பெண்களே! வெட்கத்தை விடுங்கள்... அந்தரங்கப் பகுதியில் இந்த மாற்றங்கள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்!

Women consulting a doctor
Vulvar dermatosis
Updated on
Mangayar malar strip
Mangayar malar strip

பெண்களின் உடல் ஆரோக்கியம் பற்றி எடுத்துக் கொண்டால், பெரும்பாலும் பேசப்படாமல் விடப்படும் ஒரு முக்கியமான பகுதி 'வல்வா' எனப்படும் பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதியாகும். அந்தப் பகுதியில் ஏற்படும் நீடித்த சருமப் பிரச்னைகளான அரிப்பு, எரிச்சல், வலி, சிவத்தல் சரும நிற மாற்றம், புண்கள், சரும தடிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் தோன்றும் தொகுப்பே வல்வார் டர்மடோசிஸ் (Vulvar dermatosis) எனப்படும்.

சில பெண்களுக்கு இவை லேசாக இருக்கலாம். சிலருக்கு தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம். சரும அலர்ஜி, பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகள், சோப்பு, திரவசோப்புகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை இப்பிரச்னைக்கு முக்கிய காரணங்கள்.

அரிதான சில சந்தர்ப்பங்களில் கேன்சரின் அறிகுறியாகவும் இது மாறலாம். பல பெண்கள் இந்த அறிகுறிகளை சாதாரண அரிப்பு என நினைக்கலாம் அல்லது கூச்சம் காரணமாக மருத்துவரை அணுகுவதில் கால தாமதம் செய்யலாம். சிகிச்சை தாமதமானால் நீடித்த வலி, தாம்பத்திய உறவில் சிக்கல், மன அழுத்தம் அன்றாட செயல்பாடுகளில் பிரச்னைகள் ஏற்படலாம்.

ஆரம்பகால அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றால் வல்வா டர்மடோசிஸ் பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியும்.

இதற்கு சரியான மருந்துகள் சருமப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதும், அறிகுறிகளை அதிகப்படுத்தும் காரணிகளை கண்டறிந்து தவிர்ப்பதும், முறையான மனநல ஆலோசனைகள் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதும் அவசியமாகும். வல்வா ஆரோக்கியம் என்பது பெண்களின் முழுமையான ஆரோக்கியத்தின் ஓர் அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவான சுகாதாரம்

அந்த இடத்தில் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கலாம். சுத்தமான நீரால் கழுவினால், போதுமானது. நம் வாயின் உட்பகுதி மற்றும் வால்வா பகுதியும் ஒரே மாதிரியான மென்மையான சருமம் கொண்டவை. எனவே, முடிந்தவரை ஹேர் ரிமூவர் பயன்படுத்தக்கூடாது. கட்டாயம் என்றால் அலர்ஜி பரிசோதனை செய்து எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! Diet என்பது பட்டினி கிடப்பதல்ல! உங்கள் தட்டை 80/20 விதியில் மாற்றிப் பாருங்கள்!
Women consulting a doctor

எல்லா அரிப்புக்கும் ஒரே கிரீம் உபயோகிக்க கூடாது. அவரவரின் சருமத்தன்மை பிரச்னைக்கு ஏற்ப டாக்டர் பரிந்துரைத்த கிரீம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மன அழுத்தம் இதற்கு முக்கியமான காரணமாகும். எந்த வயதிலும் இந்த பிரச்சனை வரலாம். எனவே, சருமத்தை சுகாதாரமாக பராமரிப்பது முக்கியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com