பாட்டி காலத்து அளவீடுகள்: படி, உலக்கு, மரக்கால் இன்றைய கிராம் கணக்கில் எவ்வளவு?

பாட்டி காலத்து படி, உழக்கு, ஆழாக்கு, மரக்கால் போன்ற பாரம்பரிய அளவீடுகள் இன்றைய நவீன கிராம் மற்றும் கிலோகிராம் கணக்கில் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
அளவீடுகள் | traditional measurements
அளவீடுகள் | traditional measurementsImage credit: Chatgpt
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 
MM strip
MM strip

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தராசு எடைகளைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பலருக்கும், நம் பாட்டிமார்கள் பயன்படுத்திய ‘படி’, ‘உழக்கு’, ‘மரக்கால்’ போன்ற பாரம்பரிய அளவீடுகள் எத்தகைய வியக்கத்தக்க கணக்குகளைக் கொண்டிருந்தன என்பது தெரியுமா? அரிசியும் பருப்பும் அளக்கப் பயன்படுத்தப்பட்ட அந்த காலத்து முகத்தலளவை முறைகள், இன்றைய நவீன கிராம் மற்றும் கிலோகிராம் கணக்கில் சரியாக எவ்வளவு தெரியுமா? இந்த பாரம்பரிய அளவீடுகளின் சுவாரஸ்யமான ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்வோம்!

படி, உலக்கு, ஆழாக்கு, மரக்கால் என்று கூறப்படும் பாட்டி காலத்து அளவு முறைகள் இன்றைய கிராம் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்பது இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.

அந்தக் காலத்தில் நெல், அரிசி, கடலை போன்ற தானியப் பொருட்களை அளப்பதற்கு அந்த மரக்கால் அல்லது படி, காப்படி போன்ற அளவை பொருட்கள் எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவுக்கு கொள்ளளவு என்று பெயர். அந்த கொள்ளளவு தான் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இப்பொழுது எல்லாம் வெயிட் என்ற அளவுக்கு மாறி உள்ளோம்.

பாட்டி காலத்துத் தாத்தாக்கள் அரிசி, பருப்பு அளக்கப் பயன்படுத்திய பாரம்பரிய மர அளவை முறைகள் (படி, உலக்கு, ஆழாக்கு, மரக்கால்) போன்றவற்றை பயன்படுத்தினார்கள். இன்று அனைத்து பொருட்களும் தராசு என்ற வெயிட் மூலம் எடை போட ஆரம்பித்து விட்டோம். பாட்டி காலத்தில் அளந்த அளவை முறைக்கும் அவற்றின் இன்றைய கிராம்/கிலோகிராம் அளவுகள் (தோராயமான கணக்கு) எவ்வளவு என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்!

ஆளாக்கு, உலக்கு, காப்படி மூன்றிலும் எது சிறியது என்று முதலில் தெரிந்து கொள்வது அவசியம். உலக்கா..? ஆழாக்கா..? என்று சந்தேகம் வருபவர்களுக்கு ஆழாக்கு தான் மூன்றிலும் மிகச் சிறியது.

இதையும் படியுங்கள்:
மிக்ஸியில் அரைக்கும்போது சத்தம் அதிகமாக வருவது ஏன் தெரியுமா?
அளவீடுகள் | traditional measurements

இவற்றின் அளவுகள் சிறியதிலிருந்து பெரியது என்ற வரிசையில் இதோ:

ஆழாக்கு (மிகச் சிறியது) = சுமார் 150 - 175 மி.லி

உலக்கு / உழக்கு (2 ஆழாக்கு) = சுமார் 300 - 350 மி.லி

காப்படி (அரை படி / 2 உழக்கு) = சுமார் 300 - 350 கிராமிற்கு மேல் (படியில் நான்கில் ஒரு பங்கு அல்லது அரை படி கணக்கு)

விவரமான விளக்கம்:

​ஆழாக்கு: இது ஒரு சிறிய அளவீடு. பொதுவாக ஒரு வேளை உணவிற்குத் தேவையான அரிசியை அளக்க இதைப் பயன்படுத்துவார்கள். ​இன்றைய சமையலறைக் கப் (Measuring Cup - 200ml) அளவோடு ஒப்பிடும்போது, ஒரு ஆழாக்கு என்பது தோராயமாக 150 மி.லி முதல் 175 மி.லி கொள்ளளவு உடையது.

