உணவில் இந்த ஐந்து பொருட்களை குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும்!

உணவில் இந்த ஐந்து பொருட்களை குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும்!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போதுள்ள பெரும் பிரச்னை உடல் பருமன்தான். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லை என்றால் உடல் எடையைக் குறைப்பது சாத்தியமில்லை. கீழே உள்ள ஐந்து உணவுப் பொருட்களை தினசரி உணவில் வெகுவாகக் குறைத்தாலே உடல் பருமனை விரைவில் குறைத்துவிடலாம்.

1. வெள்ளை உப்பு: வேதிப்பொருட்கள் கலந்து செய்யப்படும் வெள்ளை உப்பை மிகக் குறைந்த அளவே உணவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த அழுத்தத்துக்கு வழி வகுக்கும். உடல் பருமன் உள்ளவர்கள் மோர், தயிர் போன்றவற்றில் உப்பு சேர்த்துக் கொள்ளவே கூடாது. ஊறுகாயை தொடவே கூடாது.

2. வெள்ளை சர்க்கரை: உடல் எடை அதிகரிப்பில் வெள்ளை சர்க்கரை முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து விட்டு, நாட்டு சர்க்கரையை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக வெள்ளை சர்க்கரை சேர்த்துக்கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி சர்க்கரை நோய் வருகிறது.

3. வெள்ளை சாதம்: கார்போஹைட்ரேட் நிரம்பிய வெள்ளை சாதம் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோய்க்கும் இதுவே முக்கியக்காரணி. எனவே, குறைவான அளவு சாதம் எடுத்துக்கொண்டு காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.

4. எண்ணெய்: எந்த வகை எண்ணெய் பயன்படுத்தினாலும் குறைந்த அளவு எண்ணெயே உபயோகிக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஒரு முழு நாளைக்கும் போதுமானது. நிறைய எண்ணெய் உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு வழி வகுக்கும்.

5. மைதா: இதய நோய்க்கு இட்டுச் செல்லும் மைதா சேர்த்த உணவுகளை ஒதுக்குவது நன்று. மைதாவால் செய்யப்படும் பரோட்டா, பேக்கரி உணவுகளான பப்ஸ், சமோசா, இவற்றை வருடத்தில் சில முறை மட்டுமே உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com