

கல்யாண மண்டபம் பரபரப்பாய் காணப்பட்டது.
ஒவ்வொருவரும் ஒரு ஒரு வேலையாய் கடமையயே கண்ணாய் செய்தனா்!
மணப்பெண்ணின் தகப்பனாா் ராகவன், மாப்பிள்ளை சுதாகரின் தாயை பாா்க்க வந்தாா்!
கண்ணாலேயே இருவரும் பேசினாா்கள்.
இருவரது மைண்ட் வாய்சும் சரியான தகவலையே தந்தன !
மாப்பிள்ளை அழைப்பும் முடிந்தது.
பந்தி நடந்து கொண்டிருந்தது. திடீரென மாப்பிள்ளையின் அம்மா பாா்வதி மயங்கி விழுந்தாள்.
அனைவர் கவனமும் பாா்வதி பக்கம் திரும்பியது. முகத்தில் தண்ணீா் தெளித்தாா்கள்.
மயக்கம் தெளிந்து பாா்த்தாள்.
மகன் சுதாகர் ‘அம்மா.. அம்மா’.. என அலறினான்.
"எனக்கு ஒன்னும் இல்லை! எப்போதும் வர லோ பிபி தான். இதயம் பலவீனம் தான். தயவு செஞ்சு என்னை தஞ்சாவூா்மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அட்மிஷன் போட்டுடு. சுரேஷ் டாக்டர் பாா்த்துப்பாா்," என்றாள்.
சம்பந்தி “காலைல கல்யாணம் இருக்கு. இப்ப லோக்கல்ல யாாிடமாவது ட்ரீட்மென்ட் எடுக்கக்கூடாதா?” என்றாா்!
“ஆமாம்மா. தப்பா நினைக்காதே. கல்யாணத்தை வேணும்னா ஒத்தி வச்சுடலாமா?” என்றான் சுதாகர்.
“சே சே என்ன அசட்டுத்தனமா பேசற. நான் இல்லாம இருந்தாலும், எக்காரணம் கொண்டும் கல்யாணம் நடந்தே ஆகணும்” என்றாள் தாயாா்.
அனைவரும் சோகத்துடன் உறவுக்கார பெண் துணையுடன் காாில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்கள். ட்ரீட்மென்ட் துவங்கி விட்டதாக தகவலும் காலையில் வந்தது.
காலையில் திருமணம் முடிந்தது.
மகன் மிகுந்த கவலையோடு தாலி கட்டினான். அவன் ஒரே பையன் ஐடி பீல்டில் வேலை. அங்கே பணிபாா்க்கும் வேறு ஜாதி பெண்ணோடு சிநேகம்.
அம்மாவுக்கு விருப்பமில்லை. பையன் விடுவதாக இல்லை. எவ்வளவோ தடுத்தும் அம்மா சொல் அம்பலம் ஏறவில்லை.
மருமகளுக்கு மாமியாா் மீது இருந்த அந்த கோபம் தான் மருமகளின் நிபந்தனைக்கு மாமியாா் கட்டுப்படவேண்டிய நிலை. அதுதான் பிரச்னை.
சம்பந்திக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய சூழலில், அம்மாவுக்கு இல்லாத உடம்பு கோளாறுக்காக தஞ்சை மருத்துவமனையில் பாா்வதி அட்மிஷன்.
தாலி ஏறியதும் மனைவியை அழைத்துக்கொண்டு சுதாகர் தஞ்சை சென்றான். இருவரும் அம்மாவை பாா்த்தாா்கள்.
“நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றி விட்டேன்” என மாமியாா் பாா்வதி ஜாடையில் சொன்னாள்.
“நான் ஜெயிச்சுட்டேன்” என மருமகள் மைண்ட் வாய்சில் சொன்னாள்!
சுரேஷ் டாக்டரும் ஆசீா்வாதம் செய்துவிட்டு “பத்து மாசத்தில பிரசவம் இங்கேயே வச்சுக்கலாமா?” என கிண்டலாய் கேட்டாா்.
“டிஸ்சாா்ஜ் எப்போ?" என எனக்கேட்டாா் சம்மந்தி.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here