

இன்று (அக்டோபர் 14) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.760 குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,320 குறைந்துள்ளது. இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.1,560 குறைந்தது. ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் 2 முறை குறைந்த தங்கம் விலை, நேற்றும் குறைந்தது.
தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சரிவு தொடரும் பட்சத்தில் இந்த மாதத்திலேயே ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழே வரவும் வாய்ப்புள்ளது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 13) 1 கிராம் தங்கம் ரூ.35 குறைந்து, ரூ.13,685-க்கும், ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.1,09,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் நேற்றும் மாற்றமின்றி ரூ.245-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 14) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.95 குறைந்து ரூ.13,590-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 குறைந்து, ரூ.1,08,720-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.
2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்த போது, மேலும் விலை உயரும் என பலரும் முதலீடு செய்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் உயரவில்லை. மாறாக சரிவை நோக்கியே செல்கிறது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் வெள்ளி ஒரு கிராம் ரூ.600 வரை உயரும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது உச்சபட்ச விலையில் இருந்து 50% சரிந்துள்ளது. அதேபோல் தான் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக உயரும் என சொல்லப்பட்டது. தற்போது ரூ.1 லட்சத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது.
இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், சாமானிய மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது. இருப்பினும் தற்போதைய சரிவு நிரந்தரம் அல்ல. சர்வதேச போர்ச் சூழல் மற்றும் போர் நிலவரங்களைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரும்.
பொருளாதார வல்லுநர்களும், நகைக்கடை வியாபாரிகளும் தங்கம் விலை உயரும் என்றே சொல்லி வருகின்றனர். ஆகையால் விலை குறைகிறது; இன்னும் குறையும் எனக் காத்திருக்காமல் தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்கி விடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.