உலக்கு: இரண்டு ஆழாக்குகள் சேர்ந்தது ஒரு 'உலக்கு' எனப்படும். ஒரு குடும்பத்திற்குத் தேவையான சமையல் அளவுகளைச் சொல்லும்போது 'அரை உலக்கு அரிசி', 'ஒரு உலக்கு பருப்பு' என்று பாட்டிமார் கணக்குப் போடுவார்கள். இது தோராயமாக 300 முதல் 350 கிராம் வரை வரும்.

அளவீடுகள் | traditional measurements
அளவீடுகள் | traditional measurementsImage credit: Gemini AI

படி (மகா / நாழி):

ஆழ அமுக்கி அளக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால்நாழி தோழி!

நிதியும் கணவனும் நேர் படினும்

தத்தம் விதியின் பயனே பயன்! என்கிறார் அவ்வையார். படி,(நாழி) என்ற வார்த்தையை அப்பொழுது எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

​இரண்டு உலக்குகள் அல்லது நான்கு ஆழாக்குகள் சேர்ந்தது ஒரு 'படி' எனப்படும். அக்காலத்தில் அரிசி வாங்கும்போதும் விற்கும்போதும் இந்த 'படி' அளவுகோல் தான் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு படி அரிசி என்பது ஏறக்குறைய முக்கால் கிலோ (600 - 700 கிராம்) வரும். கிட்டத்தட்ட முக்கால் கிலோ கிராம் எடை உடையது. (சில ஊர்களில் இதை 1 கிலோவுக்கு அருகில் வரக்கூடிய அளவிலும் பயன்படுத்துவதுண்டு).

மரக்கால்:

இது மிகப்பெரிய அளவீடு. ரெண்டு பெரிய படிகள், நான்கு சின்ன படி, 8 காப்படிகள் சேர்ந்தது 1 மரக்கால் (இதை ஒரு 'குருணி' என்றும் சொல்வார்கள்). அறுவடை காலங்களில் நெல் அளக்க, களத்துமேடுகளில் மொத்தமாகத் தானியங்களை அளக்க இந்த மரக்கால் பயன்பட்டது. இது இன்றைய கணக்கில் சுமார் 5 கிலோ வரை இருக்கும்.

பதக்கு என்பது இரண்டு மரக்கால் அளவை கொண்டது.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீரங்கத்து நாவில் கரையும் கதம்ப சாதம்: வீட்டிலேயே செய்வது எப்படி?
அளவீடுகள் | traditional measurements

சிறப்புக் குறிப்பு: தானியங்களின் அடர்த்தி மற்றும் வகையைப் பொறுத்து (அரிசி, கம்பு, ரவை போன்றவை) எடையில் சிறிய அளவில் (கிராம் கணக்கில்) வேறுபாடுகள் இருக்கக்கூடும். இதுதான் கொள்ளளவுக்கும், தராசு எடைக்கும் உள்ள அளவீடுகள்.

இதைப் படிப்பதன் மூலம் அந்த காலத்து பாட்டி மார்களின் அளவு முறைகளைப் பற்றியும் இன்றைய கிராம் கணக்கில் அவை எப்படி அளக்கப்படுகிறது என்பதைப் பற்றிய தெளிவினை பெறுவார்கள்.

காலத்தால் அழிந்து வரும் நம் முன்னோர்களின் அளவை முறைகளைத் துல்லியமாக அறிந்துகொள்வதன் மூலம், நவீன சமையலறையிலும் பாரம்பரிய பாணி சமையல் அளவுகளை எளிதாகப் புரிந்து கையாள முடியும்.