

2027 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சற்றுமுன் வெளியிட்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
வழககமான நடைமுறைப்படி அக்டோபர் மாதத்தில் தான் பொதுத்தேர்வு கால அடடவணை வெளியாகும். கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. கடந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சற்று கால தாமதமாக நவம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தமையால், முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
2027 ஆம் ஆண்டு பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியாவதால், தேர்வுக்கு மாணவர்கள் தயாராக அதிக நாட்கள் கிடைக்கும். மேலும் இன்று முதல் மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி என்ற இலக்கை நோக்கியே பயணிப்பார்கள். மாணவர்களின் இந்த பயணத்தில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் அதிகம்.
10-ம் வகுப்பு மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 12-ல் முடிகிறது.
பிப்ரவரி 19 முதல் 26 வரை 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடக்கும்.
மார்ச் 5-ல் 11-ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது.
12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3-ல் தொடங்குகிறது.
10-ம் வகுப்பு தேர்வு தேதிகள்:
தமிழ் 17.03.2027
ஆங்கிலம் 25.03.2027
கணிதம் 31.03.2027
அறிவியல் 05.04.2027
சமூக அறிவியல் 09.04.2027
12-ம் வகுப்பு தேர்வுகள்:
தமிழ் 03.03.2027
ஆங்கிலம் 08.03.2027
வேதியியல், கணக்கியல், புவியியல் - 12.03.2027
கணினி அறிவியல், உயிரி வேதியியல் - 15.03.2027
உயிரியியல், தாவரவியல், வரலாறு - 19.03.2027
இயற்பியல், பொருளியல் - 23.03.2027
கணிதம்,விலங்கியல் வணிகவியர் - 29.03.2027