சிறுகதை: ஸம்மர் ஹாலிடேஸ்..!

short story summer holidays
summer holidayscredit AI Image
Updated on
MM strip
MM strip

கேட்டட் கம்யூனிட்டியில் வசிக்கும் சாருலதாவிற்கு சம்மர் ஹாலிடேஸ் எப்படிச் சமாளிப்பது? என்று நினைத்தாலே 'திக்'கென்றது. அவளுக்கு ட்வின்ஸ்; ஒரு பெண், ஒரு பையன். இருவரும் நான்காவதிலிருந்து ஐந்தாம் கிளாஸிற்குச் செல்கிறார்கள் விரைவில். தேவையான பொழுது சேர்ந்து கொள்வார்கள்; இல்லாவிட்டால் எதிரும் புதிரும்தான்!

இவர்கள் போதாது என்று, இவர்களுக்கு ஈடான ஒரு பட்டாளமே உண்டு கம்யூனிட்டியில். பல்வேறு பாஷைகள் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் ஒரே கும்பலும் கூச்சலுமாக இருக்கும். சம்மர் ஹாலிடேஸில் கேட்கவே வேண்டாம், இடமே அதிரும்.

இது போதாது என்று இவளுடைய நாத்தனார், தன் பெண் மற்றும் பிள்ளையுடன் வரப்போவதாக வந்த தகவல், சாருவை மேலும் திக்குமுக்காட வைத்தது. அவள் வேறு வந்தால், பேசியே ஆழம் பார்ப்பாள்; ஆனால் ஒரு வேலையும் செய்ய மாட்டாள். அவள் பெண், பிள்ளை பற்றிச் சொல்லவே வேண்டாம், படாத பாடு படுத்தும்! ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்குவிக்கும். சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. இப்பொழுது இருக்கும் செலவுகள் சுமையே அதிகம்; இதில் நாத்தனார் வேறு வந்தால் என்னதான் செய்யப்போகிறாளோ சாருலதா? மலைப்பாக இருந்தது.

அவள் வந்தால் அண்ணன் (இவள் கணவன் தான்) - தங்கை பாசம் வேறு 'பாச மலர்' படத்தை மிஞ்சும். நாத்தனார் அதை அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு இஷ்டத்திற்கு வாங்கிக்கொள்வாள். கேஸ் சிலிண்டர் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை, விலைவாசி வேறு அதிரச் செய்கிறது. இவளுடைய ட்வின்ஸ் வேறு, "போன வருடம் மாதிரி எந்த சம்மர் கிளாஸ் அல்லது கேம்பிற்கும் போக மாட்டோம்; அது ரொம்ப போரிங்!" என்று இப்போதே நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள் சாரு. போதாக்குறைக்கு செல்போன், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹாரி பாட்டர் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. "எப்படி இவற்றை எல்லாம் கட்டி மேய்த்துக் கரை சேரப் போகிறோமோ?" என்று யோசித்தபடி திடீரென்று கண் விழித்த சாருலதாவிற்கு, தான் கண்டது 'கனவு' என்று புரியச் சிறிது நேரம் பிடித்தது.

அதே சமயம் அவளுக்குப் பட்டது - அது வெறும் கனவு மட்டும் அல்ல, எச்சரிக்கை மணி அடித்துள்ள 'டிரைலர்' என்று! உடனே திட்டம் தீட்டினாள். கணவன் குமாருக்கு செல்போனில் பேசினாள். திட்டம் 'ஓகே'யானது.

இதையும் படியுங்கள்:
வேட்புமனுத் தாக்கலின் பண்பாடும் வாகன முகப்பு விளக்குகளும்...
short story summer holidays

பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும், சம்மர் ஹாலிடேஸ் ஆரம்பித்த பிறகு சாருலதா இங்கேயே கேட்டட் கம்யூனிட்டியில் இருந்து கொண்டு ட்வின்ஸ் மற்றும் வரப்போகும் நாத்தனார் குழந்தைகளைச் சமாளிக்கப் போகிறாளா? அல்லது திட்டப்படி தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்குப் போகப் போகிறாளா என்று!

எனி ஹொவ், சாரு லதாவிற்கு 'பெஸ்ட் விஷஸ்'!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com