
நவ ரஸங்களில் அனைவரும் விரும்பும் ரஸம் சிருங்கார ரஸம். ப்ரேமை – அதாவது காதல் ரஸம்!
இந்த ரஸத்தை 49 பாவங்கள் வெளிப்படுத்துகின்றன.
சிருங்கார் என்ற வார்த்தை, சிருங்க + ஆர் என்ற இரு வார்த்தைகளின் சங்கமம். சிருங்க என்ற வார்த்தையின் அர்த்தம் காம உணர்ச்சி ஏற்படுதல். ஆர் என்பதன் அர்த்தம் அதிகமாகிக் கொண்டே போவது.
இந்த உணர்வை வெளிப்படுத்தும் முக்கியமான அங்கம் கண்!
*அழகியின் கண்ணின் தன்மையை வள்ளுவரைத் தவிர வேறு யாரால் தான் அழகுற விளக்க முடியும்?
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து (குறள் 1085)
என்று பெண்ணின் கண்ணைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர்
உயிரை எடுக்க வருவதால் யமனோ?
கூர்மையாகப் பார்ப்பதால் கண்ணோ?
மருண்டு பார்ப்பதால் பெண் மானோ?
இம்மூன்றின் தன்மையும் இப்பெண்ணின் கண்களில் உள்ளன.
*‘டு சோபியா’ (To Sophia) என்ற கவிதையில் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி (Shelley) உனது ஆழ்ந்த கண்கள், இரட்டை கிரகமோ (Thy deep eyes, a double planet) என்று வியக்கிறான்.
*மகாகவி பாரதியார் “சுட்டும் விழிச்சுடர் தான் சூரிய சந்திரரோ” என்று கண்ணம்மாவின் விழிகள் பற்றி வியந்து கூறினார்.
இந்தக் கண்ணழகை வியக்காத, விவரிக்காத கவிஞர்களே இல்லை; அதன் நுட்பங்களை பாடல் வரிகளில் அவர்கள் தரும் போது பிரமிக்கிறோம்.
பாடலில் வைஜயந்திமாலா தன் கண்ணழகைக் காண்பித்துக் கேட்கிறார் இப்படி:
பெண் : யாரென்று கேட்காததேனோ யாரானால் என்னென்று தானோ -
நேராக நின்று யாரென்று கேட்டால் கூரான வேல் பாயும் என்றோ
இந்தக் காட்சியில் காதலின் சக்தியை வெளிப்படுத்தும் கண்ணழகைக் கவிஞர் வர்ணிக்க அதை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி நம்மை பிரமிக்க வைத்தார் வைஜயந்திமாலா.
இன்றும் அனைவரும் (யூடியூபில்) பார்த்து மகிழும் கண்ணழகுப் பாடல் இது.
*அடுத்ததாக 1960ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமான 'அடுத்த வீட்டுப் பெண்' படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி நல்ல வரவேற்பைப் பெற்ற காட்சி.
கே.ஏ. தங்கவேலு, டி. ஆர். ராமச்சந்திரன், அஞ்சலி தேவி ஆகியோர் இடம் பெற்ற பாடல் காட்சி இது. பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் இது. இயற்றியவர் தஞ்சை ராமையாதாஸ்.
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணீ போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுச் செல்லாதே
அடுத்து இன்னொரு பாடல்.
கண்களும் கவி பாடுதே உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே கண்ணே
திருச்சி லோகநாதன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் பாடும் இந்த அழகிய பாடலை இயற்றியவர் தஞ்சை என். ராமையாதாஸ்.
*அடுத்து 1965ல் வெளியான எம்.ஜி.ஆர் படமான எங்கவீட்டுப் பிள்ளையில் ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்
அழகிய நடனக் காட்சி இது. விஜயலட்சுமியின் நடனத்தை ரசிக்காதவர் இல்லை.
பாடலைப் பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி
அடடா! இன்னும் எத்தனை அழகிய கண் பாடல்கள்.
1. வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண் அசைவில் கோடிக் கோடி கற்பனைகள் தந்தாள்
1960ல் வெளியான திரைப்படம் : பாவை விளக்கு
பாடல் ஆசிரியர் அ. மருதகாசி
நடிப்பு: சிவாஜிகணேசன் பாடியவர் சி.எஸ். ஜெயராமன்
2. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
1965ல் வெளியான படம் : இதய கமலம்
நடிப்பு : கே ஆர் விஜயா, ரவிச்சந்திரன்
பாடலைப் பாடியவர் பி.சுசீலா; பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்
3. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
கண்ட போதே சென்றன அங்கே
1964 வெளியான படம் : கர்ணன் பாடியவர் பி.சுசீலா
பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜிகணேசன், தேவிகா
4. காத்திருந்த கண்களே கதை அளந்த நெஞ்சமே
1966ல் வெளியான படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை
பாடலாசிரியர் வாலி
பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
5. கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ?
படம்: களத்தூர் கண்ணம்மா 1960ல் வெளியானது.
நடிப்பு சாவித்திரி; ஜெமினிகணேசன்
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்
பாடியது ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
பாடல் வரிகளைச் சொல்லியவாறே, பாடல் காட்சியை முழுவதுமாக, (யூடியூபில்) பார்த்தால் காதலர் தினம் இனிக்காதோ?
இது போன்ற ‘கண்ணான’ முதல் வரிசை 'டாப் டக்கர்' பாடல்கள் நூறு உண்டு இங்கு!
உங்களிடம்?