உடலை ‘ட்ரிம்’மாக வைக்க இனி ஜிம்முக்கு போக வேண்டாம்; இதை செய்தாலே போதும்!

உடலை ‘ட்ரிம்’மாக வைக்க இனி ஜிம்முக்கு போக வேண்டாம்; இதை செய்தாலே போதும்!

டலை 'டிரிம்'மாக வைத்திருக்க காசு பணம் செலவழித்து ஜிம்முக்குப் போகவோ, உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்ளவோ தேவையில்லை. அதோடு, உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கக்கூடத் தேவையில்லை. நினைத்த போதெல்லாம் எளிய அசைவுகளைச் செய்தே உடம்பை சௌக்கியமாக வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடமாட முடியும்.

அலுவலகத்தில் பொழுது போகாதபோது கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தவாறு முழங்கால்களை இறுக்கிக் கட்டிக்கொள்வது, தான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியைத் தூக்க முயலுவது, கனமான கட்டையை வளைக்க முயற்சி செய்வது,  டென்னிஸ் பந்தைக் கையால் நசுக்குவது,  நுனிக்காலால் மேஜையைத் தூக்க முயலுவது போன்ற செயல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றையெல்லாம் மிக மிக மெதுவாகத்தான் செய்ய வேண்டும். வலது கையால் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட இடது கையால் பந்தைக் கசக்கவோ,  நாற்காலியைத் தூக்கவோ முயற்சிக்கலாம். அலுவலகத்தில் வேலை செய்கிறபோது நாற்காலியில் புளி மூட்டை மாதிரி உட்கார்ந்திராமல் வளைவது,, முறுக்குவது, அவ்வப்போது எழுந்து நடப்பது என்று ஏதாவது செய்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் செய்யப்போகும் கிரிக்கெட் வீரர் விக்கெட்டுக்கு அருகில் போய் நின்றுகொண்டு உடம்பை அப்படியும் இப்படியுமாக வளைப்பதைப் பார்த்திருப்பீர்கள். நாமும் அதேபோலச் செய்வது உடம்பிலிருக்கும் பிடிப்புகளையும் இறுக்கத்தையும் போக்க உதவும். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நடன அசைவுகளை முடிந்தவரை பின்பற்றி ஆடுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கும். இவற்றையெல்லாம் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெட்கப்படாமல் செய்ய வேண்டும் என்பதுதான் இதில் முக்கியம்.

உடல் நலமாயிருப்பதை அளவிடச் சமநிலை மிகவும் உபயோகமான அளவுகோல். கண்களை மூடிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்பது, அப்படியே கைகளை மேலும் கீழும் அசைப்பது, ரயில் தண்டவாளத்தில் நடப்பது போன்ற பயிற்சிகள் நமது கை, கால்களைக் கட்டுப்படுத்த உதவும். தடுக்கி அல்லது தடுமாறி விழுந்து அடிபட்டுக்கொள்ளும் வாய்ப்புகளையும் குறைக்கும். வீட்டின் ஹாலில் ஒரு நீண்ட நேர்க்கோட்டை வரைந்து அதன்மேல் நடந்தும் பழகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com