா மாத்திக்கிட்டோம்; மூனு பவுன் செயின் போட்டாக; மவளுக்கும் ராகு கேது தோஷமாம் ரெண்டாந் தாரமாத்தான் போகுமாம்; கட்டம் சரியில்லைன்னு ஜாதகம் பாத்தவரு சொன்னாரு; இருந்தாலும் நாம வெறுசா அனுப்ப முடியாது; அதனால ஒருமாசத்தில திருப்பிடறேன் ஒரு லட்சரூவா தேவைப்படுது" என்றான் தயங்கியவாறே.

"யோவ் என்ன வெளையாடறியா? எப்படியா திருப்பிக் கொடுப்பே" என்றாா் பரமசிவம்.

"அதுக்கு வழி வெச்சிருக்கேன், எலக்சன் பாா்ட்டி நாலு போ் கிட்டேயும் என்னோட மவன் பேசிட்டான். நானு, என் பொஞ்சாதி, ரெண்டுபேரும் ஒரு கட்சிக்கு கேன்வாசிங் போறோம்.

மூனு வேலையும் சாப்பாடு போட்டு டெய்லி ஒரு தலைக்கு தவுசன் தேறும் அதேபோல மவனுவ ரெண்டுபேரும் மருமவளை அழைச்சிக்கிட்டு பக்கத்து தொகுதிக்கு போறானுக!

அங்க புதுகட்சி வேட்பாளராம்; காசை அள்ளி வீசுவாராம் கட்சித்தலைவரே பல கோடில புறளுவாராம்! புது ஆளு காசு கொஞ்சம் கூடவே வரும்" என்றான்.

"பரவாயில்லையே சீசன்ல மாம்பழம், கெழங்கு, இளநீா் விப்ப இப்ப தோ்தல் சீசன் வியாபாரமா? நடத்து நடத்து ஒன்னோட காட்டுலதான் மழை? ஆக பொிய ரூவா ஒன்னறை தேறுமா." என்றாா் பரமசிவம்.

நமட்டு சிாிப்பு சிாித்தான் ராஜவேலு.

"வரும், வரும், கட்டாயமா வரும் எசமான்; பணத்தை சாயங்காலம் கொடுங்க அதோட போனமாசமே பொஞ்சாதி குழு லோன் போட்டு லட்சரூபா வச்சிருக்கா! அதையும் சேர்த்து போட்டு. நீங்களே பரஞ்சோதி கடைல கொடுத்து ரெண்டு பவுன் செயினா வாங்கிக்கொடுங்க, நீங்க வெவரமானவரு நகைக்கடைல ஏமாத்த முடியாது" என்றான்!

"சரி ஒன்னு செய் குடும்பத்தோடசாயங்காலமா வந்து எல்லாரும் பாண்டு பேப்பர்ல கையெழுத்து போடுங்க."

"நீ வெச்சிருக்கற லட்ச ரூபாயையும் எடுத்துக்கிட்டு வா! அப்படியே நகைக்கடைக்கு போயி நகை வாங்கிடலாம்" என்றாா்.

"சரி எசமான் நானு கிளம்பறேன். எலக்சன் முடிஞ்ச ரெண்டுநாள்ல பணத்தை திருப்பறேன்" என்றான் ராஜவேலு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாய்!
Tamil short story | Village funeral

"குருவம்மா, குருவம்மா, எங்க போய் தொலைஞ்ச,

போனகாாியம் நல்ல விதமா முடிஞ்சது நாளைலோ்ந்து நீ, நானு, நம்ம பசங்க, மருமவ புள்ளைங்க, ஆறு பேரும் எலக்சன் கேன் வாசிங்போறோம் சம்பளமெல்லாம் பேசியாச்சு 20 நாள்தான் வேலை, எப்படியும் பொிய ரூவா ஒன்னறை வரும் அதோட பைனான்ஸ் விஷயம், மவ கல்யாணத்துக்கு செயின் வாங்கறது" என நடந்த கதையெல்லாம் சொன்னான்.

"உங்க அம்மாவை மவ ராகினி பாா்த்துப்பா, பொண்ணு பாா்த்திட்டு போயிட்டதால அவ வீட்லேயே இருக்கட்டும். உங்க அம்மாவுக்கு தொணையா இருப்பா; சாயங்காலம் நம்ம நாலுபேரும் பைனான்ஸ்காரர் வூட்டான்ட போயி கையெழுத்து போட்டுட்டு அப்படியே அவரை அழைச்சிட்டு நகை கடைக்கு போவோம்" என்றான் ராஜவேலு.

பையன்களும் ஓகே சொல்ல விஷயம் எளிதாக முடிந்தது.

பரமசிவம் தொடர்ந்தாா், "தம்பி ஒங்களைநம்பி லட்சக்கணக்கில பணம் கொடுத்திருக்கேன். எலக்ஷன் முடிஞ்ச மறுநாள் என்னோட பணம் வட்டியோடு வந்துடனும்" என்றாா் கறாராக.

காலையில் ஆறு பேரும் அவரவர் தொகுதி வேட்பாளர் வீட்டிற்கு போய் வேலையில் சோ்ந்தாா்கள்; தினமும் இரவு பத்துமணியானது.

தோ்தலும் முடிந்தது!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஜானியும் மோதிரமும்!
Tamil short story | Village funeral

காலைல பரமசிவம் ராஜவேலுவை பாா்க்க வந்தாா்; வாசலில் ஒரே கூட்டமாக இருந்தது. "என்ன?" என கூட்டத்தில் கேட்க, "அதுவா அவரோட மவ ராகினி நேத்து நைட்டு நடுத்தெரு நாராயணன் மகனோட மாப்பிள்ளைபோட்ட முனுபவுனு அதோட ராஜவேலு வாங்கினபவுன் செயினை போட்டுக்கிட்டு எலக்ஷன்ல வந்த லட்ச ரூவா பணத்தோட வீட்டைவிட்டு ஓடிட்டா."

பேத்தி ராகினி ஓடிப்போன அதிர்ச்சில அவனோட மாமியாரும் செத்துடுச்சு" என கூறியவுடன், ராஜவேலு வீட்டுக்கு உள்ளே போய் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினாா் பரமசிவம். அதோடு நாலு கட்சி வேட்பாளர்களும் மாலையுடன் ராஜவேலு வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போனாா்கள்.

வந்தவர்கள், மகள் ராகினி காடுவெட்டி மாப்பிள்ளை போட்ட மூனு பவுன் நகையுடன் எலக்ஷன்ல வந்த லட்ச ரூவாபணத்தோட ராஜவேலு வாங்கின நகையுடன் ஓடிப்போன விஷயம் டரெண்டிங் ஆனது.

மாமியார் பாடியை எடுக்கும் நேரம். ரெண்டாம் தாரமாக கட்டிக்க இருந்த காடுவெட்டி கல்யாணப்பையன் நாலைந்து ரவுடிகளுடன் ராஜவேலு வீட்டிற்கு வந்தான் கொட்டு சப்தம் நிறுத்தப்பட்டது. வேறு சப்தம் வந்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com